ஸ்மார்ட்போன் Hang ஆகுவதற்கான காரணங்கள் அதை எவ்வாறு தவிர்க்கலாம்..? How to solve mobile hanging problem..?
ஸ்மார்ட்போனின் தேவை தற்பொழுது இன்றியமையாதாக மாறிவிட்டது.நம்முடைய அன்றாட பணிகள் பெரும்பாலும் ஸ்மார்ட்போன் சார்ந்தே உள்ளது.மேலும் இது நம்முடைய பணிகளை எளிதாக்கி விட்டது.எனவே ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பொழுது நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம்.
அவ்வாறு இல்லாமல் ஸ்மார்ட்போன் Hang ஆகுவது,freeze ஆகுதல் போன்றவை இருந்தால் நம்முடைய பணிகள் மட்டுமில்லாமல் தேவை இல்லாத மன உளைச்சல் ஏற்படும்.
ஸ்மார்ட்போன் Hang ஆகுவதற்கு பல காரணங்கள் உள்ளது.mobile hanging problem solution அவை Software அல்லது Hardware சம்பந்தமாகவும் இருக்கலாம்.இதற்கான முக்கிய சில காரணங்களை எவ்வாறு சரி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.
ஸ்மார்ட்போன் Hang ஆகுவதற்கு முக்கியமான சில காரணகள்..Why mobile hanging top reasons..?
Low Ram
நம்முடைய ஸ்மார்ட்போனில் உள்ள RAM தான் ஒரே நேரத்தில் பல அப்ளிகேஷன்கள் தடையின்றி பயன்படுத்த உதவுகிறது.அதுவே அப்ளிகேஷன்கள் வேகமாக இயங்க காரணமாக உள்ளது.RAM குறைவாக இருந்தால் அப்ளிகேஷன்கள் பயன்படுத்தும் பொழுது Hang ஆகும்.
Internal storage
தற்பொழுது வருகின்ற ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் அதிகமான Internal storage இருக்குமாறு கிடைக்கிறது.எனவே பெரும்பாலானோர் Memory card பயன்படுத்துவதில்லை,என்னதான் Internal storage அதிகமாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அதுவும் முழுமை அடைகிறது.அவை மற்ற அப்ளிகேஷன்கள் செயல்படுவதில் சிக்கல் ஏற்படுத்துகிறது.இதன் காரணமாக அப்ளிகேஷன்கள் பயன்படுத்தும் பொழுது Hang ஆகுவது,மெதுவாக செயல்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
Outdated Applications
ஸ்மார்ட்போனில் நாம் பயன்படுத்தும் அனைத்து அப்ளிகேஷன்களுக்கும் தொடர்ந்து குறிப்பிட்ட கால இடைவெளியில் Update அளிக்கப்படும்.இதன் மூலம் அப்ளிகேஷனில் உள்ள சிறிய சிறிய பிரச்சினைகள் உடனே சரி செய்யப்படும்.
அப்ளிக்கேஷன் நிறுவனம் Update அளிக்கும் பொழுது Update செய்யாமல் தொடர்ந்து பழைய அப்ளிக்கேஷன் பயன்படுத்தினால்,அதன் புதிய வசதிகளை பெற முடியாது மேலும் Hang அல்லது slow ஆக வாய்ப்புள்ளது.
Malware
தெரியாத வலைதளங்கள், அப்ளிகேஷன்கள் பயன்படுத்தும் பொழுது அதன் மூலம் Malware virus வர வாய்ப்புள்ளது.அதன் மூலம் நமக்கே தெரியாமல் சில அப்ளிகேஷன்கள் அல்லது கோப்புகள் நம்முடைய ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படுகின்றன.அவை நம் ஸ்மார்ட்போனை பாதித்து Hang ஆக செய்யும்.அது மட்டுமில்லாமல் ஸ்மார்ட்போனின் Memory-ஐ ஆக்கிரமித்து Storage முழுமை அடையசெய்கிறது.
படிக்க:
நம்முடைய மொபைல் Hack செய்யப்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு அறியலாம்..?
Smartphone Hang ஆகுவதை எவ்வாறு தடுக்கலாம் How to solve mobile hanging problem…?
ஸ்மார்ட்போன் வாங்கும்பொழுதே நம்முடைய தேவைக்கு ஏற்ப அதன் RAM, Internal storage,processor போன்றவற்றை கவனித்து வாங்க வேண்டும்.best mobile without hanging இதெல்லாம் நன்றாக இருந்தால் தான் ஸ்மார்ட்போன் செயல்பாடு நன்றாக இருக்கும்.
தேவையில்லாத அப்ளிகேஷன்கள் கேம்கள் Install செய்யாதீர்கள்.பின் அதனை நீங்கள் Uninstall செய்தாலும் அதன் சார்ந்த கோப்புகள் Delete ஆகாமல் ஸ்மார்ட்போனில் தங்கி விடுகிறது.
ஒரு சில அப்ளிகேஷன்கள் அதிகமான விளம்பரங்கள் காட்டும் அவை பெரும்பாலும் மெதுவாக தான் செயல்படும்.எனவே அத்தகைய அப்ளிகேஷன்கள் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுங்கள்
தேவையில்லாத கோப்புகள்,Cache போன்றவற்றை அவ்வப்பொழுது அழித்துவிடுங்கள் அவை internal memory ஐ வீணாக ஆக்கிரமிக்கும்.
Crack செய்த அப்ளிகேஷன்கள்,Prize money சார்ந்த இணையதளங்கள் பயன்படுத்தாதீர்கள்,அவை அவை உங்கள் ஸ்மார்ட்போனில் உங்களுக்கே தெரியாமல் Malware,virus வர செய்து பாதிப்படைய செய்யும் எனவே எப்பொழுதும் அதிகாரபூர்வமான இணையதளங்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் பயன்படுத்துங்கள்.
Conclusion
மேற்கூறிய வழிகளின் மூலம் உங்கள் ஸ்மார்ட்போன் Hang ஆகாமல் பார்த்துக்கொள்ளலாம்.இவையெல்லாம் செய்தும் உங்கள் ஸ்மார்ட்போன் Hang ஆனால் அதனை Service centre இல் அளித்து வேறு ஏதும் பிரச்சினை உள்ளதா என்று பாருங்கள்.
ஒரு சில நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் என்னதான் செய்தாலும் Hang ஆகுவதை தவிர்க்க முடியாது.best mobile without hanging காரணம் அதன் Processor அவை தான் ஸ்மார்ட்போன் வேகமாக இயங்க உதவி செய்கிறது.எனவே வாங்கும்பொழுது நல்ல processor கொண்ட ஸ்மார்ட்போன் வாங்குங்கள்.
படிக்க:
Snapdragon vs Mediatek எந்த Processor உள்ள ஸ்மார்ட்போன் சிறந்தது..?
Post a Comment