உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கவேண்டிய சிறந்த 10 அப்ளிகேஷன்கள் | Best mobile Applications

நம்முடைய ஸ்மார்ட்போனில் கண்டிப்பாக இருக்க வேண்டிய 10 பயனுள்ள அப்ளிகேஷன்கள்..


1.Telegram
2. Gboard
3. Google Maps
4. Google drive
5. Duolingo
6. Adobe scanner
7. Quora
8. Pocket
9. Google Docs
10. Snapseed

 Smartphone என்பது அனைவரிடத்திலும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நம்முடைய அன்றாட தேவைகள் அனைத்திற்கும் ஸ்மார்ட்போனில் Application மூலம் எளிமையாக பயன்படுத்திட பல அம்சங்கள் உள்ளது. Google playstore இல் 2.56 மில்லியன் Applications இருக்கிறது. இதில் வாட்ஸ்அப், பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர், அனைவராலும் அறியப்பட்டது. இவைகளைத் தவிர்த்து பல பயனுள்ள Applications கிடைக்கிறது.அவற்றில் நம்முடைய அன்றாட தேவைகளுக்கு எந்த எந்த அப்ளிகேஷன்கள் பயன்படும் என்பதை அறிந்து அவற்றை பயன்படுத்தி பல்வேறு வழிகளில் பயன்பெறலாம்.அன்றாட தேவைகளை எளிமையாக்கி கொள்ளலாம் இத்தகைய பயனுள்ள அப்ளிகேஷன்கள் இங்கே காணலாம்.



1.Telegram


Telegram தற்போது அனைவரும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.இதன் பயனாளர்கள் எண்ணிக்கை 500 மில்லியனை நெருங்குகிறது.டெலிகிராமில்  எக்கச்சக்க அம்சங்கள் உள்ளது. வாட்ஸ்அப் அப்ளிகேசனை தொடர்புபடுத்திப் பார்க்கும் பொழுது டெலிகிராமில் அதிகமான அம்சங்கள் கிடைக்கின்றன. photos,videos, audio,gif,documents,Groups, channels, secret chat,live locations,unlimited personal cloud storage,silent messages,reminders,chat bots, போன்ற பல அம்சங்கள் உள்ளது. இதில் 200000 வரை குரூப்பில் members Add செய்துகொள்ளலாம்.Movies போன்ற பெரிய பெரிய கோப்புகளை பரிமாறிக் கொள்ளலாம்.Personal Cloud storage வசதி இருப்பதால் நம்முடைய photos,videos,அனைத்தும்  பாதுகாக்கப்படுகிறது.Telegram features




2.Gboard keyboard


கூகுள் நிறுவனத்தின் Gboard keyboard Application இது பல்வேறு வகையான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. Emoji,Gif,Stickers,போன்ற அம்சங்கள் நாம் chat செய்யும் பொழுது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.மேலும் இதில் one hand mode,multiple themes,languages,glide typing,auto correction,voice typing, translation,floating keyboard, dictionary என பல அம்சங்கள் உள்ளது.இதில் நமக்கு விருப்பப்பட்ட மொழிகளை keys ஆக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இது பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் துரிதமாகவும் உள்ளது. இவற்றில் உள்ள வாய்ஸ் டைப்பிங் (voice typing) மூலம் நாம் பேசுவதை எளிமையாக டைப் செய்து கொள்ளலாம். மேலும் அதனை பல்வேறு மொழிகளிலும் மாற்றியமைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.




