பலருக்கும் தெரியாத Gboard Keyboard இன் 10 அம்சங்கள் | 10 Unknown Features About Gboard Keyboard

பலருக்கும் தெரியாத Gboard Keyboard இன் 10 அம்சங்கள் | 10 Unknown Features About Gboard Keyboard 


 கூகுள் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பு தான் GBoard keyboard.இது பல்வேறு பயனுள்ள அம்சங்களை கொண்டுள்ளது.கூகுள் பிளே ஸ்டோரில் keyboard அப்ளிகேஷன்கள் பல உள்ளன. அவற்றிலிருந்து பல தனித்துவமான அம்சங்களை gboard கொண்டுள்ளது. அவற்றில் முக்கியமான மற்றும் பயனுள்ள google gboard features 10 அம்சங்களை தொகுத்துள்ளோம்.



Select Text easy and Delete


ஸ்மார்ட்போனில் touchscreen மூலம் text செலக்ட் செய்து அதனை காப்பி செய்வது என்பது சற்று சவாலாக இருக்கும் ஆனால் நீங்கள் ஜி போர்டு பயன்படுத்தினால் அதனை எளிமையாக முன்பின் என பக்கவாட்டில் நடத்தி நீங்கள் தேவையானதை மட்டும் காப்பி செய்யலாம்.


ஒன்றுக்கும் மேற்பட்ட வார்த்தைகளை நீங்கள் அழிக்க விரும்பினால்,நீங்கள் டெலிட் செய்யும் அந்த பட்டனை தொடர்ந்து தொட்டே இருக்க வேண்டும்.அவ்வாறு செய்யும் பொழுது எழுத்துகள் அழிந்து பின் வார்த்தைகளாக அழிய தொடங்கும். நீங்கள் அதில் இருந்து கையெடுத்து விட்டால் அழிப்பது நின்று விடும்.



Quickly Access the Alternative Keyboard


நீங்கள் சாதாரணமாக Google Gboard பயன்படுத்தும் பொழுது,123 என்ற பட்டனை டச் செய்வதன் மூலம்,எண்கள் வரிசை மற்றும் புள்ளி,தொடர் புள்ளி,கேள்வி குறி போன்ற சிறப்பு எழுத்துக்கள் தோன்றும். அவற்றை நீங்கள் எளிமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.



இன்ஸ்டாகிராமில் உங்கள் followers எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி..?


Translate


ஜி போர்டு நீங்கள் பயன்படுத்தி டைப் செய்து கொண்டிருக்கும் பொழுது மொழிமாற்றம் செய்து கொள்ளலாம். நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் மட்டும் வார்த்தைகளை 90 google translate மொழிகளில் மொழிமாற்றம் செய்ய கொள்ளலாம்.


இதனை பயன்படுத்த மேல் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட செட்டிங்கில் சென்று Translate அம்சத்தை ஆன் செய்து கொள்ளுங்கள்.


உங்களுக்கு தேவையான வார்த்தைகளை copy செய்து பின் அதனை translate box  இல் paste செய்தால் உங்களுக்கு தேவையான மொழியில் மொழி மாற்றம் செய்து கொள்ளலாம்.


மேலும் நீங்கள் google voice input  மூலம் நீங்கள் பேசும் வார்த்தைகளை மற்றொரு மொழியில் எழுத்துக்களாக மொழிமாற்றம் செய்யலாம்.


The 20 Best Offline Games on Android That Don't Need Internet


Create text expansion


நீங்கள் Gboard பயன்படுத்தும்போது ஏதேனும் வார்த்தையை தொடர்ந்து அடிக்கடி பயன்படுத்திக் கொண்டிருந்தால், Gboard text expansion அம்சத்தின் மூலம் அந்த வார்த்தையை முழுமையாக டைப் செய்யாமல் சில எழுத்துகள் மட்டும் type செய்தாலே அந்த வார்த்தை வருமாறு அமைத்துக்கொள்ளலாம்.


