எந்த ஸ்மார்ட்போன் டிஸ்பிளே சிறந்தது OLED, AMOLED அல்லது LCD...?
நம்முடைய அணைத்து தேவைக்கும் ஸ்மார்ட்போன் சார்ந்து இருக்க வேண்டிய சூழல் உள்ளது. சிலர் தங்கள் வேலைகளில் மெயில், வாட்சப், மீட்டிங், போன்ற தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். அத்தகைய சூழலில் ஸ்மார்ட்போன் நன்றாக செயல்பட்டால்தான் எளிமையாக முடிக்க முடியும்.அதிக நேரம் பயன்படுத்தும் பொழுது அவை சில சமயம் எரிச்சல் அடைய செய்யும், கண் வலி ஏற்படுத்தும். இவற்றை தவிர்க்க ஸ்மார்ட்போன் வாங்கும்பொழுதே நம்முடைய தேவை பொறுத்து சிறந்த அம்சங்கள் உள்ள ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும்.
ஸ்மார்ட்போன் டிஸ்பிளேபொறுத்தவரை நன்றாக இருந்தால் தான் நம்மால் அதிக நேரம் பயன்படுத்த முடியும். மேலும் நம் கண்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. பலர் ஸ்மார்ட்போனில் சினிமா, ஆன்லைன் சீரிஸ், லைவ் ப்ரோக்ராம், பார்க்க தொடங்கிவிட்டனர். அவர்கள் ஸ்மார்ட்போன் டிஸ்பிளேசிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள் அவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப சிறந்த வீடியோ அனுபவத்தை கொடுக்கும் டிஸ்பிளேஉடைய ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Display தேர்ந்தெடுக்கும் பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள், பயன்படுத்துதல் அனுபவம், விலை போன்றவை குறித்து இந்த பதிவின் மூலம் காணலாம்.
பார்க்கும் அனுபவம்
OLED மற்றும் AMOLED டிஸ்ப்ளேக்கள் பார்வைக்கு வசீகரிக்கும் அனுபவத்தை வழங்குவதில் சிறந்து விளங்குகின்றன. தனிப்பட்ட பிக்சல் வெளிச்சம் துடிப்பான வண்ணங்கள், அடர்ந்த கருப்பு மற்றும் சிறந்த மாறுபட்ட விகிதங்களை அனுமதிக்கிறது. நீங்கள் வீடியோ பார்க்க, கேமிங்கிற்கு முன்னுரிமை அளித்தால், அல்லது பார்வை நிறைந்த உள்ளடக்கத்தை அனுபவித்தால், OLED அல்லது AMOLED டிஸ்ப்ளேக்கள் தேர்ந்தெடுங்கள். இந்த Display காட்சிகளின் அதிவேக தன்மை ஒட்டுமொத்த பார்வை அனுபவத்தை மேம்படுத்துகிறது, படங்களையும் வீடியோக்களையும் உயிர்ப்பிக்கிறது.
பேட்டரி சேமிப்பு
OLED மற்றும் AMOLED டிஸ்ப்ளேக்கள் LCD டிஸ்ப்ளேக்களை விட பேட்டரி அதிகம் சேமிக்கிறது.OLED மற்றும் AMOLED டிஸ்பிளேயில் கருப்பு உள்ளடக்கத்தைக் காண்பிக்கும் போது அந்த கருப்பு பகுதியில் உள்ள பிக்சல் அணைந்து விடுகின்றன. அவ்வாறு அணைக்கும் திறன் பேட்டரி ஆயுளை கணிசமாகப் பாதுகாக்கிறது. வீடியோ அல்லது போட்டோ பார்க்கும் பொழுது அதில் உள்ள கருப்பு பகுதி பிக்சல் அனைத்துவிடுவதால் அதன் மூலம் சார்ஜ் சேமிக்கப்படும் பொழுது உங்கள் ஸ்மார்ட்போன் சற்று நீண்ட நேரத்திற்கு பேட்டரி சார்ஜ் இருக்கும். சார்ஜ் அதிக நேரத்திற்கு இருக்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் OLED அல்லது AMOLED டிஸ்ப்ளே தேர்ந்தெடுங்கள்.
The 20 Best Offline Games on Android That Don't Need Internet
குறைபாடுகள்
OLED மற்றும் AMOLED டிஸ்ப்ளேக்கள் பல நன்மைகளை வழங்கினாலும், அவை சில குறைபாடுகளுடன் வருகின்றன.ஒரே படங்கள் அதிக நேரம் டிஸ்பிளேயில் இருக்கும் பொழுது அதே தோற்றத்தை மங்கலாக ஏற்படுத்தக்கூடிய பர்ன்-இன் பிரச்சினை உள்ளது.பிக்சல் ஷிஃப்டிங் மற்றும் ஸ்கிரீன் அளவுத்திருத்தம் போன்ற பல்வேறு நுட்பங்கள் மூலம் இந்த சிக்கலைத் தணிக்க உற்பத்தியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும், ஒரே உள்ளடக்கத்தை நீங்கள் பயன்படுத்தும் வகையில் இருந்தால், OLED மற்றும் AMOLED டிஸ்ப்ளே தேர்ந்தெடுப்பதை சற்று சிந்தித்து கொள்ளுங்கள்.
ஸ்மார்ட்போன் Display பொறுத்தவரை நம்முடைய தனிப்பட்ட பயன்பாட்டை பொறுத்து அதற்கு ஏற்றார் போல் Display தேர்ந்தெடுக்க வேண்டும். சிலர் அதிகமாக வீடியோ, கேம்ஸ், போன்றவை பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு OLED மற்றும் AMOLED Display உடைய ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாக இருக்கும். இவை சிறந்த காட்சி அனுபவங்கள், துடிப்பான வண்ணங்கள் வழங்குகின்றன.LCD Display விலை மலிவு மற்றும் அன்றாட தேவைகளுக்கு பணிகளுக்கு திருப்திகாரமான செயல் திறனை வழங்குகின்றன. OLED மற்றும் AMOLED Display ஒப்பிடும் பொழுது இதில் சற்று அதிகமான பேட்டரி சேமிப்பு கிடைக்கிறது. ஸ்மார்ட்போன் Display தேர்ந்தெடுக்கும் பொழுது அதன் விலை, மற்றும் நம்முடைய பயன்பாட்டை கருத்தில் கொண்டு எது சிறந்தது என்று சிந்தித்து செயல்படுவது அவசியம்.
Post a Comment