பலருக்கும் தெரியாத 15 பயனுள்ள இணையதளங்கள் | Unknown useful websites



பலருக்கும் தெரியாத 15 பயனுள்ள இணையதளங்கள் | 15 Usefull websites


இணையதளங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.ஸ்மார்ட்போனில் அனைத்து இணையதளங்களையும் பயன்படுத்தலாம்.ஆன்லைனில் இலவசமாக பயன்படுத்த பல Best websites இணையதளங்கள் உள்ளன.ஆனால் நாம் சில குறிப்பிட்ட இணையதளங்களை மட்டுமே பயன்படுத்துவோம்.நம்முடைய சொந்த மற்றும் பணிகள் சார்ந்த வேலைகள் இணையதளத்தின் உதவிகொண்டு எளிமையாக செய்ய முடியும்.நமக்கு தெரியாத பல பயனுள்ள இணையதளங்கள் உள்ளன.அவற்றை இந்த பதிவில் காணலாம்.



REMOVE.BG 


Remove.bg என்ற இணையதளம் மூலம் நம்முடைய Photo Background அழிக்க முடியும்.இந்த இணையத்தளத்தில் உங்களுடைய புகைப்படத்தை பதிவேற்றி எளிமையாக Background அழிக்கலாம்.மேலும் இதனை இலவசமாக செய்யலாம்.இந்த இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள் 




FAST.COM 


Fast.com இந்த இணையதளத்தின் மூலம் நீங்கள் பயன்படுத்தும் இணையத்தின் தற்போதைய வேகத்தை அறியலாம்.இந்த இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள் 


ஏன் அனைத்து ஸ்மார்ட்போன்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி வடிவமைப்பை கொண்டுள்ளது...?



ARCHIEVE.IS 


நாம் பயன்படுத்தும் இணையதளத்தின் பக்கங்களை சேமிக்க முடியாது.அவ்வாறு சேமித்தாலும் அதன் பக்கங்களை நிரந்தரமாக சேமிக்க முடியாது.archive.is என்ற இணையதளத்தின் மூலம் நமக்கு தேவையான இணையதளங்கள் பக்கங்களை நிரந்தரமாக சேமிக்க முடியும். உரிமையாளர் அந்த பக்கங்களை அழித்தாலும் சேமிக்க முடியும்.இந்த இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள் 




REVERSE.PHOTO


Reverse.photo இந்த இணையதளத்தில் ஏதேனும் போட்டோ பதிவேற்றி அதே போலவே இணையதளத்தில் உள்ள போட்டோக்கள் பார்க்க முடியும்.இந்த இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள் 





COURSESITY


ஆன்லைனில் சான்றிதழுடன் படிப்புகள் இலவசமாக படிப்பதற்கு பல தளங்களில் உள்ளது.அவற்றில் ஒன்றுதான் Coursesity இந்த தளத்தில் 50000 க்கும் மேற்பட்ட இலவச படிப்புகள் சான்றிதலுடன் கிடைக்கிறது.நம்முடைய ஓய்வு நேரத்தில் பிடித்தமான படிப்பை தேர்வு செய்து படிக்கலாம்.இந்த இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள் 



நம்முடைய mobile hack செய்ய பட்டுள்ளதா தெரிந்து கொள்ள சில வழிகள்..? | How to check my mobile is hacked



CALLIGRAPHR


உங்களுக்கு எழுத்துக்களை வித்தியாசமாக எழுதும் திறமை இருந்தால் அவ்வாறு எழுதி அதனை,இந்த தளத்தின் மூலம் நீங்கள் எழுதும் எழுத்துக்களை FONT ஆக மாற்ற முடியும்.இந்த இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள் 




WETRANSFER.COM 


பெரிய தரவுகளை (FILE)யாருக்கேனும் அனுப்ப வேண்டி இருந்தால் இந்த தளத்தின் மூலம் எளிமையாக அனுப்பலாம்.இந்த தளத்தில் பதிவேற்றம் செய்து அந்த பதிவிற்கான link பெறவேண்டியவர்க்கு அனுப்பினால் போதும் அந்த link மூலம் அந்த தரவை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இந்த இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள் 






