நம்முடைய mobile hack செய்ய பட்டுள்ளதா தெரிந்து கொள்ள சில வழிகள்..? | How to check my mobile is hacked

நம்முடைய mobile hack செய்ய பட்டுள்ளதா தெரிந்து கொள்ள சில வழிகள்..? | How to check my mobile is hacked 

உங்களுடைய Mobile பாதுகாப்பாக இருக்கிறதா..? உங்கள் mobile hack செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா..? அல்லது

நம்முடைய mobile எல்லாம் யார் Hack செய்ய போகிறார்கள் என்று நினைக்கிறீர்களா..?

2020 இன் FBI அறிக்கையின்படி நாளொன்றுக்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான இணைய குற்றச் செயல்கள் பதிவாகிறது என்று கூறுகிறது. 

ஒவ்வொரு நாளும் தனிநபர் மற்றும் வணிகம் சார்ந்த சைபர் தாக்குதலில் 5 டாலர் பில்லியன் வரை இழப்பை சந்திப்பதாக கூறுகின்றனர்.

தற்போதுள்ள நவீன உலகத்தில் பல்வேறு ஆன்லைன் சார்ந்த பரிவர்த்தனைகள் செய்கின்றோம்.

எனவே எப்பொழுது வேண்டுமானாலும் நம்முடைய ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படலாம். எனவே அதற்கு முன் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நம்முடைய ஸ்மார்ட்போன் ஹேக் செய்வதில் இருந்து பாதுகாப்பாக உள்ளதா, அல்லது யாரேனும் ஹேக் செய்துள்ளார்களா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய ஸ்மார்ட்போன் மற்றும் கணினியில் வைத்துள்ள தகவல்கள் அனைத்தும் ஹேக்கர்களுக்கு பொக்கிஷம் போன்றதாகும்.

அவற்றில் உள்ள போட்டோ,வீடியோ, ஆடியோ,தொலைபேசி எண்கள்,வங்கி தகவல்கள்,கடவுச்சொற்கள்,மின்னஞ்சல்,போன்ற தகவல்களை எடுத்துக் கொண்டு அதன் மூலம் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள்.

மேலும் நீங்கள் செய்யும் அனைத்தையும் அவர்களால் கண்காணிக்க முடியும்.உங்கள் மொபைலில் என்ன type செய்கிர்கள் முதற்கொண்டு அவர்களால் அறிய முடியும்.


ஸ்மார்ட்போன் hack செய்யப்பட்டுள்ளது என்பதை எவ்வாறு அறிவது..?


உங்களுடைய ஸ்மார்ட் போன் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிவதற்கு பல எச்சரிக்கைகளை உள்ளது.

அவை சிறியது முதல் பெரிய அளவில் எச்சரிக்கையாக உணர முடியும்.அவற்றில் சில மிக நுட்பமானது, அவற்றை நாம் சாதாரணமாக எண்ணுவோம். அவ்வாறு செய்யாமல் உன்னிப்பாக கவனித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பேட்டரி

உங்களுடைய ஸ்மார்ட்போன் வழக்கத்தைவிட விரைவில் பேட்டரி சார்ஜ் முடிவடைவதை உணர்ந்தால் உங்கள் ஸ்மார்ட்போனை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

 எதனால் சார்ஜ் விரைவில் முடிவடைகிறது.சில நேரம் நாம் ஸ்மார்ட்போன் பேட்டரி பழுதாகி இருக்கும், அதிகமாக பயன்படுத்தி இருப்போம் அல்லது அதிகமான அப்ளிகேஷன் பயன்படுத்துவோம். 

மேற்கூறிய எதுவும் இல்லாமல் விரைவில் சார்ஜ் முடிவடைந்தால் உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் ஆகி இருக்க வாய்ப்புள்ளது.

ஏனென்றால் spyware அல்லது mobile hack code ஸ்மார்ட்போனில் அனைத்து பகுதியிலும் இயங்கி கொண்டிருக்கும். அதன் மூலம் சார்ஜ் விரைவில் குறையும். 



அதிகமாக சூடாவது

ஸ்மார்ட்போன் பெரும்பாலும் நாம் சார்ஜ் செய்யும் போது சூடாகும் அல்லது பெரிய வீடியோ கேம்கள் விளையாடும் பொழுது சூடாகும்,இது தவிர்த்து மற்ற நேரங்களில் அதிகமாக சூடகாது.எனவே வழக்கத்திற்கு மாறாக உங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத போதும் சூடாகினால்,ஹேக் ஆகி இருக்க வாய்ப்பு உள்ளது.ஏனென்றால் மொபைலில் ஏதேனும் அப்ளிகேஷன் இயங்கினால் அல்லது மற்ற மறைமுகமாக செயல்பாடு இருந்தால் மட்டுமே அவ்வாறு சூடாகும்.எனவே மறைமுகமாக ஹேக் தொடர்பான செயல்பாடு இருக்க வாய்ப்பு உள்ளது.



