தொழில்நுட்ப உலகில் பெரிய புரட்சியை ஏற்படுத்திய தொழில்நுட்பங்கள் | Life changing technology

Technology


தொழில் நுட்பங்கள் technology நாளுக்கு நாள் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து கொண்டே வருகின்றது. அவற்றில் ஒரு சில தொழில்நுட்பங்கள் புரட்சியை ஏற்படுத்தும்.


அந்த வகையில் ஒரு சில தொழில் நுட்பங்கள் future technology அடுத்த தலைமுறைக்கு உண்டான மாற்றத்தை உண்டாக்கும். அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பத்தில் பெரிய மாற்றத்தை அல்லது புதிய புரட்சியை உண்டாக்கிய தொழில்நுட்பங்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.



சமூக வலைதளங்கள்

2006 ஆம் ஆண்டு தான் சமூக வலைத்தளங்களில் ஒரு பெரிய புரட்சி உருவான ஆண்டாக கூறலாம். அந்த ஆண்டில் தான் Myspace என்ற நிறுவனம் Facebook வலைத்தளம் 13 வயதிற்குமேல் உள்ள மாணவர்கள் மாணவிகள் தங்கள் இமெயில் கணக்கை பயன்படுத்தி கணக்கை துவங்க வழி செய்தது.

அதே ஆண்டில் தான் ஜூலை மாதம் ட்விட்டர் துவங்கப்பட்டது. Youtube அதற்கு ஒரு வருடம் முன்பு துவங்கப்பட்டது.Facebook மற்றும் Twitter மக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் தகவல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பரிமாற்றம் செய்து கொள்ள பெரிதும் உதவியது.

மக்கள் facebook, twitter இதனை அதிக அளவில் பயன்படுத்த துவங்கினர்.உலகெங்கிலும் நடக்கும் நிகழ்வுகள் எளிதில் தெரிந்து கொள்ள உதவுகிறது.மக்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் பெரிய புரட்சியை உண்டாக்கியது. 



Netflix

2007 ஆம் ஆண்டு Netflix நிறுவனம் Computer மூலம் Online இல் வீடியோ Netflix series பார்க்கும் வசதியை அறிமுகம் செய்தது.

அதற்கு அடுத்த ஆண்டு தான் Xbox 360's, Blu Ray disc Players, and TV set top Boxes தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.



Self driving cars

கூகுள் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு தானாக இயங்கும் கார் உருவாக்கியது.Google cars அதனை அமெரிக்காவின் பிரபலமான நகரங்களில் இரண்டு மில்லியன் மைல் வரை பரிசோதித்து வெற்றி கண்டது.

Self driving cars தற்பொழுது வரை முழுமையான பயன்பாட்டிற்கு வரவில்லை. வரும் காலங்களில் அன்றாட பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது.

நம்முடைய பிள்ளைகள் காலங்களில் சாதாரணமாக பயன்படுத்தும் வகையில் Self driving cars இருக்கும். தற்பொழுது நாம் இணைய சேவையை பயன்படுத்துவது போல அவர்கள் self driving cars பயன்படுத்துவார்கள்.



இன்ஸ்டாகிராமில் உங்கள் followers எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி..?


Android software

கூகுள் நிறுவனம் 2010 ஆம் ஆண்டு ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தை அறிமுகம் செய்தது.iPhone க்கு போட்டியாக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. விற்பனையில் ஐபோனை விட ஆண்ட்ராய்டு Android smartphones ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் விற்பனையானது.



Tesla cars

டெஸ்லா நிறுவனம் 2008 ஆம் ஆண்டு தனது முதல் முழுமையான மின்சார கார் அறிமுகம் செய்தது. இந்த Tesla car கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 மைல் வரை செல்லும். இதன் பின் அடுத்த மாடல் 3, 35000 டாலர் என்ற விலையில் வெளியிட்டது இதன் மூலம் நடுத்தர மக்களும் மின்சார கார் வாங்கும் கனவே நிறைவேற்றினர்.




Tablets

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய தயாரிப்புகள் மூலம் வடிவமைப்பில் பெரிய புரட்சிகளை உண்டாக்கிக் கொண்டிருந்தது. 2010 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் புதிதாக iPad என்ற தயாரிப்பை வெளியிட்டது.

