Telegram BOT எவ்வாறு செயல்படுகிறது..? சில பயனுள்ள Telegram Bot கள்
Telegram bot AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் அப்ளிக்கேஷன் ஆகும்.இந்த அப்ளிகேஷன்கள் பல பயன்களை வழங்குகிறது.வானிலை அறிக்கை,செய்திகள்,பாடல்கள்,reminder,போன்ற பல விதமான தகவல்களை bot பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
இவற்றில் சில சிறந்த bot கள் உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தபடுகிறது.
Telegram end to end encryption மெசேஜ்,live location,secret message போன்ற பல அம்சங்கள் கொண்டுள்ளது.அவற்றில் Bot தொழில்நுட்பம் தற்பொழுது மிகவும் பிரபலமாகி கொண்டுவருகிறது.
python தெரிந்திருந்தால் Bot அப்ளிக்கேஷன் யார் வேண்டுமானாலும் எளிமையாக உருவாக்கலாம்.அதனை telegram மூலம் விளம்பரம் செய்து அதனை அனைவரும் பயன்படுத்த பிரபலபடுத்தலாம்.
What is a Telegram bot..? How to use Telegram bot..?
Telegram முதன் முதலில் 2015 ஆம் ஆண்டு Bot அம்சத்தை வெளியிட்டது.இது மூன்றம்தரப்பு நபர்களை Bot உருவாக்க அனுமதிக்கிறது.இதன் மூலம் பல்வேறு அம்சங்கள் கொண்ட bot கள் உருவாக்கினார்கள்.அதனை நாம் இலவசமாக Telegram இல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
The 8 Best Apps to Identify Anything Using Your Phone's Camera
Telegram bots
Telegram bot பற்றி சுருக்கமாக கூறினால்,Bot ஒரு குறிப்பிட்ட செயல்களை பயனரின் அனுமதியுடன் அவருக்காக செயல்படுகிறது.
Bot பயன்படுத்தி reminder,whether news,message மொழி பெயர்ப்பு,பாடல்கள் கேட்பது,games, மற்றும் பல சேவைகளை எளிமையாக பெறலாம்.
உங்களுடைய டெலிகிராம் குரூப் மற்றும் சேனலில் Bot அம்சத்தை சேர்க்க முடியும்.இதன் மூலம் உங்களின் குரூப் மற்றும் சேனலில் நீங்கள் செய்ய நினைக்கும் செயலை உங்களின் சார்பாக நீங்கள் சேர்க்கும் Bot செய்யும்,
எடுத்துகாட்டாக உங்கள் குரூப்பில் புதிதாக வரும் உறுப்பினரை வரவேற்க ஒரு மெசேஜ் செய்ய விரும்பினால் அதற்கான Bot Add செய்தால் போதும் அந்த மெசேஜ் ஐ புதிதாக உறுப்பினர் சேரும் பொழுது தானாக செய்யும்.
Bot உங்களின் நண்பரை போன்று உங்கள் சார்பாக உங்கள் குரூப் மற்றும் சேனலில் தானாக செயல்படும்.
Bot சேவையை பெற உங்கள் டெலிகிராமில் Search பகுதியில் உங்களுக்கு தேவையான Bot பெயரை type செய்து தேடும் பொழுது கிடைக்கும்.
அதிலேயே அவற்றின் செயல்பாடுகள் குறித்து, Bot உருவாக்கியவர் விளக்கமாக தகவல்களை வழங்கியிருப்பார்.
உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைல் போனை யாருக்காவது விற்பனை செய்ய போகிறீர்களா...? அதற்கு முன் இதனை படியுங்கள்..!
Telegram Bot பாதுகாப்பு எப்படி..?
Telegram தனது பயனருக்கு உயர் பாதுகாப்பான மெசேஜ் சேவையை வழங்கி வருகிறது.அதே வேளையில் டெலிகிராம் Bot பாதுகாப்பானதா என்பது சந்தேகத்திற்கு உரியதாக உள்ளது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
நிபுணர்கள் கூறுவது என்னவென்றால் Telegram தனது மெசேஜ் சேவைகளுக்கு MTProto protocol என்ற பாதுகாப்பு தொழிநுட்பத்தை அடிப்படையாக கொண்டு message encryption செய்கிறது.
ஆனால் Bot அவ்வாறு இல்லாமல் TLS (Transport Layer Security) என்ற பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்துகிறது.இது telegram message encryption போன்று பாதுகாப்பானது இல்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
நீங்கள் Chatbots சேவையை பயன்படுத்தும் பொழுது உங்கள் உரையாடல் முழுமையான பாதுகாப்போடு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே உங்கள் group and channel உரையாடல்களில் Bot add செய்வதை தவிர்ப்பது நல்லது.இருந்தபோதிலும் நீங்கள் group chat இல் welcome message,ஆபாச வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்க்க,தேவை இல்லாத பகிர்வுகளை தடுக்க போன்ற பயன்பாடுகளுக்கு Bot சேர்க்க விரும்பினால் Bot Add செய்துகொள்ளலாம்.