 உதாரணமாக உங்கள் இமெயில் ஐடி அல்லது வீட்டின் முகவரி போன்றவற்றை அடிக்கடி பயன்படுத்த வேண்டி இருந்தால்,அதனை நீங்கள் இவ்வாறு செய்து கொள்ளலாம்.


Text expansion பயன்படுத்த 


Gboard செட்டிங் பகுதிக்கு சென்று அங்கு Dictionary திறக்க வேண்டும்.


Dictionary பகுதியில் my Dictionary திறந்து அங்கு இரண்டு பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கும்.


முதல் பாக்ஸில் உங்களுக்கு தேவையான வார்த்தைகளை டைப் செய்து கொள்ள வேண்டும்.


இரண்டாவது பாக்ஸில் அதற்கு உண்டான குறியீட்டு shortcut எழுத்துகளை டைப் செய்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு எழுத்துக்கள் வரையில் டைப் செய்யலாம்.இதனை செய்து முடித்தவுடன் நீங்கள் அப்படியே வெளியே வந்துவிடலாம்.


தற்பொழுது நீங்கள்  Gboard இல் அந்த குறியீட்டு எழுத்தினை டைப் செய்யும் பொழுது,உங்களுக்கு ஜி போர்டு மேல் பகுதியில் அந்த வார்த்தை முழுமையாக காண்பிக்கப்படும்.



One hand mode


தற்பொழுது வருகின்ற ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே அளவுகள் சற்று பெரிதாகவே இருக்கின்றன.அத்தகைய ஸ்மார்ட்போன்களில் ஒரு கையில் one hand mode keyboard பயன்படுத்துவது என்பது சற்று கடினமாகவே உள்ளது.


அந்த சிரமத்தை குறைக்க கூகுள் நிறுவனம் தனது Gboard  தயாரிப்பில் one hand mode  அம்சத்தை வைத்துள்ளது. அதன் மூலம் சிரமம் இன்றி ஒரே கையில் நாம் keyboard பயன்படுத்த முடியும்.


இதனை பயன்படுத்த ஜி போர்ட் மேல் பகுதியில்  புள்ளிகளை கொண்டு ஆப்ஷன் தொடுங்கங்கள், அங்கே one hand mode என்று இருக்கும்.அதனை தொடுவதன் மூலம் உங்கள் கீபோர்டு சற்று சிறிதாக மாறிவிடும்.


மேலும் இதனை பக்கவாட்டில் உள்ள குறியீடு பட்டன் மூலம் நீங்கள் வலது மற்றும் இடது புறமாக மாற்றிக் கொள்ளலாம்.


பக்கவாட்டின் கீழ் பகுதியில் உள்ள குறியீடு பட்டன் தொடுவதன் மூலம் கீபோர்ட் அளவினை சிறிதாகவும் மாற்றி கொள்ளலாம்.


பக்கபாட்டின் மேல் பகுதியில் உள்ள பட்டனை தொடுவதன் மூலம் கீபோர்டை பழையபடி பெரிதாக மாற்றிக் கொள்ளலாம்.



வாட்ஸ் அப்பில் தேவையில்லாத போட்டோ, வீடியோ, டவுன்லோட் தடுப்பது மற்றும் அழிப்பது எப்படி..? 



Keyboard theme


Gboard இல் கீ போர்டின் theme நமக்கு பிடித்த வண்ணத்தில் மாற்றிக் கொள்ளலாம். Gboard செட்டிங் இல் theme பின்பகுதியில் பல வகையான தேர்வுகளில் themes அளிக்கப்பட்டுள்ளது.


உங்களுக்கு பிடித்த வண்ணங்கள் மற்றும் இமேஜ் வடிவிலான theme மாற்றிக் கொள்ளலாம்.


Theme பகுதியில் my theme என்ற தேர்வை தொடுவதன் மூலம்,உங்களுக்கு பிடித்தமான போட்டோக்களை theme ஆக மாற்றிக் கொள்ளலாம்.



