Qualcomm Snapdragon vs. Mediatek; what is different..? Advantages Disadvantages..? ஸ்னாப்டிராகன் மற்றும் மீடியாடெக் சிப்செட் இரண்டில் எந்த சிப்செட் சிறந்தது..? நன்மைகள் தீமைகள்..?

ஸ்னாப்டிராகன் மற்றும் மீடியாடெக் சிப்செட் இரண்டில் எந்த சிப்செட் சிறந்தது..? நன்மைகள் தீமைகள்..? Qualcomm Snapdragon vs. Mediatek 

 
snapdragon vs mediatek in tamil

இன்றைய நவீன காலத்தில் ஸ்மார்ட்போன் ஒரு இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது.ஸ்மார்ட்போன் பல வகையான விலைகளில் கிடைக்கிறது.


விலைக்கு தகுந்தாற்போல் அதனுடைய அம்சங்கள் Smartphone features கொடுக்கப்பட்டிருக்கும்.ஸ்மார்ட்போன் விலை அடிப்படையில் பட்ஜெட்,மிட் ரேஞ்,மற்றும் பிரீமியம் போன்ற வகையில் விற்பனைக்கு உள்ளது.


புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்கள் ஸ்மார்ட்போன் விலை,டிசைன்,கேமரா,பேட்டரி போன்ற குறிப்பிட்ட சில அம்சங்களை மட்டுமே கவனித்து வாங்குகின்றனர்.அதனுடைய மிக முக்கியமான பகுதி Processor பற்றி கவனிப்பது இல்லை.


Processor பற்றி பேசும்பொழுது சந்தையில் வர கூடிய பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் Qualcomm Snapdragon மற்றும் Mediatek Processor கொண்டுள்ளது.அவற்றில் எது சிறந்தது என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம்.



ஸ்மார்ட்போனில் Processor என்றால் என்ன..? அதன் வேலை என்ன..?


Processor என்பது ஸ்மார்போனின் முக்கியமான ஒரு அங்கமாகும் இது ஸ்மார்ட்போனின் மூளை போன்றது,நீங்கள் ஸ்மார்ட்போனில் கொடுக்கும் கட்டளைகள் அனைத்தையும் திரையில் காட்சிகளாக மாற்றுகிறது.உங்கள் ஸ்மார்ட்போன் செயல்பாடுகள் அனைத்தையும் இதுவே இயக்குகிறது.


பல்வேறு அப்ளிகேஷன்கள் திறப்பது, இன்டர்நெட்டில் உலவுதல்,கேம்ஸ் விளையாடுதல் போன்ற அனைத்து வித செயல்களும் processor மூலம் நடைபெறுகிறது.இவை அனைத்தும் நன்றாக இயங்குவதற்கு Processor முக்கிய காரணமாக உள்ளது.


Processor ஒரு நொடிக்கு எத்தனை வழிமுறைகளை இயக்க முடியும் என்பதை கடிகார வேகம் தீர்மானிக்கிறது.அதாவது  1-Gigahertz (GHz) கடிகார வேகம் கொண்ட Processor ஒரு நொடிக்கு 1 பில்லியன் வழிமுறைகளை செயல்படுத்த முடியும்.எனவே அதிக கடிகார வேகம் கொண்ட Processor வேகமாக செயலாற்றி ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க உதவுகிறது.அதிக Ghz கடிகார வேகம் கொண்ட Processor ஸ்மார்ட்போன் சற்று விலை அதிகமாகவே இருக்கும்.


Processor CPU என்றும் அழைக்கப்படுகிறது, இது பல கோர்களை கொண்டுள்ளது.டூயல், குவாட், ஹெக்ஸா மற்றும் ஆக்டா கோர்.

ஸ்மார்ட்போனில் நீங்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்தால் அவை ஒரு வரிசையாக உருவாகும் அது ஒவ்வொன்றும் அடுத்த அடுத்த core களுக்கு பிரிந்து செயல்படுகிறது.


அந்த Core கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் செயல்படுத்தக்கூடிய அதிகபட்ச வழிமுறைகள் கொண்டுள்ளது.எந்தவித தடையும் இல்லாமல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்கள் சிறப்பாக இயங்க Processor முக்கிய காரணமாக உள்ளது.


எனவே நல்ல processor கொண்ட ஸ்மார்ட்போன்கள் மட்டுமே சிறப்பான பயன்படுத்தும் அனுபவத்தை அளிக்கும்.இவைகளை செய்வதற்கு இரண்டு பிரபலமான processor-கள் அதிகமான ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுகிறது.



