Realme X7 max 5G smartphone launch soon in India | ரியல்மி நிறுவனத்தின் புதிய Realme X7 max 5G ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்

 Realme நிறுவனத்தின் புதிய 5G ஸ்மார்டபோன் Realme X7 max 5G இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம்..?

Realme X7 max 5G features




Realme நிறுவனம் பட்ஜெட் ஸ்மார்ட்போன் விற்பனையில் Redmi க்கு போட்டியாக உள்ளது.தற்பொழுது பிரீமியம் ஸ்மார்ட்போன்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் Realme நிறுவனம்  தற்பொழுது Realme X7 max அறிமுகப்படுத்த உள்ளது.



முக்கிய சிறப்பம்சங்கள்

 

Relame X7 max மூலம் குறைந்த ஒளியில் சிறந்த புகைப்படங்கள் எடுக்கலாம்.


புதிய AI தொழிநுட்பம் மூலம் பாஸ்போர்ட் புகைப்பட பயன்முறை அளிக்கிறது. 


Super AMOLED டிஸ்பிளே மற்றும் ஸ்டீரியோ ஒலி அமைப்புடன் சிறந்த game அனுபவத்தை தருகிறது.


 புதிய Realme X7 max 5G சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ், சியோமி மற்றும் விவோ மாடல்களுக்கு போட்டியாக வரவுள்ளது. Realme X7 மற்றும்  Realme X7 pro மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 6 மாதங்களுக்குள் இந்த புதிய மாடல் Realme X7 max 5Gbஅறிமுகப்படுத்தியுள்ளது.

 

அதன் அம்சங்கள் மற்றும் திறன் அடிப்படையில் Rs.30000 விலைக்குள் mid premium வரிசையில் வரவுள்ளது.Realme X7 Max மாடலுக்கு ரூ.26,999 என்ற விலை நிர்ணயம் செய்துள்ளது.Realme X7 max 5G price in India,Realme X7 Max மாடல் விட Realme X7 pro அதிகமான அம்சங்கள் கொண்டுள்ளது ஆதலால் ரூ.29,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.   .


இதில் மிகப் பெரிய மாற்றம் MediaTek Dimensity 1200 SoC ஆகும், இது ரியல்மே எக்ஸ் 7 ப்ரோ ரீல்மே X7 pro க்கு சக்தி அளிக்கும் Dimensity 1000+ ஐ விட அதிக சக்தி வாய்ந்தது. இது மட்டுமல்லாமல் சிறந்த செயல்திறன் மிக்கதாகவும் கூறப்படுகிறது.இந்த செயலியில் core மற்றும் ஒருங்கிணைந்த மாலி-ஜி 77 கிராபிக்ஸ் உள்ளன.  நிலையான செயல்திறனை உறுதிப்படுத்த உதவும் ஒரு எஃகு மற்றும் செப்பு நீராவி குளிரூட்டும் முறை உள்ளது.



மேலும் இந்த SoC செயல்படுத்தும் விரிவான 5 ஜி ஆதரவையும் பெற்றுள்ளது என்பது இன்னும் சிறப்பு. இதில் இரு சிம்களிலும் முழுமையாக பயன்படுத்தும் அம்சம் மற்றும் 5 ஜி கேரியர் ஆகியவை அடங்கும். 5 ஜி இந்தியாவில் இன்னும் அறிமுகம் படுத்தவில்லை இன்னும் காலம் ஆகலாம்.இருந்தபோதிலும் இந்த முழு SoC இன் செயலாக்க சக்தியை இதில் சோதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.



Poco M3 pro 5G Specs and Price in India

Realme x7 price




Design


 இதன் மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றம் Realme X7 Max ஸ்டைலிங் ஆகும்.Realme 8 வரிசை மாடலில் இருந்து பின் புறத்தில் Dare to leap என்ற வாசகம்  எழுதப்பட்டிருக்கும். இந்த design ரியல்மே எக்ஸ் 7 மற்றும் எக்ஸ் 7 ப்ரோ ஆகியவற்றின் பின் புறத்தில் இல்லை இதில் Realme லோகோ உடன் சேர்த்து Dare to leap கவர்ச்சிகரமாக அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.



கேமரா 


கேமரா பொறுத்தவரை இதில் 3 பின் பக்க கேமரா அமைப்பை கொண்டுள்ளது.இதில் 64Mp முதன்மை கேமரா,8mp அல்ட்ரா வைட் கேமரா,2mp மேக்ரோ கேமரா அளிக்கப்பட்டுள்ளது.இதில் punch hole அமைப்பில் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது.முன் பக்கம் கேமரா குறித்து தகவல் இல்லை,இதில் 16mp கேமரா கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



நமக்கு தெரியாமல் மொபைல் மூலம் நமக்கு ஏற்படும் ஆபத்துகள் - 2021 - Part 1 I Mobile hidden security threats in 2021



சார்ஜ் மற்றும் பேட்டரி



Fast charging feature




Realme X7 max 5G ஸ்மார்ட்போனில் superdart தொழில்நுட்பத்தில் 50W பாஸ்ட் சார்ஜ் அம்சம் அளிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 0-50% சார்ஜ் செய்ய 16நிமிடம் போதும்,இதன் பேட்டரி அளவு குறித்து தகவல் இல்லை ஆனால் இதில் 4500 mAh பேட்டரி கொடுக்கப்படும் என்று தெரிகிறது.


Realme X7 max 5G ஸ்மார்ட்போனில் ரேம் 12Gb வரை அளிக்கப்பட்டுள்ளது..மேலும் இதில் UFS 3.1 256Gb வரை internal storage வழங்கப்படுகிறது.இதன் முழுமையான அம்சங்கள் குறித்து அதன் அறிமுகம் செய்யும் பொழுது தான் தெரியும்.





Post a Comment

Previous Post Next Post