Redmi Note 10S புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்..? | Redmi Note 10S launched in India
ரெட்மி நோட் 10 வரிசையில் புதிதாக Redmi note 10 S மாடல் அறிமுகம் செய்ய போவதாக இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்தது.சீனாவில் மார்ச் மாதத்தில் அறிமுகம் ஆனது அதன் பின்னர் இரண்டு மாதம் கழித்து தற்பொழுது Redmi நிறுவனம் Redmi lnote 10S மாடல் சில மாறுதல்கள் செய்து இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.அதன் விலை மற்றும் அம்சங்கள் பின்வருமாறு
Redmi Note 10S வடிவமைப்பு பொறுத்தவரை Redmi Note 10 போலவே உள்ளது.மேலும் இது குறிப்பிட்ட சில அம்சங்கள் மாறுதல்களை கொண்டுள்ளது. சிப்செட், கேமரா, முதலியவற்றில் மாறுதல்களை பெற்றுள்ளது.
Redmi Note 10 Vs. Redmi Note 10S
Redmi Note 10S MediaTek G95 soC chipset கொண்டுள்ளது.கேமரா பொறுத்தவரை பின் பக்கம் Quad camera அமைப்பை கொண்டுள்ளது.அதன்படி 64Mp முதன்மை கேமரா சென்சார் 8Mp அல்ட்ரா வைட் கேமரா (118 டிகிரி பார்வை புலம்) 2Mp மேக்ரோ சென்சார் கேமரா மற்றும் 2Mp டெப்த் சென்சார் கேமரா கொண்டுள்ளது.
இதனுடன் 13Mp செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
அதேபோல் Redmi Note 10 Snapdragon 678 chipset கொண்டுள்ளது.கேமரா பொறுத்தவரை பின் பக்கம் Quad camera அமைப்பை கொண்டுள்ளது.அதன்படி 48Mp முதன்மை கேமரா சென்சார் 8Mp அல்ட்ரா வைட் கேமரா 2mp மேக்ரோ சென்சார் கேமரா மற்றும் 2Mp டெப்த் சென்சார் கேமரா கொண்டுள்ளது.
இதனுடன் 13Mp செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.மொத்தத்தில் Chipset மற்றும் Camera இரண்டில் Redmi Note 10 Vs. Redmi Note 10s மாற்றம் உள்ளது.
Redmi Note 10s Specifications
டிஸ்ப்ளே பொறுத்தவரை 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 2400x1080 தீர்மானம் மற்றும் டி.சி.ஐ-பி 3 வண்ண வரம்பு, 1100 நைட்ஸ் பீக் பிரகாசம் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதம் ஆகியவற்றுடன் வருகிறது.மேலும் இது 6ஜிபி ரேம் 128ஜிபி Storage யுஎஃப்எஸ் 2.2 சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் 6ஜிபி 64ஜிபி Storage ஆகிய தேர்வுகளில் கிடைக்கிறது.ஆண்ட்ராய்ட் 12 இயங்குதளதுடன் MIUI 12.5 ஐ இயக்கும் முதல் தொலைபேசி இந்த தொலைபேசி ஆகும்.
பேட்டரி பொறுத்தவரை 5000mAh சக்தி கொண்ட மிக பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் 33W பாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளது.எனவே பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜ் அம்சத்துடன் நீண்ட நேரம் சார்ஜ் இருக்கும் என்று கூறுகிறது.
விற்பனை விலை..?
இதன் விலை பொறுத்தவரை Redmi Note 10S அடிப்படை மாடல் 6ஜிபி ரேம் 64ஜிபி வேரியன்ட் ரூ.14,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 6ஜிபி / 128ஜிபி வேரியன்ட் விலை ரூ.15,999 என்று நிர்ணயித்துள்ளது. இதன் முதல் விற்பனை மே 18 தேதி 12pm நேரத்தில் தொடங்குகிறது.இதன் விற்பனை Mi தளத்திலும் மற்றும் Amazon.in தளத்திலும் கிடைக்கும் என்று கூறி உள்ளது.
Post a Comment