Redmi Note 12 series sales date and price in india | Redmi Note 12 series இந்தியாவில் அறிமுக தேதி மற்றும் விலைகள்

               

Redmi Note 12 price

    

Xiaomi நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு Redmi Note 12 series விற்பனைக்கு அறிமுகம் செய்தது.210w fast charging, 200mp primary camera மற்றும் FHD+ AMOLED Display 120hz refresh rate போன்ற பல முக்கியமான அம்சங்களை வழங்கி உள்ளது.

சியோமி நிறுவனம் Redmi note 12 series ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வருகின்ற 2023 ஜனவரி 5ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

Redmi Note 12 வரிசையில் Redmi note 12, Redmi note 12 pro, Redmi note 12 pro + மாடல்கள் விற்பனைக்கு வர உள்ளது.

இந்த விற்பனையில் அனைவரும் எதிர் பார்த்த Redmi Note 12 Explorer Edition விற்பனைக்கு வருவதை பற்றி ஏதும் குறிப்பிடவில்லை, இந்த ஸ்மார்ட்போனில் தான் உலகில் 210w fast charge அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன் என்று கூறப்பட்டது.


Redmi Note 12 pro + and Redmi Note 12 Specifications 

Redmi நிறுவனத்தின் முந்தைய மாடலான Redmi Note 11 pro + மாடலின் வெற்றியை தொடர்ந்து அதே போல் தற்பொழுது Redmi நிறுவனம் Redmi Note 12 Pro+ என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளது.

இதில் 6.67 இன்ச் அளவில் FHD+ பேனல் உடன் Amoled display 120Hz refresh rate தரத்தில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இது மூன்று கேமரா அமைப்பை கொண்டுள்ளது.அதில் 200MP முதன்மை கேமரா, 8mp அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2MP Macro lense வழங்கப்பட்டுள்ளது.

Redmi Note 12 Pro+ ஸ்மார்ட்போன் Mediatek Dimensity 1080 Soc சிப்செட் உடன் வருகிறது.மேலும் இதில் 12 ஜிபி வரை ரேம் தேர்வுகளில் வர உள்ளது. மெமரி பொறுத்தவரை 256ஜிபி வரை தேர்வுகளில் வர உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு 5G network sim ஆதரவுடன் triband wifi மற்றும் ப்ளூடூத் 5.2 வசதியுடன் வருகிறது.

Redmi Note 12 Pro + இல் 5000mAh அளவுள்ள பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.அதனுடன் 120W Fast charging அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு MIUI 13 உடன் வருகிறது.வரும் காலங்களில் ஆண்ட்ராய்டு 13 மற்றும் MIUI 14 update செய்துகொள்ளலாம் என்று கூறி உள்ளது.


ஏன் அனைத்து ஸ்மார்ட்போன்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி வடிவமைப்பை கொண்டுள்ளது...?


Redmi Note 12 Pro Specifications 

Redmi Note 12 Pro அம்சங்களை பார்க்கும் பொழுது ஒரு சிலவற்றை தவிர்த்து பெரும்பான்மையானவை Redmi Note 12 Pro + அம்சங்கள் உள்ளது.

200MP camera க்கு பதிலாக Redmi Note 12 Pro மாடலில் 50MP camera OIS Sony IMX766 சென்சார் உடன் வருகிறது.இரண்டு மாடல்களும் 16MP camera உடன் உள்ளது.


Redmi Note 12 specifications

Redmi Note 12 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+ OLED display மற்றும் 120Hz refresh rate உடன் வருகிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 4 gen 1 Soc சிப்செட் அளிக்கப்பட்டுள்ளது.

ரேம் 8ஜிபி அளவு வரை தேர்வில், மற்றும் மெமரி 128ஜிபி வரை தேர்வில் கிடைக்கிறது.

இது இரண்டு கேமரா அமைப்பை கொண்டுள்ளது.அதில் 48MP primary camera மற்றும் 2MP Macro lense வழங்கப்பட்டுள்ளது. 8MP முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 

விலைகள் பொறுத்தவரை Redmi Note 12 Pro + இந்தியாவில் Rs.25000 வரை விலையிலும்,Redmi Note 12 Pro விலை Rs.20000 வரை விலையிலும்,மேலும் Redmi Note 12 மாடல் Rs.15000 வரை விலையிலும் விற்பனைக்கு வரலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


ஸ்னாப்டிராகன் மற்றும் மீடியாடெக் சிப்செட் இரண்டில் எந்த சிப்செட் சிறந்தது..? நன்மைகள் தீமைகள்..?



Post a Comment

Previous Post Next Post