பலருக்கும் தெரியாத டெலிகிராம் 10 அம்சங்கள் | 10 Cool Telegram Features

பலருக்கும் தெரியாத டெலிகிராம் 10 அம்சங்கள்


டெலிகிராம் Telegram App செயலி அனைவரிடத்திலும் தற்பொழுது மிகவும் பிரபலமாகி வருகிறது.டெலிகிராம் செயலி 500 மில்லியன் பயனர்களுக்கு அதிகமாக கொண்டுள்ளது.

வாட்ஸ்அப் WhatsApp privacy policy இன் பிரைவசி பாலிசி மாற்றத்திற்கு முன்பிருந்தே டெலிகிராம் செயலி பிரபலமடைந்தது. தற்பொழுது மேலும் பல பயனர்கள் டெலிகிராமில் இணைந்து வருகின்றனர். 

வாட்ஸ்அப் செயலியை விட டெலிகிராமில் பல அம்சங்களும் உள்ளது. அவற்றில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் பலருக்குத் தெரியாமலேயே உள்ளது. அத்தகைய அம்சங்களை இப்பதிவில் காண்போம்.

சாட் போல்டர்ஸ் (chat folders)


Telegram சாட் போல்டர்ஸ் அம்சம் மிகச் சிறந்த அம்சம் ஆகும் ஏனென்றால் நம்முடைய சாட் பகுதியில் பல்வேறு வகையான உரையாடல்கள் இருக்கும். அவற்றில் தேவையானவற்றை தேடுவது சிரமம். 

குரூப் மெசேஜ், பிரைவேட் மெசேஜ்,சேனல்ஸ் போன்ற பல்வேறு உரையாடல்கள் இருக்கும். அவற்றை இந்த சாட் போல்டர்ஸ் அம்சத்தின் மூலம் தனித்தனியாக வகைப்படுத்தலாம் மேலும் நம்முடைய உரையாடல்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். 

மேலும் நமக்கு தேவையான வகையில் போல்டர்களை கிரியேட் செய்து நம்முடைய உரையாடல்களை வகைப்படுத்தலாம். இதன் மூலம் பர்சனல், வொர்க், குரூப்ஸ் என்று உரையாடல்களை வகைப்படுத்திக் கொள்ளலாம். அவற்றை பயன்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கும்.




நம்மை சுற்றி இருக்கும் டெலிகிராம் பயனர்களிடம் பேச முடியும்.


கடந்த வருடம் டெலிகிராம்  இந்த புதிய வசதியை கொண்டு வந்தது இதன் மூலம் நம் அருகில் இருப்பவர்கள் டெலிகிராம் பயன்படுத்தினால் இந்த அம்சத்தின் மூலம் அவர்களை தொடர்பு கொள்ள முடியும், 

மேலும் அவர்களை ஒன்று சேர்த்து குரூப் உருவாக்கவும் முடியும். இதில் நம்முடைய மொபைல் எண் பகிராமல் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் ஏதேனும் கலந்துரையாடல்கள் அல்லது விழாக்களுக்கு சென்றால்,

 இந்த அம்சத்தின் மூலம் அதனுடன் தொடர்புடைய குழுக்களை காண முடியும்.
இதனை பயன்படுத்த உங்களின் டெலிகிராம் செயலியில் Telegram app ' Menu ' தொகுப்பில் உள்ள 'Contacts' பகுதிக்கு சென்று "Find people nearby"என்ற பகுதியை செலக்ட் செய்து இந்த வசதிக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். எவ்வளவு தொலைவில் உள்ளார்கள் என்பதையும் காணலாம்.




அனுப்பிய மெசேஜை எடிட் செய்யும் வசதி


நாம் யாருக்காவது தவறாக அல்லது பிழையாக மெசேஜ் செய்து விட்டால் அதனை எடிட் செய்து அதனை சரி செய்து கொள்ளலாம். 

இதன் மூலம் நாம் அனுப்பிய மெசேஜ் தவறாக இருந்தால் சரி செய்ய முடியும் மேலும் இந்த அம்சம் மூலம் நாம் அனுப்பிய மெசேஜ் 48 மணி நேரம் வரை எடிட் செய்து கொள்ளலாம்.

