கேந்திரிய வித்யாலயா பள்ளி சேர்க்கை 2025-26 ஆரம்பம்
![]() |
KV SCHOOL ADMISSION |
கேந்திரிய வித்யாலயா பள்ளி சேர்க்கை 2025-26: கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகம் 2025-26ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முதல் வகுப்பு மற்றும் பாலர் பள்ளி (நிலை 1, 2 மற்றும் 3) ஆகிய வகுப்புகளுக்கு மார்ச் 7, 2025 காலை 10 மணி முதல் மார்ச் 21, 2025 இரவு 10 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
2-ம் வகுப்பு, பாலர் பள்ளி 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு ஏப்ரல் 2, 2025 முதல் ஏப்ரல் 11, 2025 வரை விண்ணப்பிக்கலாம். என்று அறிவித்துள்ளது இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் முதல் பட்டியல் ஏப்ரல் 17, 2025 அன்று வெளியிடப்படும். அந்தந்த வகுப்புகளில் உள்ள காலியிடங்களைப் பொறுத்து மாணவர் சேர்க்கை நடைபெறும்.
ஆதார் கார்டில் என்ன என்ன திருத்தங்கள் எத்தனை முறை செய்யலாம்..?
முதல் வகுப்புக்கு தற்பொழுது விண்ணப்பம் தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விண்ணப்பிக்கலாம். பிள்ளைகள் வயது பொறுத்தவரை 01/07/2017 முதல் 01/04/2019 தேதிகளுக்குள் பிறந்த பிள்ளைகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க குழந்தையின் பிறப்பு சான்று, மற்றும் போட்டோ தேவை, மேலும் EWS மற்றும் BPL ID சலுகையில் விண்ணப்பிக்க அதற்கான ஆவண விவரங்கள் இணையதளத்தில் அளிக்க வேண்டும். OBC வகுப்பில் விண்ணப்பிப்பவர்கள் அதற்கான OBC சான்றிதழை பள்ளியின் சேர்க்கையின் பொழுது பள்ளியில் வழங்க வேண்டும்.
உங்கள் வீட்டிற்கும் பள்ளிக்கும் இடையேயான தூரம் 5KM க்குள் இருந்தால், RTE முறையில் விண்ணப்பிக்கலாம் இதன் மூலம் விண்ணப்பிப்பவர்கள் குலுக்கல் அடிப்படையில் RTE யில் தேர்தெடுக்கப்படுவார்கள். அவ்வாறில்லாமல் உங்கள் வீடு பள்ளியில் இருந்து 5KM க்கு அதிகமாக இருந்தால், RTE அல்லாமல் சாதாரணமான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
Post a Comment