நமக்கு தெரியாமல் மொபைல் மூலம் நமக்கு ஏற்படும் ஆபத்துகள் - 2021 - Part 1 I Mobile hidden security threats in 2021 Part -1
ஸ்மார்ட்போன்கள் நம் கையில் இல்லாத நேரம் இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு நம்முடைய அன்றாட பயன்பாடு முக்கியமானதாக மாறிவிட்டது. அவற்றிலுள்ள அபாயங்கள் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..?
தற்போது மொபைல் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. ஃபிஷிங் தாக்குதல் கடவுச்சொல் திருடப்படுவது மதல்பல்வேறு குற்றச் செயல்கள்ந நடைபெற்றுவருகின்றன.
டிஜிட்டல் மோசடியில் 60% அதிகமாக மொபைல் மூலம் நடைபெறுகின்றன.
வியாபாரம் தொடர்பான வங்கி சேவைகள் அனைத்தும் மொபைல்களில் பயன்படுத்தப்படுவதால் பாதுகாப்பு என்பது மிக அவசியமாகிறது.
சைபர் செக்யூரிட்டி நிறுவனம் பைனரி டிபென்சின் மூத்த இயக்குனர் ராண்டி பார்க்மென் கூறுகையில் அன்றாட பணிகளுக்கு உங்கள் தொலைபேசி நீங்கள் எவ்வளவு அதிகமாக நம்பி இருக்கிறீர்களோ அதுவே அதிகமாக உங்களை பாதிக்கும்.
உங்கள் ஸ்மார்ட்போனில் சில விஷயங்கள் ஒரு போதும் சேமிக்க கூடாது என்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
ஆபத்தை அறிந்து எச்சரிக்கையாக செயல்படுவதன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனை பாதுகாப்பாக பயன்படுத்த முடியும். அதற்காக ஸ்மார்ட்போன் பாதுகாப்பிற்கான 2021 இன் மிகப்பெரிய அச்சுறுத்தல்களையும் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் பார்க்மென் அறிவுரை அடிப்படையில் இங்கே தொகுத்துள்ளோம்.
நாம் அறியாமல் செய்யும் தவறுகள் நமக்கு எவ்வாறு ஆபத்தை உண்டாக்குகிறது என்பதை காண்போம்.
ஆபத்தான இலவச அப்ளிகேஷன்
நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களில் ஒரு சில சேவைகளை முழுமையாக பெறுவதற்கு பணம் செலுத்தும் வகையில் இருக்கும்.
அத்தகைய சேவைகளை பணம் செலுத்தாமல் முழுமையாக இலவசமாக பெறுவதற்கு பல இணைய தளங்கள் உள்ளது அவற்றில் நாம் அந்த அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்து பயன்படுத்துவதன் மூலம் அத்தகைய சேவைகளை நாம் இலவசமாக பெற முடியும்.
அதே நேரத்தில் அந்த இலவச அப்ளிகேஷன்கள் மூலம் நம்முடைய ஸ்மார்ட்போன்களுக்கு பல வழிகளில் ஆபத்து உள்ளது அதாவது அந்த அப்ளிகேஷனில் வைரஸ்கள் இருக்கும்.
அவற்றின் மூலம் நம்முடைய தகவல்கள் அனைத்தும் திருட வாய்ப்பு உள்ளது மேலும் நம்முடைய வங்கிக் கணக்கு சம்பந்தமான தகவல்களை பெற்று பணத்தை இழக்கவும் வாய்ப்பு உள்ளது.
ஆதலால் இலவசமாக கிடைக்கிறது என்று குறுக்கு வழிகளில் சேவைகளை பெற்று பெரிய ஆபத்துகளை உண்டாக்காமல்,சிறிது பணம் செலுத்தி அந்த சேவையை பெற்றுக் கொள்ளுங்கள்.எடுத்துக்காட்டு : Netflix,amazon prime,picsart,
தகவல் கசிவுகள்
நம்முடைய ஸ்மார்ட்போனில் புதிதாக ஏதேனும் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்கு முன் அவற்றைப் பற்றி நாம் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.
அந்த அப்ளிகேஷன் நம்முடைய ஸ்மார்ட் போனிலிருந்து எந்தெந்த தகவல்களை பெறுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், என்று பார்க்மேன் கூறுகிறார்.
பெரும்பாலும் அப்ளிகேஷன்கள் அவை முழுமையாக செயல் பட பின் வரும் தகவல்களை பயனர் இடமிருந்து பெறுகின்றன.பெயர்,பிறந்த நாள்,credit card,bank account information,location history,contact list,photos,and more
இவற்றைப் பெற்றுக் கொண்டு அதை தங்களுடைய சர்வர்களில் சேமிக்கின்றன இந்த தகவல்களை அப்ளிகேஷன் உருவாக்குபவர்கள் பராமரிக்கின்றனர்.