3. Google Maps


Google Maps application உலகில் உள்ள அனைத்து இருப்பிடங்கள் குறித்த விவரங்களை அளிக்கிறது. இதனை பயன்படுத்தி நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான முறையில் செல்வதற்கு வழி கூறுகிறது.மேலும் GPS உதவியின் மூலம் அருகிலுள்ள இடத்தை பற்றி விபரங்கள் முழுவதையும் அளிக்கிறது. நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை தேர்வு செய்தால் அங்கு செல்வதற்கு ஆகும் நேரம் மற்றும் வழியை துல்லியமாக காட்டுகிறது.நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை தேர்வு செய்துவிட்டு navigation  click  செய்தால் நீங்கள் தேர்வு செய்த இடத்தை அடையும்வரை அதற்கு வழி கூறிக்கொண்டே இருக்கும்.மேலும் நாம் எந்த இடத்தில இருக்கிறோம்,நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு உள்ள இடைவெளி,செல்ல எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் டிஸ்பிளேயில்  காட்டும்.அதிகமா பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த அப்ளிகேஷன் உதவியாக இருக்கும்.நீங்கள் செல்லவேண்டிய இடத்தின் முழுமையான Map டவுன்லோட் செய்துகொள்ளலாம் இதன் மூலம் இணையம் வசதி இல்லாமலே Offline இல் அதனை பயன்படுத்தி கொள்ளலாம்.



4. Google Drive


Google drive application, Google நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பு.உங்களுடைய போட்டோ,வீடியோ,ஆடியோ,மற்றும் பிற வகையான கோப்புகளை உங்களுடைய google account  மூலம்  google drive application இல் ஆன்லைனில் சேமித்து வைத்து கொள்ளலாம்.google drive 15 GB வரை இலவசமாக சேமித்து வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கிறது.இதில் $1.99 செலுத்தி  100GB வரையிலும், $9.99 செலுத்தி 1TB வரையிலும் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.நமக்கு தேவைப்படும் பொழுது ஆன்லைனில் இருந்து எளிமையாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.மேலும் நாம் சேமித்து வைத்த கோப்புகளை மற்ற நண்பர்களுடன் எளிமையாக பகிர்ந்து கொள்ளலாம்.இதில் சேமித்து வைக்கப்படும்.போட்டோ,வீடியோக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.



5. Duolingo


Duolingo Application புதிய மொழிகளை கற்றுக்கொள்ள உதவியாக உள்ளது.எழுத்துக்கள்,சொற்கள்,இலக்கணம்,அனைத்தையும் சிறிய சிறிய பாடங்களாக படித்துக்கொள்ளலாம்.தினமும் நாம்  free ah இருக்கும் நேரங்களில் இதனை படித்துக்கொள்ளலாம். தினமும் நாம் படிக்கவேண்டிய பாடங்கள் குறித்த அறிவிப்புகள் நமக்கு நோட்டிபிகேஷன் ஆக காட்டுகிறது.குறிப்பிட்ட நாள் இடைவெளியில் நாம் கற்ற பாடங்களில் இருந்து நமக்கு சிறிய சிறிய தேர்வுகளாக வைக்கப்படும். அதன்மூலம் நாம் கற்றதை தெளிவு படுத்தி கொள்ளலாம்.இதில் பல மொழிகள் உள்ளது நமக்குப் பிடித்த மொழியை தேர்வு செய்து இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.நேரத்தை மற்ற பொழுதுபோக்குகளில் செலவிடுவதற்கு இதனை பயன்படுத்தி ஒரு மொழியை கற்றுக்கொள்ளலாம்.



6. Adobe Scanner


Adobe நிறுவனத்தின் Adobe scanner application மூலம் நமது ஸ்மார்ட்போனிலேயே Documents எளிமையாக ஸ்கேன் செய்து அதனை எடிட் செய்து,PDF,JPEG,PNG, போன்ற வகைகளில் சேமித்து கொள்ளலாம்.Scan செய்த கோப்புகளை WhatsApp,Email,Telegram,போன்ற application களுக்கு எளிமையாக share செய்து கொள்ளலாம். நாம் scan செய்த கோப்புகள் application மற்றும் Adobe cloud தளத்திலும் சேமித்துக் கொள்ளலாம். Adobe cloud தளத்தை கணினியில் பயன்படுத்தி Scan செய்த கோப்புகளை எப்பொழுது வேண்டுமானாலும் எளிமையாக download செய்துக்கொள்ளலாம். இந்த அம்சங்கள் அனைத்தும் இலவசமாக கிடைக்கிறது.



