ஸ்மார்ட்போன்களில் ChatGPT பயன்படுத்துவது எப்படி..? | How to use ChatGPT on Smartphones

 

How to use chatGPT on Smartphones

ChatGPT பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்.தற்பொழுது ChatGPT Powered Bing என்ற புதிய அம்சம் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போன்களில் ChatGPT அம்சங்கள் உடைய Bing Search engine பயன்படுத்தும் வண்ணம் ChatGPT சேவைகள் ஸ்மார்ட்போனில் வழங்கப்பட உள்ளது.

ChatGPT featured bing என்பது Bing தேடுபொறியின் அம்சமாகும், இது OpenAI இன் ChatGPT மொழி மாதிரியால் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ChatGPT சாட்பாட் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த அம்சம் பயனர்கள் ஒரு மனித வாடிக்கையாளர் சேவை பிரதிநிதியுடன் எவ்வாறு தொடர்புகொள்வார்கள் என்பதைப் போலவே, நிகழ்நேரத்தில் கேள்விகளைக் கேட்கவும், இயல்பான மொழி பதில்களைப் பெறவும் அனுமதிக்கிறது.


ChatGPT Powered Bing பயனரின் கேள்வியின் சூழலைப் புரிந்துகொண்டு பொருத்தமான மற்றும் துல்லியமான பதில்களை வழங்கும் ஆற்றல் உடையது.ChatGPT Powered Bing என்பது ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். இது பயனர்கள் தகவலை அணுகுவதையும் அவர்களின் கேள்விகளுக்கு விரைவான பதில்களைப் பெறுவதையும் எளிதாக்குகிறது. அதன் இயல்பான மொழி செயலாக்க திறன்கள் மற்றும் நிகழ்நேர பதில்களை வழங்கும் திறன் ஆகியவற்றுடன், இது அடுத்த தலைமுறை தேடுபொறி தொழில்நுட்பத்தை பிரதிபலிக்கிறது மற்றும் எதிர்காலத்தில் தேடுபொறிகளுடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்த தயாராக உள்ளது. 



ChatGPT அடிப்படையிலான பிங் (ChatGPT Powered Bing) தற்போது ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு அறிமுகம் ஆகியுள்ளது.ஆண்ட்ராய்டு மட்டுமல்லாமல் ChatGPT featured Bing ஐபோன்,IOS சாதனங்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் இந்தியா தெரிவித்துள்ளது.அதாவது புதிய பிங் சேர்ச்சை ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமின்றி ஐபோன்கள் வழியாகவும் பயன்படுத்தலாம்.



ChatGPT featured Bing  ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் பயன்படுத்துவது எப்படி?
How to use ChatGPT on Smartphones..?


 முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக எட்ஜ் (Edge) அல்லது பிங் (Bing) ஆப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். அதனுடன் bing AI Preview release Singn in செய்துகொள்ளுங்கள் (ஆண்ட்ராய்டு பயனர்கள் மற்றும் ஐஓஎஸ் பயனர்கள்) தங்கள் ஸ்மார்ட்போனில் / ஐபோனில் உள்ள மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மொபைல் ஆப்பின் (Microsoft Edge Mobile App) ஹோம் பேஜ் வழியாக புதிய பிங் சேர்ச்சை பயன்படுத்த முடியும்.கணினியில் பயன்படுத்துவதை போன்றே பயன்படுத்தலாம்.


செய்திருப்பதை உறுதி செய்துகொள்ளவும். அதுமட்டுமின்றி பிங் ஏஐ ப்ரீவியூவில் சைன்-இன் மற்றும் லாக்-இன் செய்திருப்பதையும் உறுதி செய்துகொள்ளவும். மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள ப்ரீவியூ ரீலீஸை அணுகக்கூடிய எவருமே (ஆண்ட்ராய்டு பயனர்கள் மற்றும் ஐஓஎஸ் பயனர்கள்) தங்கள் ஸ்மார்ட்போனில் / ஐபோனில் உள்ள மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மொபைல் ஆப்பின் (Microsoft Edge Mobile App) ஹோம் பேஜ் வழியாக புதிய பிங் சேர்ச்சை பயன்படுத்த முடியும். மைக்ரோசாஃப்ட் எட்ஜ் மொபைல் ஆப்பின் கீழே உள்ள பிங் ஐகானை (Bing Icon) கிளிக் செய்தால் போதும் Chat பகுதிக்கு அழைத்து செல்லபடுவீர்கள்.


நிலாவில் 4G நெட்வொர்க் அமைக்கும் Nokia! காரணம் தெரிஞ்சா ஆடிப்போய்டுவீங்க! எதற்காக தெரியுமா?


ChatGPT அடிப்படையிலான chatbot பகுதி இருக்கும்.அது நீங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும்.அதன் மூலம் கதை எழுதுவது, CODING எழுதுவது, மொழி பெயர்ப்பு செய்வது,போன்ற உங்களின் அனைத்து தேவைகளையும் இதன் மூலம் செய்யலாம்.


இந்த சேவைகளின் மூலம் கூகுள் நிறுவனம் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த தயாரிப்பு கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.உலகளாவில் கூகுள் நிறுவனத்தின் தேடல் சந்தை பங்கானது கணினியில் 85% சதவீதமும், ஸ்மார்ட்போனில் 96% சதவீதமும் உள்ளது.இது முற்றிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.அதே போல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் bing தேடல் சந்தையில் 8.9% சதவீதம் கணினியிலும் ஸ்மார்ட்போனில் 0.48% சதவீதம் மட்டுமே உள்ளது. 


Bing mobile App அறிமுகம் செய்யும் பொழுதே அதில் voice search அம்சத்தையும் அறிமுகம் செய்தது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வீடியோ கால் அப்ளிகேஷன் Skype இல் Ai featured Bing சேர்க்கப்பட்டுள்ளது.தற்பொழுது இந்த இரண்டில் மட்டுமே Ai தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது.வரும் காலங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மற்ற அப்ளிகேஷன் தயாரிப்புகளுக்கு Ai தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என்று அறிவித்துள்ளது.அதோடு இல்லாமல் ChatGPT  தொடர்பான சந்தேகங்களும் சர்ச்சைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.



Post a Comment

Previous Post Next Post