நவீன உலகில் தற்பொழுது அனைத்து சாதனங்களும் இணையத்துடன் இணைக்க பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது Smart TV Scam ஸ்மார்ட் டிவியில் உள்ளது. மோசடி செய்பவர்கள் தற்போது பெரும்பாலும் இணையத்தின் வாயிலாக அனைத்தையும் செய்கின்றனர்.ஸ்மார்ட் டிவி மூலம் பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை திருடுகின்றனர்.
ஸ்மார்ட் டிவி மூலம் நடக்கும் மோசடிகள் தற்பொழுது அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றனர்.
ஸ்ட்ரீமிங் சேவைகள் மூலம் சினிமா,இணைய தொடர்கள் Netflix, Amazon prime, Hotstar, பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனை மனதில் வைத்து மோசடி செய்பவர்கள் அந்த செயலிகள் போலவே இணையதளங்களை உருவாக்கி URL கள் மூலம் பயனர்களை ஏமாற்றுகின்றனர்.
ஒரே நேரத்தில் இனி 4 சாதனத்தில் WhatsApp! இது ஆபத்தானதா அல்ல பாதுகாப்பானதா?
அதன் மூலம் பயனர்களிடம் சில popup விளம்பரங்கள் மூலமாக ஒரு சில சலுகை விலைகள் அல்லது கட்டணம் செலுத்தும்படி, விளம்பரம் செய்து பயனர்களிடம் பணத்தை ஏமாற்றுகின்றனர்.
பலர் ஸ்மார்ட் டிவிகள் வாங்க அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.ஏனென்றால் ஸ்மார்ட் டிவி மூலம் பல வகையான இணையதள செயலிகள், மற்றும் தொடர்கள் பார்க்க முடியும்.மேலும் பல்வேறு வகையான அம்சங்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் எளிமையாக தேவையான அனைத்து பொழுதுபோக்கு web series நிகழ்ச்சிகளையும் கண்டு களிக்கின்றனர்.
ஆனால் இது ஹேக் செய்வதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது என்பதை பலரும் அறிவது இல்லை.அதில் இருந்து விழிப்புணர்வோடு இருந்து ஒரு சில வழிகளை பின்பற்றுவதன் மூலம் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.
நாம் ஸ்மார்ட் டிவி பாதுகாப்பாக பயன்படுத்துவதன் முக்கியத்துவம்..?
ஸ்மார்ட் டிவி ல் பல நன்மைகள் இருந்தாலும் அவற்றில் தீமைகளும் உள்ளன.இணையத்தின் வளர்ச்சி நம்மை மேலும் ஆபத்தை அதிகரிக்க செய்கிறது.ஸ்மார்ட் டிவி ஹேக் Hack செய்யப்படும் பொழுது அதன் மூலம் நம்முடைய பணம் மற்றும் இல்லாமல் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள், மேலும் அந்தரங்க விஷயங்கள் வெளியில் கசிந்து நமக்கு பெரிய ஆபத்துகளை உண்டாக்கலாம்.எனவே முடிந்தவரை ஸ்மார்ட் டிவி பாதுகாப்பாக பயன்படுத்துவது நல்லது.
ஸ்மார்ட் டிவி ஹேக் செய்யப்பட்டால் தொலைக்காட்சியில் சேமித்து வைத்துள்ள கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு எண்கள் போன்ற தகவல்களை திருடிவிடுவார்கள்.இவற்றில் இருந்து பாதுகாக்க சில வழிகள் உள்ளது, அதை அறிந்து ஸ்மார்ட் டிவி பயன்படுத்த வேண்டும்.
ஸ்மார்ட் டிவியைப் பாதுகாப்பதற்கான வழிகள்:
நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் டிவிகள் பெரும்பாலும் Android இயங்குதளத்தில் தான் இயங்கும்.அவற்றில் பெரும்பாலான ஸ்மார்ட் டிவிகள் பாதுகாப்பு விஷயத்தில் மோசமாக உள்ளன.கீழ் வரும் வழிகளை பின்பற்றுவதன் மூலம் அவற்றில் இருந்து உங்கள் டிவியை பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.