குவால்காம் ஸ்னாப்டிராகன் vs மீடியாடெக் - நன்மை தீமைகள்


Mediatek


mediatek chipset

குவால்காம் மற்றும் எக்ஸினோஸை விட மீடியாடெக்கின் முக்கிய அம்சம் ஏறக்குறைய ஒரே செயல்திறன் கொண்ட மற்ற இரண்டு சிப்செட்களை விட இரண்டு மடங்கு விலை குறைவாக இருக்கும்,ஆனால் பயனர் அனுபவங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை.


மீடியாடெக்கின் சிப்செட் கொண்ட ஸ்மார்ட்போன் மிக விரைவாக வெப்பம் அடைவதாக கூறுகின்றனர்,(ஸ்னாப்டிராகன் 810 ல் அதே பிரச்சனை இருந்தது)


மீடியாடெக் சிப்செட் ஒரு செயலிக்கு அதிக கோர்களை வழங்குகின்றன.இதில் பயன்படுத்தப்படும் கிராபிக்ஸ் சிப் செய்ல்படுவதற்கு அதிக சக்தி எடுத்துக்கொள்கிறது இதன் காரணமாகவே பேட்டரி விரைவில் முடிகிறது.


Mediatek processor இல் அதிகமான core இருப்பதால் அவை ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்களை இயக்க உதவுகிறது.


அதிகமாக Game விளையாடுபவர்கள் குறைந்த விலையில் நல்ல ஸ்மார்ட்போன் எடுக்க விரும்பினால் Mediatek கொண்ட Processor mobile




Qualcomm Snapdragon 

snapdragon chipset


Qualcomm Snapdragon chipset மிகவும் பாதுகாப்பானது.குறைந்த அளவு மட்டுமே பேட்டரி திறன் பயன்படுத்தும் எனவே பேட்டரி அளவு நீண்ட நேரம் கிடைக்கும்.


மற்ற processor உடன் ஒப்பிடும் பொழுது இவை குறைந்த அளவே வெப்பத்தை வெளிப்படுத்தும்.சில நேரங்களில் அப்ளிகேஷன்கள் செயல்படுவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும்.


Mid range மற்றும் Premium மாடல் ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலும் இந்த processor பயன்படுத்தப்படும்,மேலும்இந்த processor கொண்ட ஸ்மார்ட்போன்கள் சற்று விலை அதிகமாக இருக்கும்.


பிரீமியம் வகை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் Snapdragon 888 சிப்செட் சிறப்பாக செயல்படும் அதற்கு இணையான  மீடியாடெக் சிப்செட் இல்லை,


நீங்கள் ஸ்மார்ட்போன் விலைகள் சற்று கவனித்தால் தெரியும், ரெட்மி நிறுவனத்தின் தற்பொழுது விற்பனையில் உள்ள Redmi note 10s மாடலும் ரியல்மி நிறுவனத்தின் Realme 8 இரண்டிலும் ஒரே Mediatek G95 processor தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.விலை பொறுத்தவரை Realme 8 சற்று அதிகமாக இருந்தது தற்பொழுது குறைத்துள்ளது.


இந்த இரண்டு நிறுவனத்தின் Pro மாடலில் Qualcomm Snapdragon processor பயன்படுத்தப்பட்டுள்ளது.Realme 8pro இல் Snapdragon 720G Adreno 618 GPU Redmi note 10pro மாடலில் Snapdragon 732G Adreno 618 GPU உள்ளது.விலை பொறுத்தவரை Realme 8pro Rs.20,000 Redmi note 10pro Rs.18000 என்ற விலையில் கிடைக்கிறது.


ஸ்மார்ட்போன் வாங்குபொழுது நல்ல processor கொண்ட ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுங்கள் அதேபோல் உங்கள் பயன்பாட்டை அதற்க்கு தகுந்தாற்போல் விலையில் தேர்ந்தெடுங்கள் சில ஸ்மார்ட்போன்கள் ஒரே அம்சங்கள் இருக்கும் ஆனால் விலையில் வித்தியாசங்கள் இருக்கும் காரணம்,அந்த நிறுவனத்தின் பெயரின் மதிப்பை பொறுத்தது VIVO,OPPO நிறுவங்கள் அளிக்க கூடிய அம்சங்கள் குறைந்த விலையில் Realme,Redmi நிறுவனங்கள் அளிக்கும் எனவே விலை மற்றும் அம்சங்களை நன்கு ஆராய்ந்து பின்பு வாங்குங்கள்.  


Post a Comment

Previous Post Next Post