பி.எஃப் கணக்கில் இருந்து ஏடிஎம், யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி – மே மாதம் முதல் அமல் | PF Amount withdraw through UPI and ATM

 பி.எஃப் கணக்கில் இருந்து ஏடிஎம், யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி – மே மாதம் முதல் அமல்


PF CLAIM
PF CLAIM


பி.எஃப் (Provident Fund) கணக்கில் இருந்து ஏடிஎம் மற்றும் யுபிஐ வழியாக பணம் பெறும் வசதி மே மாதம் முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


பி.எஃப் என்பது ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் ஒரு கட்டாய சேமிப்பு தொகையாகும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அனைவருக்கும் பி.எஃப் கணக்கு கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதன் அடிப்படையில், ஊழியர்கள் சம்பளத்தின் 12% வரை பி.எஃப் திட்டத்தில் செலுத்தப்பட வேண்டும். அவர்களின் பணிக்காலம் முழுவதும் இந்த கணக்கு செயலில் இருக்கும்.


பி.எஃப் கணக்கை மேலும் வசதியாக பயன்படுத்த புதிய EPFO 3.0 தொழில்நுட்பம் அறிமுகமாகிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் சுமிதா தவ்ரா இதற்கான விளக்கங்களை அளித்துள்ளார். புதிய முறையில், வங்கிக் கணக்கைப் போலவே, யுபிஐ வழியாக பி.எஃப் இருப்பை பார்க்கலாம். மேலும், தானியங்கி முறையில் ரூ.1 லட்சம் வரை சில நிமிடங்களுக்குள் எடுக்க முடியும்.


ஆதார் கார்டில் என்ன என்ன திருத்தங்கள் எத்தனை முறை செய்யலாம்..?


அதன்மீது, தேவையான வங்கிக் கணக்கில் பணத்தை மாற்றவும், பிரத்யேக அட்டையின் மூலம் ஏடிஎம் மூலமாக பணம் எடுத்துக் கொள்ளவும் கூட முடியும். இந்த புதிய வசதி மே மாத இறுதிக்குள் அல்லது ஜூன் மாதத்தில் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எந்த ஸ்மார்ட்போன் டிஸ்பிளே சிறந்தது OLED, AMOLED அல்லது LCD...?

Post a Comment

Previous Post Next Post