Telegram BOT எவ்வாறு செயல்படுகிறது..? சில பயனுள்ள Telegram Bot கள்
உங்கள் ஸ்மார்ட் டிவியின் ஃபார்ம் வேரைப் புதுப்பிக்கவும்:
உங்கள் ஸ்மார்ட் டிவிக்கு ஒரு அவ்வப்பொழுது Firmware update வழங்கப்படும்.அதை update செய்துகொள்ளுங்கள்,எந்தவொரு காரணத்திற்காகவும் அதனை அப்டேட் செய்யாமல் இருக்காதீர்கள்.இவ்வாறு update செய்யும் பொழுது அவை உங்கள் ஸ்மார்ட் டிவி பாதுகாப்பை இன்னும் பலமாக்கும்.
Update செய்வதை தானாக update ஆகும்படி வைத்துக்கொள்ளுங்கள், ஏனெனில் நீங்கள் update செய்ய மறந்துவிட்டாலும். தானாக update செய்துகொள்ளும்.அவை தானாக செயல்பட்டு உங்கள் ஸ்மார்ட் டிவி பாதுகாப்பாக செயல்படுவதை உறுதி செய்யும்.
வங்கி பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம்:
உங்கள் ஸ்மார்ட் டிவியை எந்த காரணத்திற்காகவும் வாங்கி பரிவர்தனைகளுக்கு பயன்படுத்தாதீர்கள். டிவி இணையத்துடன் இணைக்க பட்டுள்ளது. அவை ஹேக் செய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில வங்கிகள் ஸ்மார்ட் டிவி மூலம் பயன்படுத்த அனுமதித்தாலும், அதை தவிர்த்து கொள்வது சிறந்தது. அதற்கு பதில் நீங்கள் வாங்கி பரிவர்த்தனைகளை உங்கள் கணினி மூலம் மேற்கொள்ளலாம்.
VPN ஐப் பயன்படுத்தவும்:
உங்கள் ஸ்மார்ட் டிவி இல் VPN பயன்படுத்துங்கள்.அது உங்கள் ஸ்மார்ட் டிவி பயன்பாட்டை பாதுகாப்பாக உணர செய்யும், VPN பயன்படுத்தும் பொழுது அது உங்கள் ஸ்மார்ட் டிவி IP முகவரியை மறைத்து மற்றொரு முகவரி போல் மாற்றி காட்டும். ஆதலால் உங்கள் இருப்பிடத் தகவல்களை ஹேக்கர்கள் அறிந்துகொள்ள முடியாது.அரசாங்கம் அல்லது பிற நிறுவனங்கள் உங்கள் இருப்பிட தகவல்கள் தனிப்பட்ட சான்றுகளை உளவு பார்க்க முடியாது.
அதிகாரப்பூர்வ பயன்பாடுகளை மட்டும் பயன்படுத்தவும்:
உங்கள் ஸ்மார்ட் டிவியில் எப்பொழுதும் அதன் அதிகாரபூர்வ தளங்களின் மூலம் வரும் சலுகைகள் மட்டும் பயன்படுத்துங்கள். PLAY STORE தவிர்த்து மற்ற தளங்களில் அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்யாதீர்கள்.இணையத்தில் ஏதேனும் சலுகை விளம்பரங்கள் அல்லது பிற இலவச சேவைகள் குறித்து ஏதேனும் பார்த்து அதன் மூலம் இணையதளங்கள் பயன்படுத்தாதீர்கள். நீங்கள் விரும்பும் சேவைகளை பெறுவதற்கு உங்களிடம் அதற்கான பணம் இருந்தால் அதை செலுத்தி பெற்று பயன்படுத்துங்கள். அவ்வாறில்லாமல் இலவசமாகவோ அல்லது சலுகைகளில் உங்கள் சேவையை பெற்றால், அதில் கண்டிப்பாக ஏதேனும் பெரிய ஆபத்துகள் காத்திருக்கும், என்பதை மறவாதீர்கள்.
Camera மற்றும் Microphone முடக்கு:
பல ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் உள்ளமைக்கப்பட்ட கேமராக்கள் மற்றும் மைக்ரோஃபோன் களுடன் வருகின்றன.இது ஒரு துரதிர்ஷ்டவசமான பாதுகாப்பு அபாயமாகும், ஏனெனில் அவை உங்களை உளவு பார்க்க பயன்படுத்தப்படலாம்.அதை அறிந்து அவற்றை முடக்கம் செய்து விடுங்கள்.கேமரா மற்றும் மைக்ரோஃபோன் பெரும்பாலும் பயன்படுத்த மாட்டோம் தேவையான நேரங்களில் அதை பயன்படுத்திவிட்டு முடக்கிவிடுங்கள்.