பர்க்மேன் கூறுவதாவது இந்தத் தகவல்கள் ஏதேனும் இணைய தாக்குதல் மூலமாகவோ அல்லது பிற தொழில்நுட்ப குறைபாடுகள் மூலமாகவோ சமூக விரோதிகள் திருடினால் அவர்களால் உங்களுடைய தகவல்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்,
ஆதலால் ஒரு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்வதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை அது தேவைதானா என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.
இலவச WIFI சேவைகள்
நாம் செல்லக்கூடிய பல பொது இடங்களில் இலவசமாக வைபை free WiFi சேவைகள் அளிக்கப்படுகின்றன. அவற்றிற்கு கடவுச்சொற்கள் எதுவும் தேவையில்லை. அவற்றை நாம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அவ்வாறு நாம் பயன்படுத்தும் பொழுது நம்முடைய ஆன்லைன் செயல்பாடுகள் அனைத்தும் இலவச WiFi சேவை அளிப்பவர்கள் எளிதாக பார்க்க முடியும் என்று பார்க்மேன் கூறுகிறார்.
இதேபோல் ஹேக்கர்கள் பயனர்களின் தகவல்களை திருட ஒரு போலியான இலவச வைபை ஹாட்ஸ்பாட் உருவாக்குவார்கள் அதை நாம் பயன்படுத்தி நம்முடைய வங்கியின் வலைத்தளத்திற்கு செல்லும் பொழுது அதற்கு பதிலாக இலவச வைபை நெட்வொர்க் அதை போலவே உள்ள போலியான வலைத்தளத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.
அங்கு உங்களுடைய வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்கள்,கடவுச்சொற்களை நீங்கள் அளிக்கும் பொழுது அதை அவர்கள் எளிமையாக திருட வாய்ப்புள்ளது. அத்தகைய சமயங்களில் நீங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.
ஏதேனும் அவசர தேவைக்கு பொது இலவச வைபை பயன்படுத்தினால்.அந்த சமயங்களில் நம்முடைய வங்கி சேவைகள் மற்றும் பிற முக்கியமான சேவைகள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
ஃபிஷிங் தாக்குதல்கள் - Phising attack
ஹேக்கர்கள் நம்முடைய ஸ்மார்ட்போனிற்கு email,text messages,voice calls போன்ற பல வழிகளில் ஏதேனும் லிங்க் அனுப்பி அதை திறப்பதன் மூலம் நம்முடைய பாஸ்வேர்டு பெறுவதற்கு முயற்சி செய்வார்கள்.இது ஃபிஷிங் என்று அழைக்கப்படுகிறது.
மக்களை ஏமாற்றுவதற்கு மிகவும் எளிமையான வழியாக ஃபிஷிங் உள்ளது. இதன் மூலம் தகவல்களை எளிமையாக பெறுகின்றனர் என்று மொபைல் சார்ந்த பாதுகாப்பு குறித்து பார்க்மேன் கூறுகிறார்.
இதனைத் தவிர்ப்பதற்கு எடுத்துக்காட்டாக வங்கியின் தகவல் பெறுவதற்கு உங்களிடம் யாரேனும் தொடர்பு கொண்டால் அவர்களை உங்களது அதிகாரப்பூர்வ எண்ணில் இருந்து அழையுங்கள் என்று கூறி இணைப்பை துண்டித்து கொள்ளுங்கள்.
மேலும் இணையதள லிங்க் ஏதேனும் உங்களுக்கு மெசேஜ் வந்தால் அதை திறந்து பார்க்காமல் இருப்பது நல்லது.
Spyware - Spy applications
உங்களின் அன்புக்குரியவர்கள் மற்றும் குழந்தைகளை கண்காணிக்க ஏதேனும் ஸ்பை அப்ளிகேஷன்களை அவர்கள் மொபைல்களிலோ அல்லது உங்களின் மொபைல்களிலும் இன்ஸ்டால் செய்தால் அதன் மூலம் அவர்களின் நடவடிக்கைகளை உங்களால் கண்காணிக்க முடியும்.
அதே சமயம் அந்த வகையான அப்ளிகேஷன்கள் உண்மையில் நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை உண்மையில் மற்றவருடைய இருப்பிடங்கள் புகைப்படங்கள் மற்றும் உரையாடல்களை ரகசியமாக நீங்கள் பார்க்க முடியும்.
அதே சமயத்தில் உங்களுடைய தகவல்களையும் அவர்களால் பார்க்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.அவற்றை பயன்படுத்தி உங்களுக்கு ஆபத்து உண்டாக வாய்ப்புள்ளது.
ஆதலால் அத்தகைய அப்ளிகேஷன்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
Post a Comment