Gmail tricks and features | Gmail இல் உள்ள பலருக்கும் தெரியாத சிறந்த அம்சங்கள்

Gmail இல் உள்ள பலருக்கும் தெரியாத சிறந்த அம்சங்கள் | Gmail Tricks and Features

Gmail tricks and features


தற்பொழுது உள்ள டிஜிட்டல் உலகில் முக்கியமான ஒன்று ஈமெயில் Email அலுவல் சார்ந்த அனைத்து பயன்களுக்கும் தேவைப்படுக்குறது.

வலைத்தளங்கள் போல் இல்லாமல் தகவல் பரிமாறுவதற்கு முக்கியமான கோப்புகள் அனுப்புவதற்கும் பயன்ப்படுத்தபடுகிறது. ஈமெயில் சேவையில் ஜிமெயில் Gmail login முன்னோடியாக உள்ளது.

உலகம் முழுவதும் ஜிமெயில் பயன்படுத்துப்பவர்களின் எண்ணிக்கை 1.5 பில்லியன் என்று தரவுகள் கூறுகிறது.

உலகில் மொத்தம் 3.8 பில்லியன் மக்கள் ஈமெயில் Gmail users பயன்படுத்துகிறார்கள்.ஜிமெயில் கிட்டத்தட்ட பாதிபேர் பயன்படுத்துகிறார்கள்.

இத்தகைய ஜிமெயில் பல பயன் தரும் உள்ள அம்சங்களை கொண்டுள்ளது.அதனை இப்பதிவில் காணலாம்.


அண்டூ சென்ட் ( undo send )

சில நேரங்களில் மெயிலில் அனுப்பவேண்டிய தகவல்களை டைப் செய்துவிட்டு உடனடியாக Send பட்டன் அழுத்திவிடுவோம்.

பின்பு தான் தெரியும் அதில் ஏதேனும் தவறுகள் இருக்கும்.அல்லது அதனுடன் attachment வைக்காமலே அனுப்பிவிடுவோம்.

அந்த சமயத்தில் அந்த தவறை எவ்வாறு சரி செய்வது என்பதை யோசித்து கொண்டிருப்போம்.அந்த தவறு சில நேரங்களில் பெரிய பிரச்சனைகளை கூட உருவாக்கிவிடும்.

இதற்காகவே ஜிமெயில் undo send அம்சத்தை வழங்கியுள்ளது.உங்கள் சிஸ்டம் திரையில் மேலே உள்ள settings சென்று வலது புறம்,மேலே உள்ள செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்தால் ஆல் செட்டிங்ஸ் திறக்கும்.

அதற்குள் சென்றால் UNDO SEND என்ற ஆப்ஷன் இருக்கும்.அதனை செலக்ட் செய்து அதன் மூலம் 5 முதல் 30 நொடிகளுக்கும் ஒரு நேரத்தை தேர்வு செய்து கொண்டால்,

நீங்கள் தவறாக மெயில் அனுப்பும் பொழுது இதனை பயன்படுத்தி 30 வினாடிகளுக்குள் மெயில் போகாமல் தடுக்கலாம். 


நமக்கு தெரியாமல் மொபைல் மூலம் நமக்கு ஏற்படும் ஆபத்துகள்


Schedule Mail 

இது ஒரு புதிய அம்சம் மற்றும் அனைவர்க்கும் பயன்படும் ஒன்று,நீங்கள் யாருக்கேனும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (நாளை, இரவு, காலை) மெயில் செய்யவேண்டி இருந்தால்,

மெயில் உருவாக்கி முடிந்தபின் Send பகுதியின் அருகில் ஒரு arrow Option கொடுக்கப்பட்டிருக்கும்.அதனை கிளிக் செய்தால் Schedule option வரும் அதனை கிளிக் செய்து,உங்களுக்கு அனுப்ப வேண்டிய நேரத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

Schedule mail



Offline Mail 

இன்டர்நெட் இல்லாத சமயத்தில் நீங்கள் மெயில் பார்க்க விரும்பினால் ஜிமெயில் settings பகுதிக்கு சென்று,அங்கு offline என்ற அம்சத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

பின் உங்கள் ஈமெயில் ஐ கம்ப்யூட்டர் இல் sync செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.பின் அதனை இன்டர்நெட் வசதி கிடைக்காத பொழுதும் பயன்படுத்தலாம்.Gmail account இதன் மூலம் நீங்கள் தடையின்றி மெயில் பார்த்து கொள்ளலாம்.