இணையத்தை முடக்கு:
இணையத்தின் மூலம் பெரும்பாலான ஹேக் நடைபெறுகிறது. ஸ்மார்ட் டிவியில் தேவையான நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் இணையத்தை அனைத்து வைத்துக்கொள்ளுங்கள். அவை உங்கள் ஸ்மார்ட் டிவி பாதுகாப்பாக பயன்படுத்த வழிவகுக்கிறது.
டிவியை ஸ்கேன் செய்யவும்:
ஸ்மார்ட் டிவி மூலம் பல்வேறு பயன்பாடுகளை மேற்கொள்கிறோம். மேலும் பல தரவுகளை பார்க்கிறோம். பயன்படுத்துகிறோம்.எனவே உங்கள் ஸ்மார்ட் டிவியை எப்பொழுதும் புதுப்பித்த வைரஸ் தடுப்புகளை வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை அதை முறையாக புதுப்பித்துக் கொள்ளுங்கள். அது உங்கள் தகவல்கள் வைரஸ் மூலம் ஹேக் அல்லது பாதிப்படையாமல் பாதுகாக்கும்.
How to write Youtube video script..? | Youtube video எடுப்பதற்கு ஸ்கிரிப்ட் எவ்வாறு எழுத வேண்டும்..?
Smart TV Hack செய்யப்பட்டிருந்தால் எவ்வாறு சரி செய்வது..?
யாராவது தங்கள் தொலைக்காட்சி வைரஸ் அல்லது ஹேக் ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக எண்ணினால், அதை எவ்வாறு அகற்றுவது என்று தெரியவில்லை என்றால், இங்கே சில வழிகள் குறிப்பிட்டுள்ளோம் அதனை பின்பற்றுங்கள் :
தொலைக்காட்சியின் அடிப்படையாக கொடுக்கப்பட்ட அமைப்புகளைச் சரிபார்க்கவும். அதில் ஏதேனும் சிறிய மாற்றங்கள் இருக்கிறதா என்று கவனமாக கண்காணிக்கவும்.
VPN பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.செய்து அதனை பயன்படுத்துங்கள்
வைரஸ் தடுப்பு அப்ளிகேசன் பதிவிறக்கவும்.
டிவியை அணைத்து, கேபிள்கள் அல்லது வயர்லெஸ் இணைப்புகளை அகற்றி, குறைந்தபட்சம் 10 நிமிடங்களுக்கு அதை அவிழ்த்து விடுங்கள்.
டிவியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பயன்பாடுகளை முழுவதுமாக அழித்து விடுங்கள்.
தொலைக்காட்சியை முழுவதும் FACTORY RESET செய்துவிடுங்கள்.
மேற்கூறிய வழிகளை பின்பற்றி உங்கள் ஸ்மார்ட் டிவியை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்,என்னதான் நீங்கள் பல வழிகளை பயன்படுத்தினாலும் ஒரு சில நேரங்களில் உங்களை அறியாமல் ஏதேனும் தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது.ஆதலால் முடிந்த வரை முக்கியமான தகவல்களை உங்கள் ஸ்மார்ட் டிவியில் சேமிக்காதீர்கள் அல்லது அதனுடன் இணைத்து வைக்காதீர்கள்.
Links 1
Telegram Group இல் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படிக்க : டெலிகிராம் மூலம் வருமானம் பெறுவது எப்படி...?
படிக்க: WhatsApp pink update குறித்து பரவும் ஆபத்தான வதந்திகள் எச்சரிக்கை..?
படிக்க : Telegram Application குறித்து நாம் அறிந்திராத அம்சங்கள்..!
படிக்க : இன்ஸ்டாகிராமில் உங்கள் followers எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி..?
படிக்க : ஏன் அனைத்து ஸ்மார்ட்போன்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி வடிவமைப்பை கொண்டுள்ளது...?
படிக்க : பலருக்கும் தெரியாத 15 பயனுள்ள இணையதளங்கள்
Post a Comment