பலருக்கும் தெரியாத ஸ்மார்ட்போனில் உள்ள பயனுள்ள அம்சங்கள் | Unknowm Smartphone usefull features

பலருக்கும் தெரியாத ஸ்மார்ட்போனில் உள்ள பயனுள்ள அம்சங்கள் | Unknown Android Smartphone usefull features



ஸ்மார்ட்ப்போன் உலகில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டி நடந்து கொண்டே தான் உள்ளது.போட்டி போட்டு கொண்டு புதிய புதிய அம்சங்களை கொண்டுவந்து கொண்டிருக்கின்றனர்.


ஆண்ட்ராய்டு பொறுத்தவரை பல நிறுவனங்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொடுங்க ஸ்மார்ட்போன் தயாரிக்கின்றனர். எனவே தொடர்ந்து புதிய புதிய ஸ்மார்ட்போன்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அவற்றில்  புதிய smartphone features அம்சங்கள் அறிமுகம் செய்கின்றனர்.


அவற்றில் ஒரு சில முக்கியமான அம்சங்களை இங்கே தொகுத்து உள்ளோம்.தற்பொழுது உள்ள android features ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாக கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன் இல் உள்ள அம்சங்கள் கொடுத்துள்ளோம். அவற்றின் செட்டிங் அமைப்பில் சில மாறுதல்கள் இருக்கலாம்.




Smartphone features


பலருக்கும் தெரியாத 15 பயனுள்ள இணையதளங்கள் | 15 Usefull websites


1. Cast your Android Screen 

Cast screen அல்லது screen mirror என்ற அம்சங்கள் அறிமுகம் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டது.இதன் மூலம் எளிமையாக நம்முடைய ஸ்மார்ட்போன் ஐ நம்முடைய ஸ்மார்ட் டிவி உடன் இணைத்து நம்முடைய ஸ்மார்ட்போன் ஐ டிவியில் பார்க்கலாம்.


மேலும் அனைத்தையும் டிவியில் காணலாம். இந்த அம்சத்தை பயன்படுத்த உங்கள் ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் பகுதியில் அல்லது மேலே நோட்டிபிகேஷன் பகுதியில் SCREEN CAST அல்லது SCREENMIRROR என்ற அம்சம் அளிக்கப்படிருக்கும்.


இத்தனை பயன்படுத்தி WIFI மூலம் உங்கள் ஸ்மார்ட் டிவியை இணைத்து பயன்படுத்தலாம்.


CHROME CAST அம்சம் உங்கள் ஸ்மார்ட்போனில் GOOGLE HOME இன்ஸ்டால் செய்து அதன் மூலம் நீங்க CHROME CAST செய்து நீங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் அப்ளிகேசனை டிவியில் காணலாம்.



2. Run apps side-by-side


உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரே நேரத்தில் இரண்டு அப்ளிகேசன்கள் பயன்படுத்தலாம். இந்த அம்சம் பலருக்கும் தெரியாது.


இந்த அம்சத்தை ஆண்ட்ராய்டு 7 Nougat இல் அறிமுகம் செய்தது,ஒரே Screen இல் இரண்டாக பிரித்து மேலும் கேளுமாக பிரித்து இரண்டு அப்ளிகேசன்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.


இதனை பயன்படுத்த கீழ் இருந்து மேலாக மூன்று விரல்களை கொண்டு swipe செய்வதன் மூலம் screen இரண்டாக பிரித்து பயன்படுத்தலாம்.


 


3.Increase Text size


ஸ்மார்ட்போனில் போட்டோ அல்லது ஏதேனும் படிக்கும் பொழுது, உங்களால் தெளிவாக பார்க்க முடியாமல் இருக்கும் பொழுது, அதனை Zoom செய்து பார்ப்போம்.ஒரு சில அப்ளிகேசன்களில் அவ்வாறு செய்ய முடியாது.


இந்த காரணங்களுக்காக ஆண்ட்ராய்டு ஒரு அம்சத்தை அளித்துள்ளது.ஸ்மார்ட்போனில் Setting இல் Display setting சென்று அதில் Font Size மாற்றி கொள்ளலாம்.


நமக்கு தேவையான அளவிற்கு Font size பெரியதாகவோ சிறியதாகவோ மாற்றிக்கொள்ளலாம். இந்த அம்சம் வயசானவர்கள் எளிமையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்த உதவுகிறது.




