WhatsApp upcoming 3 best features | வாட்ஸ்அப்பில் வர போகும் மூன்று புதிய அம்சங்கள்

 மார்க் ஜுக்கர்பெர்க் கூறிய வாட்ஸ்அப்பில் வர போகும் சிறந்த மூன்று அம்சங்கள்..

WhatsApp latest updates



பேஸ்புக் நிறுவனத்தின் WhatsApp தனது எஃப் 8 டெவலப்பர் மாநாட்டின் போது WhatsApp new features குறித்து ஒரு தகவலையும் கூறவில்லை,


ஆனால் சில தினங்களுக்கு முன் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் அடுத்த சில நாட்களில் வாட்ஸ் அப்பில் புதிய மூன்று அம்சங்கள் WhatsApp's new three features வர போவதாக கூறியுள்ளார்.


 புகழ்பெற்ற டிப்ஸ்டர் WABetaInfo சமீபத்தில் வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரி வில் காட்கார்ட் மற்றும் ஜுக்கர்பெர்க் ஆகியோருடன் கலந்துரையாட வாய்ப்பு கிடைத்தது. 


இந்த உரையாடலின் போது, ​​"Disappearing mode", "view once" மற்றும் "Multi device support" என்ற மூன்று புதிய அம்சங்கள் விரைவில் வாட்ஸ் அப்பில் வரப்போகிறது என்பதை ஜுக்கர்பெர்க் வெளிப்படுத்தினார்.


மேலும், அடுத்த சில வாரங்களில் வாட்ஸ்அப் பீட்டா சோதனை மல்டி-சாதன ஆதரவைத் தொடங்கும் என்பதற்கான உறுதியும் அளித்தார்.


படிக்க:

அமேசான் பற்றி தெரியாத சுவாரசியமான தகவல்கள்



வாட்ஸ்அப்பில் வர போகும் மூன்று புதிய அம்சங்கள் பற்றி காணலாம்

1.Disappearing mode

Disappearing mode அம்சம் மூலம் பயனர்கள் தாங்கள் அனுப்பிய மெசேஜ் மறைந்து போகும் வகையில் மாற்றலாம்.


இதனை அனைத்து வகையான உரையாடல்களிலும் பயன்படுத்தும் வகையில் அனுமதிக்கும்.


தெரியாதவர்களுக்கு மெசேஜ் பண்ணும் பொழுது அவை 7 நாட்களுக்குள் தானாக அழியும் அம்சத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சோதனை செய்தது.


தற்பொழுது பயனர் அனுப்பும் மெசேஜ் 24 மணி நேரத்திற்குள் தானாக அழியும் வண்ணம் புதிய அம்சத்தை சோதனை செய்வதாக தெரிகிறது.


WhatsApp feature



 2.View once

புகைப்படங்கள் / வீடியோக்களை ஒருமுறை காண்க அம்சத்தின் மூலம் 

வாட்ஸ்அப்பில் நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் "view once" அம்சம் இயக்கப்பட்டால், 


பெறுநர்கள் நீங்கள் அனுப்பும் புகைப்படம் அல்லது வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும்.புகைப்படம் அல்லது வீடியோவுடன் கூடிய செய்தி மெசேஜ் திறந்தவுடன் தானாகவே மறைந்துவிடும்.


இருப்பினும், வாட்ஸ்அப் பயனர்கள் இந்த இடைக்கால மீடியா கோப்புகளை ஸ்கிரீன் ஷாட் செய்ய அனுமதிக்கும் என்பது ஏமாற்றம் அளிக்கிறது.


பெறுநர் அவர்களின் புகைப்படம் அல்லது வீடியோவை வேறு எதும் வழிகளில் சேமித்தாரா என்பது அனுப்புநருக்குத் தெரியாமல் போகிறது.


இந்த அம்சம் மூலம் பயனர் தான் அனுப்பிய போட்டோ, வீடியோ பாதுகாப்பாக அனுப்பியது போல் உணர்கிறார்.


இது முழுக்க முழுக்க பயனரின் பாதுகாப்பை முதன்மை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டது என்று ஜுக்கர்பெர்க் கூறினார்.


"நாங்கள் ( view once ) ஒரு முறை பார்வையை வெளியிடத் தொடங்க உள்ளோம், எனவே நீங்கள் உள்ளடக்கத்தை அனுப்பலாம் மற்றும் நபர் அதைப் பார்த்த பிறகு அது மறைந்துவிடும்"


படிக்க:

நமக்கு தெரியாமல் மொபைல் மூலம் நமக்கு ஏற்படும் ஆபத்துகள் - 2021

 

3.Multi Device support

      இப்போது உள்ள பயன்பாடுகள் கருத்தில் கொண்டு WABetaInfo, வாட்ஸ்அப்பிற்கான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Multi device support பல சாதன ஆதரவின் அம்சம் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டனர்.


இதற்கு பதிலளிக்கும் விதமாக, உங்கள் முதன்மை சாதனம் இணையத்துடன் இணைக்கப்படாத போது, ​​"எல்லா செய்திகளையும் அனைத்து சாதனங்களிலும் கொண்டு வருவது ஒரு பெரிய தொழில்நுட்ப சவாலாக உள்ளது" என்று வில் காட்கார்ட் கூறினார்.


இருப்பினும், நிறுவனம் இந்த சிக்கலைத் தீர்த்துள்ளது, மேலும் அடுத்த இரண்டு மாதங்களில் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு Multi device support வழங்கும் என்று காட்கார்ட் கூறியுள்ளார்.


 இதன் மூலம்,உங்கள் முதன்மை சாதனம் இணையத்துடன் இணைக்கப்படாமல் பல தளங்களில் நீங்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்த முடியும்.


மேலும், இது ஐபாட் ஆதரவை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப்பை அனுமதிக்கும், மேலும் உங்கள் கணக்கில் 4 சாதனங்களை இணைக்க முடியும்.


மேற்கூறிய அனைத்தும் WhatsApp features அடுத்த சில மாதங்களில் வாட்ஸ்அப்பில் வருவது உறுதிசெய்யப்பட்ட சில புதிய அம்சங்கள் ஆகும்.


எனவே, நீங்கள் WhatsApp feature எந்த அம்சத்தை பெரிதும் எதிர் பார்க்கிறீர்கள் என்பதை கீழே கருத்துக்கள் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். 


Post a Comment

Previous Post Next Post