Unknown facts about Amazon | அமேசான் பற்றி தெரியாத சுவாரசியமான தகவல்கள்

Unknown facts about Amazon | அமேசான் பற்றி தெரியாத சுவாரசியமான தகவல்கள்



Amazon நிறுவனம் உலகம் முழுவதும் பல கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.அமேசான் நிறுவனம் ஜெப் பெசோஸ் என்பவரால் 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


இது அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்குகிறது. ஆரம்பத்தில் புத்தகங்கள் தங்களது வலைத்தளம் வாயிலாக விற்பனை செய்தது.


பின்பு ஆடியோ கேசட்டுகள், சிடிகள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்தது,பின்பு படிப்படியாக தன்னுடைய வணிகத்தை விரிவாக்கம் செய்தது.அமேசான் பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்கள் உண்டு.அதனை இங்கே காணலாம்.


1. அமேசான் தளத்திற்கு முதலில் 'abracadabra' என்று பெயர் வைத்தது.பின்பு அது மருவி 'cadabra' தவறாக என்று அழைக்கப்பட்டது.


ஜெஃப் பெசோஸின் வழக்கறிஞர் இந்தப் பெயர் தெளிவற்றது என்றும் கேடவர் 'cadabra' என்ற தவறான அர்த்தத்தை குறிக்கும் வகையில் அழைக்கப்படுகிறது என்று கூறினார்.


எனவே அதனை மாற்றி இறுதியில், அவர்கள் தென் அமெரிக்காவில் உள்ள நதியைக் குறிக்கும் அமேசான் என்ற பெயரைக் கொண்டு வந்தார்கள்.


உலகின் பெரிய நதி போலவே அங்கு அதிகமான புத்தகங்கள் வைத்திருக்கிறோம் என்ற அர்த்தம் தரும் வகையில் Amazon என்று பெயர் வைத்தது.


இதற்கிடையில் மேலும் சில பெயர்களை தேர்வு செய்தார்கள் அவற்றிற்கு இணையதளங்கள் உருவாக்கியிருந்தார்கள்.அவற்றில் ஒன்றுதான் Relentless.com இந்த முகவரிக்கு சென்றால் நீங்கள் Amazon தளத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்.


 2. அமேசான் நிறுவனம் முதன்முதலில் 1995 ஆம் ஆண்டு தான் தனது விற்பனையை தொடங்கியது. ஆரம்பத்தில் ஜெஃப் பெசோஸ் தனது வீட்டின் கேரேஜ் இல் புத்தகங்களின் விற்பனை சிறிய கடையாக ஆரம்பித்தார்.


இதுவே அவர்களுக்கு 2005 ஆம் ஆண்டு பெரிய வணிக இணையதளம் உருவாக்குவதற்கு அடிப்படையாக இருந்தது.


3.அமேசான் நிறுவனம் 2017 முதல் 2018 வரை இரண்டு ஆண்டுகள் கூட்டாட்சி வரி செலுத்தவில்லை அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதியோடு வரி விலக்கு பெற்றது.2005 முதல் 2014 வரை நாட்டின் பல இடங்களில் கிடங்குகளை கட்ட 600 டாலர்களை வரை வரி சலுகை பெற்றது.

 

4. 2018 ஆம் ஆண்டில் Amazon நிறுவனம் AWS மூலம் 37.3 பில்லியன் வருமானம் ஈட்டியது.AWS உடைய logo Amazon நிறுவனத்தின் logo போன்று இருக்கும்.ஆனால் சற்று வித்தியாசமாக இருக்கும். அமேசான் வலை சேவைகளை சுருக்கமாக AWS (Amazon Web service) என்று குறிக்கிறது.

Realme நிறுவனத்தின் புதிய 5G ஸ்மார்டபோன் Realme X7 max 5G இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்..?

தரவு சேமிப்பு, சக்தி மற்றும் தகவல் தொழில்நுட்ப வளங்கள் உள்ளிட்ட வணிகங்களுக்கான முழுமையான ஹோஸ்டிங் தீர்வை இது வழங்குகிறது.Amazon தனது சேவைகளை இதன் மூலம் செயல்படுத்துகிறது.


நாம் தினமும் பயன்படுத்தும் பல இணையதளங்கள் இதில் தான் இயங்குகின்றன.Netflix,Pinterest,Reddit,Etsy,Spotify etc.,போன்ற பல பெரிய நிறுவன இணையதளங்கள் AWS பயன்படுத்துகின்றனர்.அமேசானின் மொத்த வருவாயில் ஒரு முக்கிய பகுதி இந்த சேவையிலிருந்து வருகிறது. 2018 ஆம் ஆண்டில், AWS 7.3 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Amazon subsdaries


5. அமேசான் 41 துணை நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள் கொண்டுள்ளது.அவைகள் பின்வருமாறுAmazon India,AWS,Audible, Zappos.com,whole foods market,junglee.com,IMDB,Amazon Air,Alexa internet,Amazon pharmacy,Amazon studios,Amazon robotics,MGM television, Annapurna labs,bodylabs,abebooks.com,Amazon fresh,Amazon.ae,Ring,blinkhome,shopbop,woot,comixology,amazongo,zoox,fabric.com,amazon game studios,pillback,ivonasoftware,amazoneusarl,cuipersystem,create space,Amazon locker,AWS elemental,Tenmarks education Inc,Amazon technology Inc,canvas technology LLC,double helix games,போன்ற 41 துணை நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள் கொண்டுள்ளது.


6.அமேசான் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களின் செல்ல பிராணிகளை நிறுவனத்தை சுற்றி வைத்துக் கொள்ளலாம். 

அதற்கென்று தனியாக பாதுகாப்பு இடங்கள் உள்ளது.சியாட்டிலிலுள்ள அமேசான் வளாகத்தில் சுமார் 6,000 பணியாளர்களின் நாய்கள் உள்ளது.இது பணியாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவிட உதவுகிறது. 

அமேசான் தளத்தில் கிடைக்கக்கூடிய குறைவான விலையில் சிறந்த 10 பொருட்கள்

7.2018 ஆம் ஆண்டில், அமேசான் நிறுவனம் சியாட்டிலில் உள்ள தனது வளாகத்தை புதுப்பிக்கும் வகையில் பணியாளர்கள் இயற்கையோடு ஒன்றி வேலை செய்வதற்காக 400 க்கும் மேற்பட்ட தாவரங்களை கொண்டு ஸ்பியர்ஸை (கோலங்கள்) உருவாக்கியது.

அவை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தாவரங்கள் அடிக்கடி சுழற்றப்பட்டு அருகிலுள்ள ஒரு கிரீன்ஹவுஸில் சேமிக்கப்படுகின்றன.

Amazon இன் கார்ப்பரேட் ரியல் எஸ்டேட் மற்றும் வசதிகளின் துணைத் தலைவர் ஜான் ஸ்கொட்லர் பணி செய்யும் இடம் இயற்கையோடு ஒன்றி இருக்க வேண்டும் என இதனை உருவாக்கினர். 



Post a Comment

Previous Post Next Post