4. Change sound settings


ஸ்மார்ட்போனில் உங்களுக்கு விரும்பும் வகையில் sound மாற்றிக்கொள்ளலாம். Call Ringtone, Notification, Message, Alarm அனைத்திற்கும் தனி தனியாக வைத்து கொள்ளலாம்.


மேலும் அதன் sound அளவை எளிமையாக Side Volume Button அழுத்துவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.


Volume button அழுத்தி,அதன் மூன்று Dot உள்ள Setting பகுதிக்கு சென்று, அதில் Slide செய்வதன் மூலம் எவ்வளவு நேரம் Silent mode இருக்க வேண்டும்,எவ்வளவு நேரம் வரை நோட்டிபிகேஷன் sound வர கூடாது என்பதை தீர்மானிக்கலாம்.



ஸ்மார்ட்போன் Hang ஆகுவதற்கான காரணங்கள் அதை எவ்வாறு தவிர்க்கலாம்..? How to solve mobile hanging problem..?


5. Disable lock automatic 


ஸ்மார்ட்போன் பாதுகாப்பாக பயன்படுத்த Password, pattern lock, Facelock,Fingerprint போன்ற வழிகளை பயன்படுத்துகிறோம்,இருந்தபோதிலும் சில நேரங்களில் அவைகள் நம்மை எரிச்சல் அடைய செய்யும்.


நாம் பாத்துக்காப்பான இடங்களில் இருக்கும் பொழுது lock தேவை இல்லை. அதற்காக அந்த நேரங்களில் Off செய்தும் வைக்க முடியாது.


இதற்காக Smart Lock அம்சம் உள்ளது, இதனை பயன்படுத்தலாம்.Settings இல் Smart lock பகுதியில் Trusted Place Map இல் தேர்ந்தெடுத்து சேமித்து வைத்து கொள்ளவேண்டும்.


அந்த இடங்களில் நாம் இருக்கும் பொழுது,தானாக unlock ஆகி விடும், மற்ற பகுதிகளுக்கு செல்லும் போது எப்பவும் போல் Lock செயல்பட ஆரம்பித்து விடும்.


இதன் மூலம் நாம் பாதுகாப்பாக உள்ள இடங்களில் Lock பயன்படுத்த தேவை இல்லை.



6.One-handed mode


தற்பொழுது வருகின்ற ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிளே அளவு பெரிதாகி கொண்டே செல்கிறது.அதனை ஒரு கையில் பயன்படுத்துவது கடினமாக உள்ளது.


மெசேஜ் டைப் செய்ய இரண்டு கை பயன்படுத்த வேண்டியுள்ளது.இதனை சுலபமாக்க கூகுள் நிறுவனம் G Board keyboard இல் புதிதாக One Hand Mode அறிமுகம் செய்தது.


இதன் மூலம் எளிதாக ஒரு கையை பயன்படுத்தி டைப் செய்யலாம்.நமக்கு தேவைப்படும் இடத்திற்கு நகர்த்தி கொள்ளலாம்.பல Keyboard software இல் One hand mode உள்ளது, ஆனால் Google Gboard போன்று எளிமையாக இருக்காது.



ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்துகொண்டே இருக்கின்றன.மேலும் நமது ஸ்மார்ட்போனில் நமக்கு தெரியாமல் பல அம்சங்கள் உள்ளன. அதனை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.அப்பொழுது தான் ஸ்மார்ட்போனின் முழு பயனையும் அடைய முடியும்.

பலர் ஒரு வருடத்திற்கு ஒரு முறை புதிதாக ஸ்மார்ட்போன் மாற்றுவர்கள்.எதற்காக மாற்றுக்கிறார்கள் என்று கேட்டால் புதிய அம்சங்கள் உடைய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும், என்பதற்காக வாங்கியதாக கூறுவார்கள்.

ஆனால் உண்மையில் அவர்கள் புதிதாக வாங்கும் ஸ்மார்ட்போனில் ஒரு சில அம்சங்கள் மட்டுமே புதிதாக இருக்கும். பெரும்பாலும் பழைய ஸ்மார்ட்போனில் இருப்பதை போன்றே இருக்கும். அதை பலரும் கவனிப்பது இல்லை.

அதற்கு பதிலாக நாம் பயன்படுத்தும்,ஸ்மார்ட்போன் smartphone features பற்றி முழுமையாக அறிந்துகொண்டு அதிலுள்ள அம்சங்கள் நமக்கு போதுமானதாக இல்லாத போது புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு யோசிக்கலாம்.







Post a Comment

Previous Post Next Post