உங்கள் ஸ்மார்ட்போன் Home screen இல் இருக்கவேண்டிய பயனுள்ள Widgets..
உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பல்வேறு பயனுள்ள widgets வழங்கியுள்ளது. அதனை பலர் பயன்படுத்துவது இல்லை
Widgets என்பது ஒரு அப்ளிகேஷன் அல்லது செட்டிங் உள்ளே சென்று நீங்கள் செய்யும் செயல்பாடுகளை,உங்களது ஹோம் ஸ்கிரீனில் ஷார்ட்கட்டாக எடுத்து வைத்துக்கொள்வது.
இதன் மூலம் அதனை எளிமையாக ஹோம் ஸ்க்ரீனில் இருந்து அப்ளிகேஷன் திறக்காமல் மூலம் இயக்கலாம்.
Widgets ஐ அப்ளிகேஷன் என்று கூற முடியாது,ஆனால் அப்ளிகேஷனில் உள்ள செயல்பாடுகளை எளிமையாக செய்ய உதவுகிறது.
இங்கே உங்கள் ஸ்மார்ட் போனில் தினமும் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களில் இருந்து சில பயனுள்ள widgets பற்றி தொகுத்துள்ளோம். இதன் மூலம் உங்கள் அப்ளிக்கேஷன் செயல்களை எளிமையாக செய்யலாம்.
1.Google Keep note
இந்த அப்ளிகேஷனில் முக்கியமான நிகழ்வுகள் அல்லது குறிப்புகளை குறித்து வைத்து கொள்ளலாம்.
இந்த அப்ளிகேஷன் widget ஆக உருவாக்கி home screen இல் வைத்துக்கொள்ளலாம்.
இதன் மூலம் Photo, Voice, Date முறையில் Note சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
இந்த widget 3X3 வடிவமைப்பில் இருக்கும்.
2.Map
Google map ஐ Widget ஆக வைத்துகொள்ள முடியும்.இதன் மூலம் Nearby locations, Places, Live location போன்றவற்றை எளிமையாக கையாள முடியும்.
உங்களுடைய live location -ஐ உங்கள் நண்பர்கள் உறவினர்களுககும் link moolam அனுப்பி 15 நிமிடம் முதல் 1 நாள் வரை பகிரலாம்.
Restaurant, Cloths, Hotels, shopping, Petrol, போன்ற பல இடங்கள் மற்றும் சேவைகளை தனி தனியாக தேடலாம்.
இந்த Widget ஐ Home screen இல் 4X3 மற்றும் 3x4 என்ற வடிவமைப்பில் வைத்துக்கொள்ளலாம்.
3.Google clock
Google clock widget மூலம் உலகின் பல்வேறு நாடுகளின் நேரங்களை உங்கள் Home screen இல் பெரிதாக வைத்துக்கொள்ளலாம்.
Clock அப்ளிகேஷன்கள் பல உள்ளன.அவற்றில் இந்த அளவிற்கு அம்சங்கள் இல்லை,32 நாடுகள் வரை நேரங்களை வைத்துக் கொள்ளலாம்.
உங்களுடைய நண்பர்கள் உறவினர்கள் யாரேனும் வெளி நாடுகளில் இருந்தால், உங்களுக்கு இந்த Widget மிகவும் உபயோகமாக இருக்கும்.
பலருக்கும் தெரியாத 15 பயனுள்ள இணையதளங்கள்
4.Google News
Google news widget மூலம் நீங்கள் விரும்பும் செய்திகளை படிக்க முடியும்.Google knows you மூலம் உங்களுக்கு விருப்பமான துறையை சார்ந்த செய்திகளின் தலைப்புகளை Google news widget உங்களுக்கு காட்டும்.
அதனை நீங்கள் ஓபன் செய்வதன் மூலம் அதன் முழு செய்திகளை எளிமையாக படித்துக் கொள்ளலாம்.
மேலும் கூகுள் நியூஸ் மூலம் வானிலை அறிக்கை மற்றும் தட்பவெட்ப நிலை முதலியவற்றை 4X2 வரிகளில் சிறிய செய்திகளாகவும் நீங்கள் படிக்கலாம்.
கூகுள் நியூஸ் உங்கள் Home screen இல் widget ஆக இருக்கும் பொழுது,செய்திகளை எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்.
5.Google doc,sheets and slides
உங்கள் வியாபாரத்தை Google workspace இல் இணைத்து வைத்திருந்தால், Google workspace உள்ள சேவைகளை widget ஆக உங்கள் ஸ்மார்ட்போன் Home screen இல் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Google doc,sheet,மற்றும் slides சேவைகளை 1X2 என்ற அளவில் சிறிய Widget ஆக வைத்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
6.Google drive
Google drive -ஐ widget ஆக உங்கள் ஸ்மார்ட்போன் ஹோம் ஸ்கிரீனில் வைத்துக் கொள்ளலாம்.
இதன் மூலம் நீங்கள் Google drive இல் பயன்படுத்தும் சேவைகளை எளிமையாக widget மூலம் பயன்படுத்தலாம்.
Drive : one touch செய்வதன் மூலம் Google drive அப்ளிக்கேஷன் open செய்யலாம்.
Search : உங்கள் drive இல் உள்ள கோப்புகளை எளிமையாக தேட முடியும்.
Upload : நீங்கள் எதேனும் file களை எளிமையாக ஸ்மார்ட்போனில் இருந்து drive க்கு upload செய்யலாம்.
Camera : camera மூலம் photo எடுத்து உடனடியாக Drive இல் upload செய்யலாம்.
நம்முடைய ஃபேஸ்புக் ப்ரொபைல் யார் யாரெல்லாம் ரகசியமாக பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்..?
Post a Comment