அதனை பயன்படுத்த நாம் அனுப்பிய மெசேஜை செலக்ட் செய்து மேலே உள்ள பென் போன்ற அமைப்பை தொடுவதன் மூலம் சரி செய்து கொள்ளலாம். இவ்வாறு எடிட் செய்து அனுப்பிய மெசேஜ் "edited"என்ற குறியீட்டுடன் தோன்றும்.




சைலன்ட் மெசேஜ் அனுப்பலாம்


நம்முடைய நண்பர்களோ அல்லது உறவினர்களுக்கோ மெசேஜ் அனுப்ப வேண்டியிருக்கும் பொழுது அவர்கள் அந்த சமயத்தில் ஏதேனும் முக்கியமான கலந்துரையாடல்களில் இருந்தால்,

அவர்களுக்கு எந்தவித தொந்தரவும் அளிக்காத வண்ணம் அவர்களுக்கு மெசேஜ் செய்ய முடியும். மேலும் அவர்கள் சைலன்ட் அல்லது வைப்ரேட் மொடில் மொபைல் வைக்காத  போதிலும் இதனை அனுப்பலாம்.

இதனை பயன்படுத்த மெசேஜ் டைப் செய்துவிட்டு செண்ட் பட்டனை தொடர்ந்து அழுத்தி இருக்கும் பொழுது இந்த வசதி பெறலாம்.மேலும் இதே பகுதியில் scheduled மெசேஜ் வசதியையும் பயன்படுத்த முடியும், அதாவது நாம் ஒரு குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் ஒருவருக்கு மெசேஜ் செய்ய வேண்டியிருந்தால், இந்த அம்சத்தினை பயன்படுத்தலாம்.


+


 போட்டோ வீடியோக்களை குறிப்பிட்ட நேரத்தில் தானாக மறைய செய்யலாம்

நாம் மற்றவருக்கு அனுப்பும் போட்டோ மற்றும் வீடியோக்களை ஒரு குறிப்பிட்ட நேரம் அளவிற்கு செட் செய்து அந்த நேரத்திற்குப் பின் அதனை தானாக மறையச் செய்யலாம். 

இந்த அம்சம் முன்பு சீக்ரெட் சாட் பகுதியில் மட்டும் இருந்தது. தற்பொழுது பொது சாட் பகுதியிலும் பயன்படுத்தலாம். இதனை பயன்படுத்த நீங்கள் போட்டோ மற்றும் வீடியோக்களை அனுப்புவதற்கு முன்பு தொடுவதன் மூலம் நேரத்தை செட் செய்து கொள்ளலாம்.

போட்டோ வீடியோக்களை எடிட் செய்து கொள்ளலாம்
நாம் அனுப்பவேண்டிய போட்டோ மற்றும் வீடியோக்களை டெலிகிராம் செயலின் மூலம் மிக சிறந்த முறையில் எடிட் செய்து கொள்ளலாம். 

மேலும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அசையும் animated gif ஆக மாற்றிக்கொள்ளலாம்.இதனை பயன்படுத்த போட்டோக்களில் அனிமேட்டட் ஸ்டிக்கர்களை Add செய்வதன் மூலம் போட்டோக்கள் அசையும் gif ஆக மாற்றம் பெறும்.



நினைவூட்டல் (Reminder)


டெலிகிராமில் Saved messages பகுதியில் உள்ள மெசேஜ் களில் Reminder அதாவது நினைவூட்டல் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் இதன் மூலம் நாம் செட் செய்யும் தேதி மற்றும் நேரத்தில் நமக்கு அந்த செய்தியை நினைவூட்டுகிறது. கூகுள் காலண்டர் செயல்படுவது போல செயல்படுகிறது. டெலிகிராமில் இந்த வசதி இருப்பது நமக்குப் பெரிதும் பயன்படுகிறது.




ஸ்லோ மோட் (slow mode)

நம்முடைய குரூப் நண்பர்கள் சில சமயங்களில் காரசார விவாதங்கள் மேற்கொள்வார்கள், தொடர்ந்து பல மெசேஜ்களை அனுப்பிய வண்ணம் இருப்பார்கள் அத்தகைய சமயங்களில் இந்த ஸ்லோ மோட் வசதியை செயல்படுத்துவதன் மூலம் ஒருவர் தொடர்ந்து பல மெசேஜ்களை அனுப்ப இயலாது.

