Why do all smartphones looking like Same Design

ஏன் அனைத்து ஸ்மார்ட்போன்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி வடிவமைப்பை கொண்டுள்ளது...?  / Why do all smartphones looking like Same Design



நாம் பயன்படுத்தும் பெரும்பாலான மொபைல்கள்  ஒரே மாதிரி வடிவமைப்பில் இருக்கும் இதற்கான காரணத்தை எப்போதாவது யோசித்தது உண்டா..?  எந்த ஒரு தொழில்நுட்பமாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அதன் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப Smartphone features அம்சங்களில் பெரிய மாற்றங்கள் உண்டாகும்.அவற்றை பின் பற்றியே அடுத்த பல வருடங்களுக்கு அவை தயாரிக்கப்படும்.


ஐபோன் அறிமுகத்திற்கு முன் வந்த மொபைல்கள் பார்ப்பதற்கு முழுவதும் வித்தியாசமாக இருக்கும்.Nokia mobilesஅதற்கும் முன்பு சற்று பெரிதாக செங்கல் என்று சொல்லும் அளவிற்கு பெரிதாக மொபைல்கள் இருந்தது.நோக்கியா நிறுவனத்தின் N-GAGE மாடலை பார்த்து ஹாலிவுட் திரைப்படத்தில் வருவதை போன்று வித்தியாசமாக இருப்பதாக கூறினார்கள்.


அதன் பின் Flip,Rotate ,Slide  போன்ற பல வடிவங்களில் வித்தியாசமாக  மொபைல்கள் வர தொடங்கின.இவைகள் அனைத்திலும்  தற்போது உள்ள தொழில்நுட்ப வசதிகள் இல்லாத போதும் மக்களை கவரும் வகையில் இருந்தது.தற்பொழுது அனைத்து வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வைத்திருந்தாலும்,அந்த சமயத்தில் இருந்த தொழில்நுட்பங்கள் அப்பொழுது  பார்க்க வியப்பாக இருந்தது.

     

ஆரம்பத்தில் மொபைல்கள் தகவல்கள் பரிமாறி கொள்ள அழைப்புகளை கையாள்வதற்கு என்ற ஒரே நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.பெரிய ஆண்டனா சிறிய திரை போன்ற அமைப்புடன் வடிவமைக்கப்பட்டது.தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்த பின்னர் அன்றாடம் தேவைப்படும் சேவைகளை மொபைல் மூலம் செய்துகொள்ளும் அம்சங்கள் வந்தது.


இதன் பின்னர் மொபைல் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் வித்தியாசம் காட்டுவதற்கு சிந்திக்க தொடங்கினர்.

பெண்கள் விரும்பும் வண்ணங்களில் Flip மொபைல்கள்,இளைஞர்களை கவரும் வகையில் Slid,Slim  மொபைல்கள்,மொபைல் பேனல்கள் மாற்றிக்கொள்ளும் வசதி,பெரியவர்கள் பயன்படுத்துவதற்கு என்று மொபைல்கள் என்ற பல வடிவங்கள் வசதிகளில் மொபைல்கள் அறிமுகம் செய்தனர்.   




iPhone புரட்சி


ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போன் iphone சந்தையில் 2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது.அந்த மொபைல் எதிர்காலத்தில் வரும் ஸ்மார்ட்போன்களுக்கு உதாரணமாக இருந்தது.தற்பொழுது உள்ள மொபைல்கள் அதன் வடிவமைப்பை பின்பற்றியே வருகின்றது.ஆனால் அந்த சமயத்தில் சந்தையில் பெரிய விற்பனையாளராக இருந்த நோக்கியா மற்றும் பிளாக்பெர்ரி தங்களுடைய சிம்பியன் மற்றும் BBOS அடிப்படையாக கொண்ட மொபைல்களை உருவாக்குவதில் குறியாக இருந்தன எதிர்காலத்தை கணிக்க தவறிவிட்டனர்.


அந்த சமயத்தில் சந்தையில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட Symbian,WebOS, மற்றும் Bada இயங்குதளங்கள் அடிப்படையாக கொண்ட மொபைல்கள் காலப்போக்கில் மறக்கபட்டது.மக்கள் keypad மொபைல் மாடல்கள் பயன்படுத்துவதில் இருந்து Touch ஸ்மார்ட்போன் க்கு மாறினர்.Touch phone க்கு சிறந்த இயங்குதளமாக iOS மற்றும் Android இருந்தது.மக்கள் Android இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் அதிகம் விரும்பினர்.அதேபோல் iOS iPhone அதன் சிறந்த பாதுகாப்பு அமைப்பால் சந்தையில் முக்கிய இடத்தை பிடித்தது.



