ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலையில் லேப்டாப் | Jio's low price Laptop

ஜியோ நிறுவனத்தின் குறைந்த விலையில் லேப்டாப் | Jio's low price Laptop 


Jio நிறுவனம் குறைந்த காலத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.தற்பொழுது 404.12 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு முதலிடத்தில் உள்ளது. Airtel 326.61 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.


Reliance jio laptop

பல்வேறு தயாரிப்புகளை வெளியிடும் ஜியோ நிறுவனம் கடைசியாக குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது புதிய நோட்புக் லேப்டாப் reliance jio laptop வெளியிட உள்ளதாக XDA இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.ஜியோ நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்க கூடிய புதிய நோட்புக் மாடல் லேப்டாப் குறைந்த விலையில் வெளியிட உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு Qualcomm நிறுவனத்தின் மூத்த இயக்குனர் Mr.Miguel Nunes ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து jio laptop லேப்டாப்களை தயாரிக்கப் போவதாக கூறினார். ஆனால் தற்பொழுது XDA செய்தி இது புதிய தயாரிப்பு என்று கூறியுள்ளது.கடந்த செப்டம்பர் மாதத்தில் இதன் தயாரிப்புகள் தொடங்கி விட்டதாகவும், மே மாதத்தில் இதன் அசெம்பிளிங் வேலைகள் முடிந்து இந்த வருட இறுதிக்குள் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் இதனை வெளியிட உள்ளதாக கூறுகிறது.

இந்த reliance jio laptop நோட்புக் லேப்டாப் சீன தொழில்நுட்பத்தில் Bluebank நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளது.. குறைந்த விலையில் விற்பனைக்கு வர இருப்பதால், பட்ஜெட் விலையில் உள்ள பாகங்கள் சாம்சங் மற்றும் குவால்காம் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டு தயாரிக்கப்படுகிறது.இதனை பல்வேறு சோதனைகளையும் செய்து உள்ளது.

Jio laptop specifications

Jio notebook லேப்டாப் Snapdragon 665 soC உடன் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்துடன் வரவுள்ளது.மேலும் இந்த ஸ்னாப்டிராகன் 666 மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் செயல்படாது. ஆதலால் குறைந்த விலையில் லேப்டாப் பை தயாரிக்க இந்த சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜியோ நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்துடன் குறைந்த விலையில் புதிய Notebook வெளியீடு when jio launch
 மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தவிர இந்த Notebook 2 specification இல் வரப்போகிறது என்று கூறியுள்ளது.2GB Ram மற்றும் 32GB memory மாடல் மற்றும், 4ஜிபி Ram 64Gb memory மற்றொரு மாடலாகவும் வெளியாக உள்ளது. மேலும் இது தான் உறுதியான அம்சங்கள் என்பது தெரியவில்லை, தயாரிப்பு மாடலில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கலாம்.
இந்த நோட்புக்கில் கூகுள் நிறுவனத்தின் சில அப்ளிகேஷன்கள் மற்றும் ஜியோ நிறுவனம் அப்ளிகேஷன்கள் இலவசமாக இதில் இருக்கும்.

jio laptop price

இதன் விலை விபரங்கள் பற்றி முழுமையாகத் தெரியவில்லை இருந்தபோதிலும்,குறைவான விலையில் வரக்கூடிய சிறந்த ஆண்ட்ராய்டு notebook laptop ஆக இருக்கும். வசதி குறைந்தவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் தங்கள் வேலைகளை எளிமையாக மேற்கொள்ள இந்த Jio notebook பெரிதும் உதவியாக இருக்கும். இந்த லேப்டாப் குறைந்த விலையில் வரும்போது சந்தையில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


Post a Comment

Previous Post Next Post