Offline gmail



விளம்பர மெயில் (Spam mail)

பல நிறுவனங்கள் மற்றும் வலைத்தளங்கள் தினம்தோறும் தங்கள் நிறுவனத்தின் Email Marketing விளம்பரங்களை மெயில் செய்வார்கள்.

அது தேவையில்லாமல் நம்முடைய இன்பாக்ஸை Spam mails அடைத்து கொள்ளும்,அதனை நாம் தினம்தோறும் தேடி தேடி அளித்துக்கொண்டிருக்க முடியாது.

எனவே அது போன்ற ஸ்பேம் மெயில்கள் வேண்டாம் என்று நினைத்தால் சர்ச்பாரில் UNSUBSCRIBE என டைப் செய்து அருகில் உள்ள மூன்று கோடுகளைகிளிக் செய்தால் அட்வான்ஸ் செட்டிங் காண்பிக்கும்.

அதில் create filter கொடுத்து skip the inbox (Archieve it) தேர்வு செய்தால்,இது போன்ற ஸ்பேம் மெயில்கள் வருவதை தடுக்க முடியும்.

Search bar > type “UNSUBSCRIBE” > advanced search > create filter > skip the inbox


முக்கியமான மெயில்கள் பாதுகாப்பாக அனுப்பலாம் (Confidential mode)

Confidential mode இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் அனுப்பும் மெயில் யாரும் Copy மற்றும் Download செய்ய முடியாத வண்ணம் பாதுகாக்கலாம்.அதனுடன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அழியும் வண்ணம் செய்யலாம்.

இதற்கான செட்டிங் மெயில் compose செய்யும் பொழுது அதன் மெனு பகுதியில் மூன்று புள்ளிகள் போன்ற செட்டிங்ஸ் பகுதியில் இருக்கும்.

Gmail confidental mode


how to make money on telegram | டெலிகிராம் மூலம் வருமானம் பெறுவது எப்படி...?


குறிப்பிட்ட மெயில்களுக்கு மட்டும் நோட்டிபிகேஷன் (Notification for Mails)

ஸ்மார்ட்போனில் ஜிமெயில் பயன்படுத்தும் பொழுது அதிகமாக மெயில்கள் வரும்போழுது, நோட்டிபிகேஷன் வந்துகொண்டே இருக்கும்.

அவற்றில் பெரும்பாலும் தேவையில்லாத மெயில்களாக இருக்கும்.எனவே அத்தகைய இடையூறை ஜிமெயில் நோட்டிபிகேஷன் செட்டிங்ஸ் பகுதியில் "High priority" மெயில் தேர்வு செய்து,அதற்கு மட்டும் நோட்டிபிகேஷன் வரும் வண்ணம் மாற்றிக்கொள்ளலாம்.


Save to google drive

உங்களுக்கு மெயிலில் வரும் Attachment களை நேரடியாக Google Drive இல் சேமிக்கலாம். இதன் மூலம் எளிமையாக ஜிமெயிலில் இருந்த படியே சேமிக்க முடியும். கம்ப்யூட்டர் க்கு டவுன்லோட் செய்ய தேவையில்லை,Google Drive icon attachment பகுதியின் மேலே இருக்கும்.


பல நிறுவனங்கள் மெயில் சேவைகளை வழங்குகிறது.ஜிமெயில் நம்பகமானதாகவும், பாதுக்காப்பானதாகவும் உள்ளது.இதன் காரணமாகவே பெரும்பாலானவர்கள் Gmail பயன்படுத்துகின்றனர்.

Google நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் இதனை நம்பி பயன்படுத்தலாம்.Google நிறுவனத்தின் இயங்குதளம் ஆண்ட்ராய்டு  ஸ்மார்ட்போன் பயன்படுத்தும், அனைவரும் Gmail பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.





Post a Comment

Previous Post Next Post