பெரிய டிஸ்ப்ளே போட்டி


ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்கள் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் போட்டி போட்டுகொண்டு தொடர்ந்து புதிய அம்சங்களை features கொண்டுவந்தனர்.கேமரா,வடிவமைப்பு,டிஸ்ப்ளே, போன்ற பலவற்றில் மாற்றங்களை கொண்டுவந்தனர்.அதற்கு தகுந்தாற்போல் battery அளவுகளையும் மாற்றினர். 


டிஸ்ப்ளே அளவுகளில் பெரிதாக மாற்றங்களை காட்டினர் full Display,Water drop display,notch display,curve display போன்ற பல வடிவங்களில் மாற்றங்கள் கொண்டுவந்தனர்.ஆனால் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் பார்பதற்கு ஒரே மாதிரியான வடிவமைப்பை கொண்டிருந்தது.அதனை தவிர்க்க முடியவில்லை.



ஏன் அனைத்து ஸ்மார்ட்போன்கள் பார்பதற்கு ஒரே மாதிரியாக உள்ளது..?


Full Display ஸ்மார்ட்போன் தற்பொழுது சந்தையில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.எனவே என்னதான் வடிவமைப்பில் மாற்றம் கொண்டுவர நினைத்தாலும் full display கொடுக்கும் பொழுது அவை பார்பதற்கு ஒரே மாதிரியாக தான் இருக்கும்.


ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்ய முடியும்.Battery,display,camera போன்ற ஹார்ட்வேர் பொறுத்தவரை அவற்றின் அளவில் பெரிய மாற்றம் செய்யமுடியாது.தற்பொழுது சந்தையில் iOS மற்றும் Android பயன்படுத்தபடும் இயங்குதளம் அடிப்படையாக கொண்டே ஸ்மார்ட்போன்கள் வருகின்றன.எனவே அதன் Software அமைப்பில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.


ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் மாற்றம் காட்ட Metal, Glass கொண்டு panel உருவாக்குகின்றனர்.அது பார்க்க பிரீமியம் ஆக உள்ளது.மேலும் மக்கள் தற்பொழுது உள்ள ஸ்மார்ட்போன் வடிவமைப்பையே அதிகம் விரும்புகின்றனர்.அனைத்து வித பயன்பாட்டிற்கும் நன்றாக உள்ளதாக கருதுகின்றனர்.


தற்பொழுது சினிமா படங்கள் மொபைலில் பார்க்கும் அளவுக்கு அதன் டிஸ்ப்ளே அளவு மற்றும் தரம் சிறப்பாக உள்ளது.எனவே ஸ்மார்ட்போன்கள் அதனை கருத்தில் கொண்டே தயாரிக்கப்படுகிறது.


ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு சற்று வித்தியாசமாக இருந்தாலும் அதனை பார்பதற்கு ஒரே மாதிரி தான் இருக்கின்றன.அவற்றில் மாற்றம் ஏற்படுத்த இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.


ஒவ்வரு நிறுவனமும் மற்ற நிறுவனத்தின் அம்சங்களை copy செய்து தான் தனது தயாரிப்புகளில் கொண்டுவருகின்றனர்.

சில நிறுவனங்கள் புதிய அம்சங்களை தைரியமாக தனது தயாரிப்புகளில் அறிமுகம் செய்கின்றனர்.அதன் வெற்றி தோல்விகளை அவர்களே எதிர்கொள்கின்றனர்.


ஒரு சில நிறுவனங்கள் தற்பொழுது Flip, foldable ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அவை விலை அதிகமாக இருப்பதால் சந்தையில் இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.


புதிய மாற்றங்களை கொண்டு வருவதற்கு சில காலம் ஆகும் அவை நம்முடைய அன்றாட பயன்பாட்டையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும் அந்த வகையில் தொழில்நுட்பம் கிடைக்க காத்திருக்க வேண்டியுள்ளது.





Post a Comment

Previous Post Next Post