ஸ்மார்ட்போன் முழுமையாக செயல்பாட்டை இழத்தல்

ஸ்மார்ட்போன் எந்தவித கட்டளையும் இன்றி தானாக செயல்படும்.மேலும் உங்களால் ஏதேனும் அப்ளிகேஷனை முழுவதும் close செய்ய முடியாது.

செயல்பாடுகள் அனைத்தும் மிகவும் தாமதமாகும்,மெதுவாகவும் இருக்கும்.அந்த சமயங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை அணைக்க முடியாது.

ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும்.அதை அணைக்க முடியாது.இவையும் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள்.



அதிகமாக ஸ்டோரேஜ் ஆக்கிரமிப்பு.

 

மொபைலில் உங்களின் போட்டோக்கள், வீடியோக்கள்,ஆடியோ அதிகமாக இல்லாத பொழுதும் மொபைல் storage full அல்லது insufficient memory என்ற செய்தி அடிக்கடி வரும்.நீங்கள் பெரிய வீடியோக்களை delete செய்தாலும் குறிப்பிட்ட மெமரி பயன்படுத்தும் file கண்டுபிடிக்க முடியாது.

ஹேக் செய்பவர்கள் spyware களை நம்முடைய மொபைலில் நமக்கு தெரியாமல் புகுத்தி விடுவார்கள்.அது எங்கு இருக்கும் என்றும் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்.அதனால் அதிகமான மெமரி நமக்கு பறிபோகும்.



செய்யாத அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள்

 
உங்கள் மொபைலில் இருந்து call செய்யாத நம்பர்கள் மற்றும் மெசேஜ்களை உங்கள் மொபைலில் காணமுடியும்.அவற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.அவற்றில் சில இணையதள நம்பர்கள் அல்லது நெட்வொர்க் நிறுவன எண்களை போன்று இருக்கும்.



அதிகமான popup ads.

மொபைலில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான popup விளம்பரங்கள் வரும் அவைகள், உங்களை click செய்ய வற்புறுத்தும் இதன் மூலம் அவர்களுக்கு ad click வருமானம் கிடைக்கிறது. பெரும்பாலும் இவைகள் உங்களின் மொபைல் இயங்குதளத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது போன்று இருக்கும் 

 
மேற்குறிப்பிட்ட செயல்பாடுகள் உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு எச்சரிக்கையாக எண்ணி பாதுகாப்போடு செயல்படுங்கள்.


ஹேக் செய்யப்பட்டதில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி..?

முதலில் பயம், அதனை முழுவதும் வெளியேற்றி விடுங்கள் அப்பொழுது தான் தெளிவான முடிவுகள் எடுக்க முடியும்.

உங்கள் வங்கி சேவைகளை உங்கள் வங்கியிடம் தெரிவித்து பாதுகாத்து கொள்ளுங்கள்

உங்கள் credit card தொடர்பான மொபைல் சேவைகளை Block செய்து கொள்ளுங்கள்.

வங்கி கணக்கில் இருந்து ஏதேனும் பணம் பரி போனால் உடனே cyber crime துறைக்கு புகார் செய்துவிடுங்கள்.60 நாட்களுக்குள் புகார் செய்தால் அதை சரி செய்து கொள்ளலாம். 

ஸ்மார்ட்போன் முழுவதும் factory reset
செய்துவிடுங்கள்.உங்கள் அனைத்து விதமான (gmail,Facebook,Twitter,Instagram etc) கணக்குகள் அனைத்திற்கும் password மாற்றி விடுங்கள்.

Password கடினமானதாக வைத்துக்கொள்ளுங்கள் அப்போதுதான் எளிதில் யாராலும் அதை உடைக்க முடியாது.

மேற்கூறிய நடவடிக்கைகள் செய்தும் உங்களுடைய mobile hack செய்யப்பட்டு, தகவல்கள் ஏதேனும் திருடபட்டிருந்தால், அதனை வைத்து யாரேனும் உங்களை மிரட்டினால்,அதற்கு ஒரு போதும் அஞ்சாதீர்கள்.

 அது தான் அவர்களுக்கு முதல் வெற்றி,அது சம்பந்தமாக cybercrime துறைக்கு புகார் அளித்து விடுங்கள், பணம் அளிப்பது அல்லது  அவர்கள் சொல்வதற்கு அடிபணிவது போன்றவை செய்யாதீர்கள்.



Post a Comment

Previous Post Next Post