Truecaller நிறுவனம் guardians app இன்றைய புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளது இது முழுக்க முழுக்க பெண்கள் பாதுகாப்புக்கு என்று தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மகளிர் தினம் மார்ச் 8 அன்று வெளியிட உள்ளது.
Truecaller's guardian app நாம் இருக்கும் இடம் மற்றும் மொபைல் தொடர்பு போன்றவற்றை வைத்து தனிமனித பாதுகாப்பிற்கு உதவுகிறது.
மக்கள் கூட்டம் நெரிசலான இடங்களில் இதனை பயன்படுத்தி நமது பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
Truecaller நிறுவனம் கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து ஆராய்ந்து ஸ்வீடன் மற்றும் இந்திய வடிவமைப்பாளர்கள் கொண்டு இந்த அப்ளிகேஷன் அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலம் ஆபத்தான சூழ்நிலைகளில் இருப்பிடம் மாற்றம் இல்லையே நம்முடைய குடும்பத்தாருக்கு அல்லது உறவினருக்கோ தெரியப்படுத்தலாம்.
மேலும் இது எந்த ஒரு வியாபார நோக்கமும் இன்றி முழுக்க முழுக்க தனிமனித பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டு அப்ளிகேஷனை வடிவமைத்துள்ளது. இந்த அப்ளிகேஷனில் கொடுக்கப்படும் தகவல்கள் எந்த நோக்கத்திற்காகவும் வெளியே பகிரப் படுவதில்லை என்று உறுதியளிக்கிறது.
இந்த அப்ளிகேஷன் பயன்படுத்துவதற்கு truecaller அக்கவுண்ட் மூலம் login செய்யலாம் அல்லது மொபைல் நம்பர் OTP மூலம் login செய்யலாம்.இதனை பயன்படுத்த location,contacts மற்றும் phone perimmison அனுமதி மட்டுமே போதும்.
இந்த அப்ளிகேஷன் முழுக்க முழுக்க இலவசமாக கிடைக்க கூடியது. இதில் எந்தவித விளம்பரமும் அல்லது பிரீமியம் யூஸர் அம்சமோ இல்லை. ட்ரூகாலர் பயனாளர்கள் இதனை எளிமையாக பெற்றுக் கொள்ளலாம்.
எவ்வாறு செயல்படுகிறது..?
பயனர்கள் தங்களின் contact list இல் உள்ளவர்களில் யாருடன் தங்களின் இருப்பிடங்கள் மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளில் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம் என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த அப்ளிகேஷன் ஓபன் செய்யப்படாமலேயே இயங்கும் மேலும் பயனர் ஆபத்தான காலங்களில் தகவல்களை தேர்வு செய்த contacts க்கு தானாகவே அனுப்பும்.
சாதாரண சூழ்நிலைகளில் தகவல்களை இருப்பிட இடைவெளி விபரங்களை அளிக்கிறது. ஆபத்துக் காலங்களில் துல்லியமாக செயல்பட்டு சரியான துல்லியமான இருப்பிட தகவல்களை உரியவருக்கு அனுப்புகிறது.
இந்த அப்ளிகேஷனில் ஆபத்து காலங்களில் பெற்றோர்கள் நண்பர்கள் மட்டுமின்றி காவல்துறைக்கும் தெரியப்படுத்தலாம்.
Guardian app march 8 முதல் Google play store இல் இலவசமாக கிடைக்கும் என்று truecaller தெரிவித்துள்ளது.
Post a Comment