GRAMMARLY


நீங்கள் ஈமெயில் அல்லது கட்டுரை எழுதும் போது அதில் ஏதேனும் Grammar தவறுகள்

இருந்தால் இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும் google chrome extension மூலம் நீங்கள் Chrome இல் எந்த இடத்தில் Type செய்தாலும் அதில் ஏதேனும் Grammar / Spelling தவறு இருந்தால் உடனடியாக சரி செய்யலாம்.இந்த இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள் 




CANVA


Canva தளத்தின் மூலம் உங்கள் தனிப்பட்ட பதிவுகள் அல்லது வியாபாரம் சார்ந்த  விளம்பரங்கள் உருவாக்கலாம்.மேலும் சமூக வலைதள பதிவுகள் உருவாக்கலாம்.இதில் விளம்பர பதிவுகள, அறிவிப்புகள்,இன்னும் பலவிதமான பதிவுகளை உருவாக்கலாம்.Canva மொபைல் செயலி Google Playstore இல் கிடைக்கிறது.இந்த இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள் 

 



EARTH.NULLSCHOOL.NET 


இந்த தளத்தில் தற்பொழுது உள்ள வானிலை (காற்று,கடல் அலைகள்,வெப்ப அளவு) சூழ்நிலையை அனிமேஷனாக பார்க்கலாம்.நாம் விரும்பும் பகுதியை தேர்ந்தெடுத்து.அந்த இடத்தின் வானிலையை அனிமேஷனாக தெரிந்துகொள்ளலாம். இந்த இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள் 




FOTOFORENSICS


நீங்கள் இந்த தளத்தில் ஏதேனும் போட்டோ அப்லோட் செய்து அது போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.இந்த இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்




NATURAL READERS 


இந்த தளத்தில் நீங்கள் படிக்க விரும்பும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை COPY செய்து இந்த தளத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் PASTE செய்வதன் மூலம் அதை VOICE ஆக படித்துக் காட்டும்.இந்த இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்




RADIO GARDEN 


உலகில் உள்ள அனைத்து பகுதியின் ரேடியோ சேனல்கள்  இந்த தளத்தின் மூலம் கேக்கலாம்.இந்த இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்




WINDOW-SWAP 


உலகில் உள்ள அழகான வீடுகளின் ஜன்னல் பகுதியில் இருந்து பார்க்கும் காட்சியை இந்த தளத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை காணலாம்.இவை சாதாரணமாக தோன்றினாலும் பார்க்கும் பொழுது அழகான காட்சியாக உள்ளது.இந்த இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்




PHOTOPEA 


இந்த தளத்தில் PHOTOSHOP SOFTWARE இல் உள்ள அனைத்து அம்சங்களும் உள்ளன.இதனை  இலவசமாக பயன்படுத்தலாம்.இந்த இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்





ASOFTMURMUR 


வெளிப்புறங்களில் நாம் அன்றாடம் கேட்கும் ஒலிகளை இந்த தளத்தில் இலவசமாக கேக்கலாம்.மேலும் அவற்றை ஒன்றோடு ஒன்று சேர்த்தும் ஒரே நேரத்தில் கேட்க முடியும்.எ/கா காற்றோடு சேர்த்து இடி மின்னல் ஒலிகளை நாம் சேர்த்து கொள்ளலாம்.அதோடு பறவைகள் சத்தம்,அருவி,நகர் புறம் வாகன சத்தங்கள் போன்ற பல ஒலிகள் கேட்கலாம.UPGRADE செய்வதன் மூலம் மேலும் பல ஒலிகளை கேட்கமுடியும் அவற்றை பதிவிறக்கம் செய்யலாம்.இந்த இணையதளத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்



Post a Comment

Previous Post Next Post