அதாவது ஒரு குறிப்பிட்ட நேரம் 15 வினாடிகள் செட் செய்யும் பொழுது ஒருவர் ஒரு மெசேஜ் அனுப்பிய பின்பு அடுத்த மெசேஜ் 15 வினாடிகளுக்கு பின்புதான் அனுப்ப முடியும்.இதன் மூலம் ஒருவர் தொடர்ந்து மெசேஜ்களை அனுப்புவதை தடுக்க முடியும் மேலும் மற்றவர்களும் தங்களது கருத்துக்களை சொல்வதற்கு அவகாசம் கொடுக்க முடியும்.




கருத்துக்கணிப்பு மற்றும் கேள்விகளை முன்வைக்கலாம்


நாம் ட்விட்டரில் Twitter poll அம்சத்தினை பயன்படுத்தி இருப்போம் அதேபோல் டெலிகிராமில் Telegram வசதி உள்ளது.ஒரு குறிப்பிட்ட செய்தி அல்லது விவாதங்களுக்கு அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு அதன்படி அனைவருடைய கருத்துக்கணிப்புகளை அறிய முடியும்,

எந்த கருத்துக்கு அதிகமான ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது என்பதை அறியமுடியும்.மேலும் கேள்விகளை கேட்கலாம்.அதற்கு அதிகமான பதில்களை பெற முடியும்.

இதன் மூலம் உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே அதிகமான கேள்விகளைக் கேட்டு அதற்கு வரும் பதில்களை வைத்து மதிப்பெண் அளிக்கலாம். இந்த அம்சத்தை செயல்படுத்த "attachment" பகுதிக்கு சென்று poll என்ற பகுதியை செலக்ட் செய்து question தேர்வு செய்து அதற்கான poll அல்லது quiz mode தேர்வு செய்யலாம்.




லைவ் லொகேஷன் ஷேர் செய்துகொள்ளலாம்.

வாட்ஸ் அப் செயலியில் இருப்பதுபோன்று டெலிகிராமிலும் Telegram live location லைவ் லொகேஷன் களை மற்றொருவருடன் ஷேர் செய்து கொள்ளலாம்.

இதனை 5 நிமிடம் முதல் 8 மணி நேரம் வரை செயலில் வைத்திருக்கலாம்.ஏதேனும் கூட்டத்திலோ அல்லது அதிகமான மக்கள் குடியிருக்கும் பகுதியில் செல்லும் போது நம்முடைய நண்பர்களுக்கு நம்முடைய இருப்பிடத்தை தெரிவிப்பதற்கு இந்த அம்சம் பயன்படுகிறது.

மேலும் இதன் மூலம் நம்முடைய நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் செல்லும் பொழுது நமக்கு எச்சரிக்கை செய்கிறது.நண்பர்களை கூட்டத்தில் துளைப்பதை தவிர்க்கலாம்.




நம்முடைய அனுமதி இல்லாமல் குரூப்பில் சேர்க்க செய்ய முடியாது


இந்த அம்சத்தின் மூலம் நம்முடைய அனுமதி இல்லாமல் டெலிகிராம் Telegram குரூப்களில் சேர்க்க முடியாது.டெலிகிராமில் எண்ணற்ற குரூப் மற்றும் சேனல்கள் உள்ளது. நம்முடைய அனுமதி இல்லாமல் நம்மை  குரூப்களில் சேர்க்க முடியும். அத்தகைய தேவையற்ற குரூப்களில்  நம்மை மற்றவர் சேர்ப்பதை தவிர்ப்பதற்கு.இந்த அம்சம் பெரிதும் பயன்படுகிறது.




மேலே குறிப்பிட்டது போன்று இன்னும் பல அம்சங்கள் டெலிகிராமில் செயலியில் அடங்கியுள்ளது. சாட் மெசேஜ்களை இழக்காமல் நம்பரை மாற்றலாம், 

ஒன்றுக்கு மேற்பட்ட அக்கௌன்ட்களை add செய்து கொள்ளலாம்.சீக்ரெட் சாட் செய்து கொள்ளலாம்,Photo video edit செய்துகொள்ளலாம்,வீடியோ போட்டோ தரம் குறையாமல் (without compress) அனுப்ப முடியும்.

Telegran web மூலம் மூலம் கணினியில் டெலிகிராமில் அனைத்துவிதமான அம்சங்களையும் பயன்படுத்தலாம்.Telegram app போன்றே அனைத்து அம்சமும் கிடைக்கும்.

Post a Comment

Previous Post Next Post