பலரும் கணினிக்கு பதிலாக ஐபேட் Apple ipad பயன்படுத்த தொடங்கினார். மேலும் பல பயன்பாட்டிற்கு ஐபேட் உதவியது Netflix, Pinterest, மற்றும் Games போன்ற பயன்பாட்டிற்கு கணினி மற்றும் ஸ்மார்ட்போனுக்கு இடையில் சிறந்த சாதனமாக இருந்தது.



AR device 

Google நிறுவனம் 2014 ஆம் ஆண்டு Augmented Reality தொழிநுட்பம் உடைய Glass அறிமுகம் செய்தது.AR தொழில்நுட்பம் 1992 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் கூகுள் நிறுவனம் அதனை அனைவரும் பயன்படுத்தும் வகையில்,ஸ்மார்ட்போன் பயன்படுத்தி Glass மூலம் 3D வடிவமைப்பில் பார்க்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது.



Hoverboard

Hoverboard ஒரு science fiction சாதனமாகவே பார்க்கப்பட்டது 1992 ஆம் ஆண்டு வெளியான Back to the future 2 திரைப்படத்தில் இந்த சாதனம் காண்பிக்கப்படும்.

ஆனால் நிகழ்காலத்தில் இதனை உருவாக்கி பயன்படுத்துவது என்பது ஒரு சவாலாகவே இருந்தது. இது Skateboard அடிப்படையில் உருவாக்க பட்டது.

2013 ஆம் ஆண்டு நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது.



டெலிகிராம் மூலம் வருமானம் பெறுவது எப்படி...?


EMV Chips

EMV (Europay, MasterCard and Visa) chips அனைத்து Debit மற்றும் icici,Hdfc, Sbi all Credit கார்டுகளில்  சேர்க்கப்பட்டது. இது நம்முடைய தகவல்கள் தேடப்படுவதில் இருந்தே நம்மை பாதுகாக்கிறது.

இந்த chip இல் நம்முடைய தகவல்கள் அனைத்தும் பதியப்பட்டிருக்கும்.இது தனித்துவமானது இதனை எளிதில் திருடவோ அல்லது பதிப்பு எடுக்கவோ முடியாது.

சாதாரண கார்டுகளில் தகவல்கள் எளிதாக திருடப்பட்டு நகல் எடுக்கபடலாம்.ஆனால் EMV கார்ட் chip cards ஒரு தனித்துவமான பரிவர்த்தனை குறியீட்டை பயன்படுத்தும் பொழுது  உருவாக்குகிறது. இதனால் இதை எளிதில் திருட முடியாது.



Drone

Drone பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும். அமேசான் நிறுவனம் 2016ம் ஆண்டு முதல் பயன்படுத்தி தனது டெலிவரி செய்யத் தொடங்கியது.amazon prime மூலம் இரண்டு மணி நேரத்தில் டெலிவரிகளை மேற்கொண்டது. பெரிய நகரங்களில் Distribution Centre அருகிலுள்ள பகுதிகளுக்கு drone மூலம் பொருட்களை டெலிவரி செய்தது.

ஆனால் இது இன்னும் சற்று சவாலாகவே உள்ளது.ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் பொழுது காற்றின் நிலை மற்றும் ட்ரோன் பேட்டரி அளவு முதலியவை சவாலாக உள்ளது.

வரும் காலங்களில் இதற்கு தீர்வு கிடைக்கும். அமேசான் நிறுவனம் Amazon delivery தொடர்ந்து சோதனை செய்து கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்களில் முழுமையாக ட்ரோன் மூலம் நாம் டெலிவரி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.



 மேலே குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் உலகில் அனைத்து நாடுகளிலும் இன்னும் முழுமையாக வளர்ச்சி பெறவில்லை, இருந்தபோதிலும் அவை பல நாடுகளிலும் நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது.


ஆனால் வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பங்கள் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படும்.Future technologies மேலும் இந்தத் தொழில் நுட்பங்கள் நமது வாழ்வில் பெரும் மாற்றங்களை உண்டாக்கி உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை,வரும் காலங்களில் இதனை அடிப்படையாகக் கொண்டுதான் தொழில்நுட்பங்கள் மேலும் முன்னேற்றம் அடையும்.



Post a Comment

Previous Post Next Post