உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் போனை யாருக்காவது விற்பனை செய்ய போகிறீர்களா...? | Read this before sale your smartphone

உங்களுடைய ஆண்ட்ராய்டு மொபைல் போனை யாருக்காவது விற்பனை செய்ய போகிறீர்களா...?

 அதற்கு முன் இதனை படியுங்கள்..!


அனைவரும் வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது ஏதேனும் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்தாலோ,உடனே அதனை வாங்குவார்கள். தங்களுடைய பழைய போன்களை விற்பனை Online யாருக்காவது விற்பனை செய்வார்கள் அல்லது யாருக்காவது கொடுப்பார்கள்.

அத்தகைய சமயத்தில் தங்களுடைய பழைய மொபைலை Factory reset செய்து அனைத்தையும் டெலிட் செய்து விட்டு விற்பனை செய்வார்கள். நாம் அனைவரும் இதே தான் செய்வோம் factory reset செய்துவிட்டால் நம்முடைய  போனில் உள்ள தகவல்கள் அனைத்தும் டெலிட் ஆகிவிடும் என்று நம்புகிறோம். எனவேதான் பழைய மொபைலை அவ்வாறு செய்துவிட்டு விற்பனை செய்கிறோம்.
ஆனால் அது முற்றிலும் தவறு என்று தற்போது வெளிவந்த ஒரு அறிக்கையின்படி தெரிகிறது.



Avast நிறுவனத்தின் அறிக்கை


 Avast antivirus விற்பனை செய்யும் நிறுவனம் eBay இல் பழைய 20 ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை விலைக்கு வாங்கி அதனை ஒரு குறிப்பிட்ட சாஃப்ட்வேர் பயன்படுத்தி அந்த மொபைல் போன்களில் உள்ள பழைய தகவல்களை மீண்டும் எடுத்துள்ளது.

 அவற்றில் 1500 க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் கூடிய குடும்பப் புகைப்படங்கள்.

750 க்கும் மேற்பட்ட பெண்களின் அரை நிர்வாண முழு நிர்வாண புகைப்படங்கள்.

முன்னாள் சொந்தக்காரர்கள் தங்களைத் தாங்களே எடுத்துக் கொண்ட 250 க்கும் மேற்பட்ட அந்தரங்க புகைப்படங்கள்.

1000 க்கும் மேற்பட்ட கூகுள் தேடல்கள்.

750 க்கும் மேற்பட்ட மின்னஞ்சல் உரையாடல்கள் மற்றும் குறுந்தகவல்கள்.

250 க்கும் மேற்பட்ட அலைபேசி தொடர்புகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் போன்றவற்றை எடுத்துள்ளது.

அவாஸ்ட் நிறுவனம் எந்த மாடல் மொபைல் போனை ஆய்வு செய்தார்கள் அவை எந்த ஆண்ட்ராய்ட் பதிப்பு என்பதைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. 

ஆனால் மொபைல் நிறுவனத்தின் மூலம் கொடுக்கப்பட்ட Factory reset செய்தி அளிக்கப்பட்ட தகவல்கள் எவ்வாறு மீட்டெடுக்க முடிந்தது என்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

அவாஸ்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர் ஜூட் கோல்கன் CNET இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் எங்கள் நிறுவனம் இவ்வாறு செய்வதற்கு எந்த ஒரு சிறப்பான சாப்பிட்டவர்களையும் பயன்படுத்தவில்லை சந்தையில் எளிமையாக கிடைக்கக்கூடிய சாப்ட்வேர்களை பயன்படுத்தியே இவ்வாறு செய்துள்ளது.
மேலும் இது எந்த ஒரு நோக்கத்திற்காகவோ அல்லது எங்களின் திறமையை நிரூபிப்பதற்காகவோ செய்யவில்லை. மாறாக இது அனைவரும் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதற்காக  மட்டுமே செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.


என்ன செய்யலாம்..?


தற்போது உள்ள உலகில் அனைவருடைய முழு தகவல்களும் ஸ்மார்ட்போனில் தான் சேமித்து வைக்கப்படுகிறது அந்த ஸ்மார்ட் போனிலேயே நாம் பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறோம்.எனவே

நம்முடைய குடும்ப உறுப்பினர்கள் புகைப்படங்கள் மற்றும் அந்தரங்க புகைப்படங்களை ஸ்மார்ட்போனில் வைப்பதை தவிர்த்து கொள்ளவேண்டும்.

  பல்வேறு உபயோகத்திற்காக வும் ஸ்மார்ட்போனை தான் பயன்படுத்துகிறோம்.அத்தகைய ஸ்மார்ட்போன் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது.அவசியம் 

எனவே வாங்கும்போதே நல்ல நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை வாங்கவேண்டும்.

உங்களது பழைய போன்களை வெளிநபர்கள் யாருக்கும் விற்பனை செய்யாதீர்கள்.முடிந்தவரை உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கே உபயோகப்படுத்த கொடுத்து விடுங்கள்.

உங்களுக்கு தெரிந்த நபருக்கு விற்பனை செய்தாலும் அவரைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் விற்க்காதிற்கள்.

நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.





Post a Comment

Previous Post Next Post