WhatsApp pink update குறித்து பரவும் ஆபத்தான வதந்திகள் எச்சரிக்கை..? | WhatsApp pink update scam

WhatsApp pink update குறித்து பரவும் பொய்யான தகவல் எச்சரிக்கை..?

வாட்ஸ்அப் தொடர்ந்து தனது பயனர்களுக்கு புதுப்புது அப்டேட்களை வழங்கி வண்ணம் உள்ளது இந்த நேரத்தில் வாட்ஸ்அப் பயனர்கள் புதிதாக அப்டேட் ஒன்றை பெறுவதாக கூறியுள்ளனர்.வாட்ஸ்அப் நிறுவனத்தின் பாரம்பரிய நிறமான பச்சை நிறத்திலிருந்து பிங்க்(pink) நிறத்திற்கு மாறியுள்ளதாகவும் அதனைப் பெறுவதற்கு லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் எனவும் லிங்க் மெசேஜ் பெறுங்கின்றனர். இதனை பற்றி முழுமையாக அறியாதவர்கள் இதனை டவுன்லோட் செய்து பயன்படுத்த தொடங்கி விடுகின்றனர். இதன் மூலம் வரும் ஆபத்தை அவர்கள் உணர்வதில்லை. 

இந்த மாதிரியான அப்டேட் லிங்க் வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும்..?

இவ்வாறான மெசேஜ்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது ஏனென்றால் இது மிகவும் பழமையான தந்திரங்களில் ஒன்று இதனை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனில் வைரஸ் உண்டாக செய்து உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை திருடுவது அவர்களின் நோக்கமாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட தகவல்கள்,வங்கி சார்ந்த தகவல்கள் என அனைத்தையும் ஹேக்கர்கள் எடுக்க வாய்ப்புள்ளது.
இணையதள ஆய்வாளர்கள் WhatsApp pink குறித்து மிகவும் எச்சரிக்கின்றனர். அதாவது ஹேக்கர்கள் உங்களுடைய வாட்ஸ் அப்பிற்கு அல்லது பிற சமூக வலைத்தளத்தில் மெசேஜ் மூலம் WhatsApp pink அல்லது WhatsApp gold update Apk டவுன்லோட் லிங்க் ஒன்றை அனுப்புவார்கள். அதனை டவுன்லோட் செய்வதன் மூலம் உங்களுடைய வாட்ஸ் அப்பை pink நேரத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் என்று குறிப்பிடுவார்கள். #WhatsApppink இந்த வகை லிங்களை நாம் டவுன்லோட் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் உங்களுடைய ஸ்மார்ட்போன் முற்றிலும் செயல் இழக்கும் அபாயம் உள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் இது குறித்து அறிவிக்கும் பொழுது யார் வேண்டுமானாலும் எவரிடமிருந்தும் இந்த வகையான மெசேஜ்களை பெறமுடியும் இவற்றை தடுப்பது முற்றிலும் முடியாத காரியம் எனவே இந்த வகையான மெசேஜ்கள் அல்லது இமெயில்கள் நாம் பெறும் பொழுது இதனை டெலிட் செய்வது நல்லது.
வாட்ஸ்அப் அல்லது இன்ன பிற அப்ளிகேஷன்கள் குறித்த ஏதேனும் அப்டேட் லிங்க் நீங்கள் பெற்றால் அதனை முற்றிலும் தவிர்த்து அந்த குறிப்பிட்ட குரூப் அல்லது நபரை Block மற்றும் report செய்வது நல்லது.


பாதுகாப்பான வழிகள்..?

 நம்முடைய ஸ்மார்ட்போனில் எந்த ஒரு அப்ளிகேஷன் டவுன்லோட் அல்லது அப்டேட் செய்வதாக இருந்தாலும், கூகுள் பிளே ஸ்டோர் சென்று அங்கு அந்த நிறுவனத்தின் சார்பாக கொடுக்கப்பட்ட update மூலம் அந்த அப்ளிகேஷனை அப்டேட் செய்ய வேண்டும். இது தவிர்த்து அந்த நிறுவனத்தின் பிரத்தியேக தளங்களில் update தகவல் கொடுக்கப்பட்டிருந்தால் அதனை அப்டேட் செய்து கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்டவாறு இல்லாமல் மூன்றாம் தர அப்ளிகேஷன்களை அல்லது வேறு ஏதும் link மூலமாக டவுன்லோட் செய்யும் பொழுது நம்முடைய ஸ்மார்ட் போனில் இருக்கும் தனிப்பட்ட தகவல் அனைத்திற்கும் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சில அப்ளிகேஷன்களில் உள்ள அம்சத்தை முழுமையாக பயன்படுத்துவதற்கு நாம் பணம் செலுத்த வேண்டியிருக்கும் அவ்வாறு பணம் செலுத்த விரும்பாதவர்கள் இணைய தளங்கள் அல்லது சோசியல் மீடியாக்களில் இருந்து அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனின் MOD பதிப்பு டவுன்லோட் செய்து பயன்படுத்துவார்கள். இவற்றின் மூலம் பணம் எதுவும் கட்ட தேவையில்லை மாறாக அப்ளிகேஷனில் அனைத்து அம்சங்களையும் இலவசமாக பயன்படுத்தலாம் இதுவும் ஒரு வகையான ஆபத்துதான் இவற்றிற்கும் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஆபத்துக்களும் பொருந்தும்.






Post a Comment

Previous Post Next Post