Xiaomi நிறுவனத்தின் MIUI 14 புதிய அப்டேட் மற்றும் அம்சங்கள் | Xioami new update MIUI 14 Features

Xiaomi Miui 14 features


சியோமி நிறுவனம் தற்பொழுது தனது புதிய அப்டேட் ஆன MIUI 14 அறிமுகம் செய்துள்ளது. தங்களுடைய ஒரு சில மாடல்களுக்கு அதன் அப்டேட் வழங்கி உள்ளது. 

விரைவில் அது அறிவித்துள்ள மற்ற மாடல்களுக்கும் வழங்கலாம், என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த புதிய MIUI 14 பதிப்பில் எக்கச்சக்கமான அம்சங்களை வழங்கி உள்ளது, அவற்றில் முக்கியமானவற்றை இந்த பதிவில் காணலாம்.


Folders 

இதற்கு முன்பு வந்த MIUI 13-ல் கொடுக்கப்பட்டதை விட சற்று பெரிதாக போல்டர்களை மாற்றிக் கொள்ளும் வகையில் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. 

அதாவது அப்ளிகேஷன்களை ஒரே போல்டரில் வைக்கும் பொழுது, அப்ளிகேஷன்கள் சற்று சிறிதாக இருக்கும். 

தற்பொழுது அது பெரிதாக உள்ளது எனவே எளிமையாக பயன்படுத்தும் வகையில் உள்ளது.


Search bar

சர்ச் ஃபார் கீழே வழங்கப்பட்டுள்ளது.அதன் மூலம் நீங்கள் ஸ்மார்ட் போனில் அப்ளிக்கேஷன் மற்றும் எந்தவித பைலையும் எளிமையாக சர்ச் செய்து எடுக்க முடியும். 

விரைவில் அதனுடன் கூகுள் அசிஸ்டன்ட் சேர்த்து வழங்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் நீங்கள் உங்களுக்கு தேவையானவற்றை இன்டர்நெட்டிலும் எளிமையாக தேடலாம்.


Camera widgets

Camera widget என்ற புதிய அம்சம் கொடுக்க பட்டுள்ளது. பொதுவாக நாம் ஸ்மார்ட் போனில் கேமரா பயன்படுத்தும் பொழுது, அதில் அதிகமான ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். 

அதனை ஒவ்வொன்றாக தேவைப்படும் பொழுது, தேர்ந்தெடுத்து பயன்படுத்துவோம்.தற்பொழுது அதனை வெட்ஜெட்களாக எடுத்து முன்பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு தேவையான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எளிமையாக Widgets மூலம் அந்த ஆப்ஷனை நேரடியாக பயன்படுத்தலாம்.இது இரண்டு போலர்கள் அமைப்பில்  கேமரா widgets வழங்கப்பட்டுள்ளது.


Detect gaze

ஸ்மார்ட் போனை அதிக நேரம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பொழுது, இடையில் ஏதேனும் வேலையோ அல்லது நாம் தூங்கவோ வாய்ப்பு உள்ளது. 

அந்த மாதிரியான நேரத்தில் ஸ்மார்ட்போன் லாக் ஆகுவதற்கு ஒரு சில நிமிடங்களோ அல்லது நேரங்கள் எடுத்துக்கொள்ளும். தற்பொழுது அதனை தவிர்க்கும் விதமாக நாம் ஸ்மார்ட்போன் பயன்படுத்திக் கொண்டிருக்கும்.

 பொழுது, வேறு ஏதும் வேலையோ அல்லது தூங்கவோ செய்யும் பொழுது ஸ்மார்ட் போன் ஸ்கிரீன் தானாக அதனை சென்சார் உதவியுடன் கண்டுபிடித்து ஸ்கிரீனை லாக் செய்யும். 


Xiaomi Redmi Note 12 Series features and price in tamil


Voice shutter

இந்த அம்சம் முன்பு ஒரு சில ஸ்மார்ட்போன்களில் கொடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது MIUI 14 இல் கொடுக்கப்பட்டுள்ளது.

 அதாவது நீங்கள் போட்டோ எடுக்கும் பொழுது Seaze என்ற வார்த்தையை கூறினால், போட்டோ தானாக எடுக்கும் இதன் மூலம் நீங்கள் எதனையும் டச் செய்யவோ அல்லது வேறு எதுவும் செய்யவோ தேவையில்லை.வாய்ஸ் கமெண்ட் மூலம் எளிமையாக போட்டோ எடுக்கலாம்.


Text extract

நீங்கள் ஏதேனும் ஒரு இடத்தை அல்லது ஏதேனும் ஒரு புத்தகத்தை போட்டோ எடுக்கும் பொழுது, அதில் உள்ள வார்த்தைகளை எளிமையாக காப்பி செய்து அதனை உங்களுக்கு தேவையான இடத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த அம்சம் இதற்கு முன் iphone மற்றும் சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டுள்ளது.அது சிறப்பாகவும் செயல்படுகிறது.

 தற்பொழுது சியோமி நிறுவனம் MIUI 14 இல் வழங்கியுள்ளது. இது சிறந்த அம்சமாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.


Incognify mode

Incognify mode அம்சம் வழங்கப்பட்டுள்ளது.இதனை ஆன் செய்யும்பொழுது மைக் கேமரா லொகேஷன் மூன்றும் செயல்படுவது நிறுத்தப்படும். இது உங்களுக்கு தேவையான இடங்களில் Incognify mode ஆன் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


பலருக்கும் தெரியாத 10 பயனுள்ள இணையதளங்கள் 


System apps

முன்பு ஸ்மார்ட் போனில் கொடுக்கப்பட்ட சிஸ்டம் அப்ளிகேஷன்களை உங்களால் டெலிட் செய்ய முடியாது. தற்பொழுது camera settings, Call log,Message, Mi Store,  Mi Browser, Contact, files, போன்ற 8 அப்ளிகேஷன்களை தவிர மற்ற அனைத்தையும் உங்களால் அன்இன்ஸ்டால் செய்ய முடியும்.


Miui size

இதன் அளவைப் பொறுத்தவரை MIUI 13 இயங்கு தளத்தை விட 23 சதவீதம் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 

அதாவது 1.5 gb வரை குறைவாக உள்ளது.இதன் அளவு கிட்டத்தட்ட 13.05Gb வரை இருக்கும்.


மேலே குறிப்பிட்டதை போல இன்னும் பல்வேறு அம்சங்கள் MIUI 14 இல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அப்டேட் உங்கள் ஸ்மார்ட்போனிற்கு கிடைக்கும் பொழுது பயன்படுத்தலாம்.






Post a Comment

Previous Post Next Post