How to recover forgotten mobile password
உங்கள் ஸ்மார்ட்போனின் பாஸ்வேர்டை மறந்து விட்டால் அதனை unlock செய்வது முடியாத காரியமாகும். பழைய ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் Forget Password அம்சம் இருக்கும் அதனை பயன்படுத்தி நம்முடைய கூகுள் அக்கவுண்ட் கொடுத்து பாஸ்வேர்ட் தற்பொழுது உள்ள ஆண்ட்ராய்டு பதிப்புகளில் அவ்வாறு செய்ய முடியாது.இதனை சரி செய்வதற்கு உங்கள் ஸ்மார்ட்போனை Reset செய்யவேண்டும்.Google இல் நாம் backup செய்தால் தவிர, Reset செய்யும் பொழுது உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்தும் அழிந்து விடும்.தற்பொழுது வருகின்ற ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் photos,Contacts போன்ற அனைத்தையும் Encrypt செய்து ஸ்மார்ட் போனிலேயே சேமித்து வைகிறது.ஆதலால் உங்கள் ஸ்மார்ட்போனை Reset செய்தால் முழுவதும் Delete ஆகிவிடும்.
ஸ்மார்ட்போன் Reset செய்யவேண்டும் என்றாலும் அதனை unlock செய்ய வேண்டுமே,அவ்வாறு unlock செய்யாமல் Reset செய்ய இரண்டு வழிகள் உள்ளது.Google Find my device மற்றும் Recovery mode இந்த இரண்டு வழிகளில் Reset செய்யலாம்.அதனை பற்றி காணலாம்.
Google find my Device
Google நிறுவனத்தின் இந்த அம்சம் பயன்படுத்திட நம்முடைய Google account இன் தகவல்கள் தெரிந்து இருக்க வேண்டும்.அதாவது நம்முடைய ஸ்மார்ட்போனில் எந்த Google account கொடுத்துள்ளோம்,மற்றும் அதனுடைய password தெரிந்திருக்கவேண்டும்.
இதனை பயன்படுத்த https://www.google.com/android/find?u=0 இந்த link open செய்து நம்முடைய Google account மற்றும் password அளிக்க வேண்டும்.ஒன்றுக்கு மேற்பட்ட Device களிள் நம்முடைய Google account பயன்படுத்தினால்,Reset செய்யவேண்டிய மொபைலை தேர்ந்தெடுக்க வேண்டும்.
*Select Erase Device
*Select Erase Device button
இதன் பின் முழுவதுமாக அழிந்துவிடும் மீண்டும் உங்கள் மொபைலை பயன்படுத்த நீங்கள் முன்பு கொடுத்த சரியான Google account கொடுக்க வேண்டும்.அவ்வாறு கொடுக்க தவறினால் அந்த மொபைலை பயன்படுத்த முடியாது.ஏனென்றால் நம்முடைய மொபைல் திருடு போயிருந்தால் இதே போல் நாம் இரசேதிருடர்கள் இதனை பயன்படுத்த கூடாது என்பதற்காக Google இவ்வாறு அமைத்துள்ளது.
Recovery Mode
Recovery mode பொருத்தவரை ஸ்மார்ட்போன் கம்பெனிக்கு கம்பெனி சிறு மாற்றங்கள் உள்ளது. பெரும்பாலும் எளிமையாக செய்யும் வகையிலேயே உள்ளது.
சாம்சங் மொபைலில் செய்யும் முறை
*முதலில் மொபைல் off செய்ய வேண்டும்
*பின்பு Volume up button,Power button மற்றும் Home button தொடர்ந்து ஒரே நேரத்தில் அழுத்த வேண்டும்.
*சிறிது வினாடிகளில் vibrate ஆகும் அப்பொழுது அனைத்தையும் விடுவிடவெண்டும்
*தற்பொழுது Recovery mode setting டிஸ்ப்ளே இல் தெரியும்
*Volume down button மூலம் ' Delete all user data ' சென்று power button மூலம் select செய்ய வேண்டும்.பின் மீண்டும் power button அழுத்தி yes - Delete all user data அளிக்க வேண்டும்.
தற்பொழுது மீண்டும் On ஆக சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்.மொபைல் Data முழுவதும் அழிந்து புதிய மொபைலில் உள்ளது போல் setting செய்ய கேட்கும்.அதனை செய்து நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.
Post a Comment