ஆதார் கார்டில் என்ன என்ன திருத்தங்கள் எத்தனை முறை செய்யலாம்..?
இந்தியாவின் முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றான ஆதார் கார்டு
ஆதார் கார்டு, இந்தியாவில் வழங்கப்படும் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். பள்ளியில் சேர Enrollment, வங்கி கணக்கு தொடங்குதல், அரசாங்க நலத்திட்டங்களை பெறுதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இது அவசியமானதாகும். ஆதார் கார்டில் தவறான தகவல்கள் இருந்தால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். இதைத் தவிர்க்க, (UIDAI) உங்கள் தகவல்களை புதுப்பிக்க ஆன்லைன் வசதியை வழங்கியுள்ளது.
ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான வரம்புகள்
ஆதார் கார்டில் உள்ள தகவல்களை திருத்துவதற்கு சில குறிப்பிட்ட வரம்புகள் உள்ளன. குறிப்பிட்ட சில தகவல்களை ஒரு முறைக்கு அதிகமாக மாற்ற முடியாது. எனவே, ஆதார் கார்டில் மாற்றம் செய்ய விரும்புவோர் இதுகுறித்து விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டும். ஆதார் கார்டில் பெயர் முதல் மொபைல் எண் வரை அனைத்து விவரங்களையும் திருத்துவதற்கு சில வரம்புகள் உள்ளது.
Correction Limits for Aadhaar Details
- Name – Can be updated twice in a lifetime.
- Date of Birth (DOB) – Can be updated only once, provided the change is within the acceptable range.
- Gender – Can be updated once in a lifetime.
- Address – No fixed limit; can be updated multiple times with valid proof.
- Mobile Number & Email ID – No fixed limit, but requires authentication.
மொபைல் எண் மாற்றம்
நவீன காலத்தில் பலரும் தங்களுடைய சிம் கார்டுகளை அடிக்கடி மாற்றி வருகின்றனர். இதனால், ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றியமைத்தல் மிகவும் முக்கியமானதாகிறது. ஏனெனில், பெரும்பாலான செயல்பாடுகளுக்கும் OTP சரிபார்ப்பு தேவையானது. உங்கள் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் செயலிழந்து இருந்தால், புதிய எண்ணை பதிவு செய்ய வேண்டும். UIDAI இதற்கு எந்தவித வரம்புகளையும் விதிக்கவில்லை, ஏனெனில் சிலர் தங்கள் மொபைல் எண்ணை அடிக்கடி மாற்றக்கூடும்.
பெயர் திருத்தம்
ஆதார் கார்டில் உள்ள பெயரை அதிகபட்சம் இரண்டு முறை மாற்ற மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், எழுத்துப்பிழை காரணமாக அல்லது திருமணத்திற்குப் பிறகு பெயரில் மாற்றம் தேவைப்படலாம். பெயரை மாற்றுவதற்கு, பான் கார்டு, பாஸ்போர்ட், திருமணச் சான்றிதழ் போன்ற ஆதாரங்களை வழங்க வேண்டும்.
பிறந்த தேதி மாற்றம்
ஒருவரது பிறந்த தேதியில் திருத்தம் செய்ய வேண்டுமானால், அதற்கான வாய்ப்பு வாழ்நாளில் ஒரே ஒரு முறையே மட்டுமே வழங்கப்படும். எனவே, பதிவு செய்யும் போதே பிறந்த தேதி சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
முகவரி மாற்றம்
மக்கள் தங்கள் வீடுகளை மாற்றும் பொழுது ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது, ஆதாரில் முகவரியை திருத்துவது அவசியம். UIDAI இதற்குப் பொதுவாக எந்த வரம்பையும் விதிக்கவில்லை, அதாவது எத்தனை முறை வேண்டுமானாலும் முகவரியை மாற்ற முடியும். இது வாடகை வீட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு உதவியாக இருக்கும்.
முகவரி மாற்றம் செய்வதற்கு அதற்கான சரியான ஆவணங்களை வைத்து ஆன்லைனில் மாற்றம் செய்யலாம்.
Gas Bill, Passport.
Bank Statement/Passbook, Post Office Account Statement/Passbook.
Ration Card, Voter ID Card, Driving License.
Government Photo ID Cards/Service Photo Identity Card issued by PSU போன்ற பல ஆவணங்கள் இதற்கு பயன்படுத்தலாம் ஆனால் அதில் ஆதார் கார்டில் உள்ளது போன்று உங்களுடைய பெயர் இருக்க வேண்டும்.
பெரும்பாலான மக்களுக்கு முகவரிக்கான ஆவணங்கள் சரியாக இருப்பதில்லை,எனவே இதற்கு எளிதான வழிகள்
1.தங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாருக்கேனும் முகவரி சரியாக இருந்தால் HOF விண்ணப்பம் பூர்த்தி செய்து அதன் மூலம் ஆன்லைனில் முகவரி மாற்றம் செய்யலாம்.
2.ஆதார் அப்டேஷன் விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்து அதில் அரசு டாக்டரிடம் சென்று கையொப்பம் பெற்று அந்த விண்ணப்பத்தை வைத்து முகவரி மாற்றம் செய்யலாம்
ஆன்லைன் மற்றும் நேரடியாக மாற்றக்கூடிய விவரங்கள்
UIDAI சில தகவல்களை ஆன்லைன் மூலமாகவே மாற்ற அனுமதிக்கிறது, ஆனால் சில தகவல்களை மாற்ற நேரடியாக ஆதார் பதிவு மையத்திற்குச் செல்லவேண்டும். காரணம், (Biometric) அடையாள உறுதி சில திருத்தங்களுக்கு கட்டாயமாகும்.
Post a Comment