சில சிறந்த Bot சேவைகளை பின்வருமாறு பார்க்கலாம் Telegram bots list
Gamee bot
Gamee bot என்பது Game விளையாடுவதற்கு என்று உருவாக்கப்பட்டது.உங்கள் Group இல் உள்ள நண்பர்கள் இதன் மூலம் அவர்களுக்குள் Game விளையாடலாம்,ஒருவருக்கொருவர் Game challenge செய்யலாம் மற்றும் Score மூலம் போட்டி போடலாம்.இதனை activate செய்வதன் மூலம் Group members நேரடியாக விளையாட ஆரம்பிக்கலாம்.இதனை Add செய்வதற்கு search பகுதியில் @gamee அல்லது @gameebot என்று தேடி அதனை group இல் Add செய்தால் போதும்.Gamee சேவையை பெறலாம்.
Spotybot
Spotybot telegram இல் add செய்வதன் மூலம் எளிமையாக பாடல்கள் கேட்கலாம்,பாடல் வரிகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.பாடல் கேட்பதற்கு பல Bot சேவைகள் உள்ளது.ஆனால் Spotifybot சிறப்பாக செயல்படுகிறது.
பாடல்கள் கேட்பதற்கு பல Bot கள் உள்ளது.இருந்தாலும் இந்த spotybot சிறப்பாக செயல்படுகிறது.
பலருக்கும் தெரியாத டெலிகிராம் 10 அம்சங்கள்
Alertbot
Alertbot மூலம் நீங்கள் செய்ய விரும்பும் செயலை அல்லது பிற ஏதேனும் விசயங்களை உங்களுக்கு நினைவூட்ட இந்த Bot பயன்படுகிறது.
அதாவது நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் யாருக்கேனும் மெசேஜ் அல்லது call பிற ஏதேனும் செய்ய விரும்பினால் இதில் reminder ஆக பதிவு செய்துகொண்டால் அது உங்களுடைய Group அல்லது chat இல் notification ஆக காட்டும்.
Telegram bots: Alertbot
Skeddy bot Reminder க்கு சிறப்பாக செயல்படுகிறது.உங்களுக்கு தேவையான தகவலை சிறியதாக பதிவு செய்துகொள்ளலாம்.
இதில் நமக்கு தேவையான வகையில் நாம் சேமித்து வைத்த பதிவுகளை பயன்பாடு அடிப்படையில் சேமிக்கலாம்.
Gif Bot
Gif வகையான கோப்புகள் தற்பொழுது Chat செய்யும் பொழுது அதிகமாக பயன்படுத்துகிறோம்.அவற்றை எளிமையாக பெறுவதற்கு @gif என்று search செய்தால் போதும் எளிமையாக பெறலாம்.இவை நம் Chat ஐ இன்னும் சிறப்பாக மாற்றுகிறது.
Telegram bots: Giphy Gif Search
இவற்றில் Giphy gif சிறப்பாக உள்ளது.இதனை பெற search செய்து சேர்ந்து கொள்ளுங்கள்.
Yandex Translate Bot
Yandex bot நீங்கள் ஏதேனும் பிற மொழி பேசும் நபருடன் chat செய்யும் பொழுது, உங்களுடைய மெசேஜ்களை அவருடைய மொழிக்கு உடனடியாக மொழிமாற்றம் செய்ய உதவுகிறது.
Yandex Bot பிற மொழி பேசுபவருடன் chat செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
MoviesTracker bot
MoviesTracker bot சினிமா படங்களை பற்றிய தகவல்கள் மற்றும் விமர்சனங்களை அறிந்துகொள்ள இந்த bot உதவியாக இருக்கும்.இதில் நாம் விரும்பும் சினிமா படங்களின் தகவல்களை நேரடியாக IMDb மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Telegram bots: MoviesTracker Bot
VoteBot
Votebot மூலம் நம்முடைய சேனல் அல்லது குரூப் இல் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை கொண்டு அதற்கு உங்கள் குரூப் நண்பர்கள் அல்லது சந்தாதர்கள் ஆதரவு மற்றும் கருத்துகள் தெரிந்துகொள்ளலாம்.
Voicy Bot
Voicy bot பயன்படுத்தி நீங்கள் voice மூலம் சொல்லுவதை மெசேஜ் ஆக type செய்துவிடும்.இதன் மூலம் எளிமையாக நீண்ட மெசேஜ் voice மூலம் type செய்து அனுப்பலாம்.
டெலிகிராமில் அனைத்து விதமான செயல்பாடுகளையும் Bot உதவியுடன் எளிமையாக மேற்கொள்ளலாம்.இதன் செயல்பாடுகள் தானாக நடைபெறுகிறது.இதன் சிறப்பான அம்சங்கள் மூலம் புதுமையான messaging அனுபவத்தை அளிக்கிறது.
இருந்தபோதிலும் நம்முடைய பாதுகாப்பை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும்.நம்முடைய தகவல்கள் பாதுகாப்பில் bot களை முழுமையாக நம்ப முடியாத நிலை உள்ளது.
Bot கள் டெலிகிராம் நிறுவனம் உருவாக்குவதில்லை, மாறாக இவை நம்மை போன்ற பயனர்கள் உருவாக்குகிறார்கள்.எனவே இதன் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது.
நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் Bot உருவாக்க முடியும்.அதற்கான Program மொழி தெரிந்திருந்தால் போதும்.Application போன்று டெலிகிராம் bot உருவாக்கி வெளியிடலாம்.
Post a Comment