Remove auto-suggested word


நீங்கள் எழுத்துக்களை டைப் செய்யும் பொழுது,அதற்கு சம்மந்தமான வார்த்தைகளை ஜிபோர்டு மேல் பகுதியில் Suggestion ஆக காட்டும்.


அது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை முழுமையாக டைப் செய்யாமல் எளிதாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


ஒரு சில சமயங்களில் நமக்கு தேவையில்லாத,சம்பந்தம் இல்லாத வார்த்தைகள் காண்பிக்கலாம்.அதனை அழிப்பதற்கு அந்த வார்த்தை காண்பிக்கும் பொழுது, அதனை தொடர்ந்து அழுத்துவதன் மூலம் அதனை அழிக்கலாம்.



Text selection


பெரிய பதிவு உள்ளது கட்டுரை வார்த்தைகளை தேர்ந்த தேர்ந்தெடுத்து அதனை copy, cut செய்வதென்பது சற்று கடினமாகவே இருக்கும். ஆனால் ஜி போர்ட் பயன்படுத்தும் பொழுது அதனை எளிமையான செய்ய முடியும்.


இதனை செய்வதற்கு ஜி போர்டு மேல் பகுதியில் மூன்று புள்ளிகள் கொண்ட பகுதிக்கு சென்றால்,அங்கே text editing

இருக்கும். ஆனால் சென்று நமக்கு தேவையான இடத்தில் cursor வைத்துக்கொண்டு, அதில் இருந்து முன் பின் மேல் கீழ் select செய்யலாம்.பின் அதனை copy அல்லது cut செய்துகொள்ளலாம்.



Floating keyboard


உங்களுக்கு ஸ்மார்ட்போனின் கீழ் பகுதியில் keyboard இருப்பது பிடிக்கவில்லை என்றால்,அதனை உங்களுக்கு பிடித்த இடத்தில் நகர்த்திக் கொள்ளலாம்.


இதனை செய்வதற்கு கீபோர்டின் மேல் பகுதியில் உள்ள மூன்று புள்ளிகள் உள்ள பகுதிக்கு உள் சென்று அங்கு floating keyboard என்ற அம்சத்தை on செய்து கொள்ளலாம்.


இதன்பு நீங்கள் பழைய நிலைக்கு உங்கள் keyboard ஐ கொண்டு வர விரும்பினால், அதே பகுதிக்கு சென்று மீண்டும் அதனை off செய்து கொள்ளலாம்.



Bitmoji


உங்கள் Gboard இல் Bit emoji வழங்கப்பட்டுள்ளது.அதனை நீங்கள் பயன்படுத்த விரும்பினால்.keyboard மேல் பகுதியில் சிறிய Emoji போன்ற படம் கொடுக்கப்பட்டிருக்கும்.அதனை தொடுவதன் மூலம் உங்களுக்கு Bitmoji க்கள் கிடைக்கும்.



நீங்கள் புதிதாக இந்த அம்சத்தை பயன்படுத்தினால்   Bitmoji என்ற செயலியை இன்ஸ்டால் செய்து,அதில் உங்களுக்கான கணக்கு மற்றும் உங்களுக்கான அவதார் உருவாக்கி பின் அதன் வடிவமைப்பிலேயே Bitmoji   பயன்படுத்தலாம்.




Gboard தொடர்ந்து புதிய புதிய அம்சங்களை வழங்கிக் கொண்டே இருக்கிறது அவை நமக்கு சிறந்த கீபோர்ட் பயன்படுத்தும் அனுபவத்தை அளிக்கிறது. இதன் புதிய அம்சங்களை பெறுவதற்கு தொடர்ந்து உங்களுடைய Gboard செயலியை அப்டேட் ஆக வைத்துக் கொள்ளுங்கள்.



பலருக்கும் தெரியாத டெலிகிராம் 10 அம்சங்கள்














Post a Comment

Previous Post Next Post