நம்முடைய செறிவு (concentration) சக்தியை அதிகரிப்பதற்கான சில வழிகள்..!

நம்முடைய செறிவு (concentration) சக்தியை அதிகரிப்பதற்கான சில வழிகள்..!


Concentration என்பது முக்கியமான ஒன்று அது இல்லையென்றால் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.நாம் படிக்கும் பொழுதோ அல்லது அலுவலகத்தில் வேலை செய்யும் பொழுதோ சில இடையூறுகள் ஏற்படும். அத்தகைய சமயத்தில் நாம் செய்துகொண்டிருக்கும் வேலையில் concentration இல்லாமல் கவனச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதை பொறுத்தே நம்முடைய படிப்பு மற்றும் வேலை முழுமையடையும்.

Concentration சிதறாமல் கையாள்வதற்கு  இங்கே சில வழிகளை தொகுத்துள்ளோம்.


சிலந்திவலை யுக்தி

concentration means நீங்கள் ஏதேனும் ஒரு சிலந்தி வலையை கண்டால் அதனை ஏதேனும் ஒரு பொருளை கொண்டு தட்டிப் பாருங்கள் அதில் உள்ள சிலந்தி சுற்றுமுற்றும் பார்க்கும்.

 மீண்டும் ஒரு சில முறை அதே போல் செய்து பாருங்கள்,தற்போது அந்த சிலந்தி அதனை ஒரு பொருட்டாகவே எடுக்காது. காரணம் நீங்கள் முதல் முறை சிலந்தியின் வலையை தொடும் போதே சிலந்தி சுற்றுமுற்றும் பார்த்து பூச்சி உள்ளதா,இல்லையா என்பதினை கணித்து விடும்.

நீங்கள் மீண்டும் அதே போல் செய்யும்பொழுது பூச்சி இல்லை என்பதை அறிந்த சிலந்தி அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாது.
அதேபோல் நீங்கள் ஒரு வேலையை செய்யும் பொழுதோ அல்லது படிக்கும் பொழுதோ ஏதேனும் அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் அதை எவ்வாறான இடையூறுகள் என்பதை ஒருமுறை கவனித்துவிட்டு.

மீண்டும் அவ்வாறு இடையூறுகள் உணர்ந்தால் அதனை ஒரு பொருட்டாக எண்ணாமல் உங்களுடைய வேலையை பார்க்க உங்கள் கவனத்தை செலுத்த வேண்டும்.

how to concentration in study படிப்பதற்காக நீங்கள் தயாராகும் பொழுது அதற்கு ஏற்படும் இடையூறுகள் யாரேனும் கதவைத் தட்டுதல் வெளியில் வாகனம் செல்லும் சத்தம்,மேலும் பிற இடையூறுகள் ஏற்பட்டாலும்.

அவை அனைத்திற்கும் உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு இடையூறு ஏற்படும் போது அதனை பொருட்படுத்தாமல் உங்கள் படிப்பில் உங்கள் கவனத்தை செலுத்த வேண்டும்.

வார்த்தைகள் கொண்டு 

ஒரு வேலை அல்லது செயலை செய்யும்பொழுது அதற்கு என்று உங்கள் மனதிற்குள் தனியாக ஏதேனும் ஒரு வார்த்தையோ அல்லது குறிப்புப் பெயரையோ வைத்துக்கொள்ளவும்,

 அந்த வார்த்தை அல்லது பெயரை அவ்வப்பொழுது மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.நீங்கள் அந்த செயலை ஏதேனும் ஒரு கவனச் சிதைவு ஏற்பட்டு மறக்கும் நிலை ஏற்பட்டால். 

அந்த குறிப்பிட்ட வார்த்தை அல்லது பெயர் ஞாபகத்திற்கு வரும் பொழுது அந்த வேலை உங்களுக்கு நினைவிற்கு வரும்.

மூளைக்கு சவாலான விளையாட்டுகள்

சதுரங்கம்,ரம்மி,வார்த்தை விளையாட்டு போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுக்களை அதிகமாக விளையாடுங்கள் அப்பொழுது உங்களுக்கான Concetration சக்தி அதிகரிக்கும்.

காரணம் இந்த விளையாட்டுக்கள் அனைத்தையும் கவனமாக உன்னிப்பாக யோசித்து விளையாட வேண்டும் அப்பொழுது உங்களுடைய Concentration இன்னும் அதிகமாகும்.

தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் செய்யும் பொழுது உங்கள் தசைகள் வலுப் பெறுவது போல,
நீங்கள் வார்த்தை விளையாட்டு,குறுக்கு வார்த்தை போட்டி,சதுரங்கம்,போன்ற விளையாட்டுக்களை அடிக்கடி விளையாடும் பொழுது உங்களுடைய மூளையும் வளரும்.

Post a Comment

Previous Post Next Post