7. Quora Application 


Quora Application இல் நமக்கு தெரியாத விஷயங்கள் பலவற்றை  இலவசமாக அறிந்து கொள்ளலாம்.நம்முடைய சந்தேகம் எதுவாக இருந்தாலும்.கேள்வியாக பதிவிடலாம் அதற்கு பதில் தெரிந்தவர்கள் பதில் அளிப்பார்கள்.ஒரு கேள்விக்கு யார் வேண்டுமானாலும் பதிலளிக்கலாம் அதே போல் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். பல துறைகளை சேர்ந்த வல்லுநர்களும் Quora Application பயன்படுத்துவதால் நிச்சயமாக கேள்விக்கான முழு விளக்கத்தையும் நாம் பெற முடியும். பல நாட்களாக நமக்குள் சந்தேகமாக இருந்த பல கேள்விகளுக்கும் இதில் முழுமையான விளக்கம் கிடைக்கும்.

ஃபேஸ்புக்,வாட்ஸ்அப், போன்ற அப்ளிகேஷனில் நேரம் செலவிடாமல் Quora Application பயன்படுத்தினால் உபயோகமாக இருக்கும்.



8. Pocket


Pocket Application வித்தியாசமான பயன்பாட்டை கொண்டுள்ளது அதாவது இணையதளத்தில் நாம் வேறு ஏதேனும் ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கும் போது நமக்கு பிடித்த புகைப்படங்கள் வீடியோக்கள் அல்லது ஏதேனும் கட்டுரைகள் வந்தால் அவற்றை பார்க்க படிக்க நேரமில்லை என்றால், இந்த application இல் சேமித்து வைத்துக்கொள்ளலாம் பின்பு நமக்கு நேரம் கிடைக்கும் பொழுது அதனை படித்துக் கொள்ளலாம். இது நமக்குப் பிடித்தமான பதிவுகளை தவற விடாமல் இருக்க உதவி செய்கிறது.


9.Google Docs


Google Docs Application அலுவலகப் பணியாளர்கள்,Bloggers,Story Writers போன்றவர்களுக்கு சிறந்த ஒரு அப்ளிகேஷன் ஆக இருக்கும். இதில் கட்டுரைகள் கதைகள் முதலியவற்றை எளிமையாக எழுதிக் கொள்ளலாம்.இதில் Ms-Word இல் உள்ள அனைத்து அம்சங்களும் இருக்கும்.அதை மொபைலில் பயன்படுத்துவதற்கும் எளிமையாக இருக்கும். நம்முடைய கட்டுரைகள் அனைத்தும் நேரடியாக ஆன்லைனில் Save ஆகும். ஆதலால் நாம் எழுதும் கட்டுரைகள் Delete ஆவதற்கு வாய்ப்பு இல்லை. ஒரு கட்டுரையை பாதி மட்டும் எழுதிவிட்டு வெளியே வந்து விட்டால்.அது ஆன்லைனில் தானாக Save ஆகிவிடும்.



10. Snapseed


Snapseed Application Google நிறுவனத்தின் தயாரிப்பாகும். இது photo edit செய்வதற்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Premium edit application இல் உள்ள அனைத்து அம்சங்களும் இதில் இலவசமாக கிடைக்கும்.குறைந்த வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களையும் மிக நேர்த்தியாக எடிட் செய்து கொள்ளலாம்.பல வகையான Filter effects,Clarity,HDR,Blur,Vintage,Smile mode, போன்ற அம்சங்கள் உள்ளது.ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து வெளிச்சம் கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யலாம். தற்பொழுது கொடுக்கப்பட்ட பதிப்பில் Text போட்டோக்களுடன் சேர்த்து edit செய்து கொள்ளலாம். மேலும் பல அம்சங்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக கொடுக்கப்பட்டிருக்கும். 

Post a Comment

Previous Post Next Post