QR code எப்படி வேலை செய்கிறது..? | QR code How it's work..?

QR code எப்படி வேலை செய்கிறது..? | QR code How it's work..?


QR code பெரும்பாலும் அனைவரும் பார்த்திருப்போம் பயன்படுத்தி இருப்போம். தற்பொழுது சிறியது முதல் பெரியது வரை அனைத்து வணிகங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.இதனை பயன்படுத்தி தங்களது வணிகத்தை எளிமையாக்கி கொண்டுள்ளனர்.தற்போது வரக்கூடிய Smartphone அனைத்திலும் QR code scanner அம்சம் அளிக்கப்படுகிறது. 

QR code எப்படி ஒவ்வொருத்தருக்கும் தனித்துவமாக உருவாக்கப்படுகிறது. இது எப்படி துல்லியமாக அடையாளம் காண்கிறது என்பதை காணலாம்.

QR Code என்றால் என்ன..?


QR code என்பதற்கு qr code full form
Quick Response என்று அர்த்தம் இது பல புள்ளிகள் சேர்ந்த ஒரு சதுர வடிவிலான அமைப்பை கொண்டிருக்கும்,பார்ப்பதற்கு புள்ளிகள் மட்டும் நிறைந்த படமாக இருந்தாலும் அதில் குறிப்பிட்ட நிறுவனத்துடைய தகவல்கள் அடங்கியிருக்கும் அதனை ஸ்கேன் செய்வதன் மூலம் அவற்றை உடனடியாக காணலாம்.இதன் காரணமாக Quick response code என்று அழைக்கப்படுகிறது.


QR Code வரலாறு..?


முதன்முதலில் 1994 ஆம் ஆண்டு ஜப்பான் Denso wave என்ற நிறுவனம் டொயோட்டா நிறுவனத்திற்கு வாகன உதிரிபாகங்களை தயாரித்து வழங்கி கொண்டிருந்தது.தயாரிக்கும் பாகங்கள் சரியான அளவில் இருப்பதற்கு அதை வகைப்படுத்த Barcode என்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இது encode மற்றும் alphanumeric எழுத்துக்களை உள்ளடக்கியிருந்தது.

Barcode ஒரு திசையில் மட்டும் தகவல்களை கொண்டிருக்கும் அதாவது மேலிருந்து கீழ் வரை,எனவே இதில் குறைந்த அளவிலான தகவல் மட்டும் சேமித்து வைக்க முடியும்.

ஆனால் QR code இரண்டு திசைகளில் ஸ்கேன் ஆகும்.மேலிருந்து கீழ் மற்றும் இடது புறம் இருந்து வலது,எனவே இதில் அதிகமான தகவல் சேமிக்க முடியும். 

qr code generator ஆராய்ச்சியாளர்கள் இதன் ஸ்கேன் செய்யும் நேரத்தை இன்னும் குறைக்க விரும்பினார்கள் .எனவே இதனை ஒரு சதுர வடிவமாக உருவாக்கினார்கள்.இதுதான் தற்போதுவரை பயன்படுத்தபடுகிறது.

Denso wave நிறுவனம் கண்டுபிடித்த QR code தொழிநுட்பம் பதிப்புரிமை செய்யாமல் பொது பயன்பாட்டுக்கு அனுமதி அளித்தது,இதனால் அனைவரும் பயன்பெற்றனர்.
ஆரம்பத்தில் QR code தொழிநுட்பம் அனைவரிடத்திலும் சென்றடையவில்லை,மேலும் qr code scanner பொதுபயன்படிற்கு கிடைக்கவில்லை.நிறுவனத்தின் அனுமதிக்கு பின்னரே கிடைத்தது.

QR code தொழிநுட்பம் முதலில் 2002 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் மொபைல் நிறுவனம் தனது மொபைலில் அறிமுகம் செய்தது.இதன் பின்னர் பல நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

அதன்பின் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட முதல் ஐபோனில் QR தொழில்நுட்பத்தை வழங்கியது.இதன் பின் பல நிறுவனங்கள் sales,marketing, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

QR code எவ்வாறு வேலை செய்கிறது..?


QR குறியீடுகளுக்குள் உள்ள வடிவங்கள் பைனரி குறியீடுகளைக் குறிக்கின்றன, அவை QR குறியீட்டின் முழுமையான தகவல் வெளிப்படுத்துகின்றன.

QR scanner QR குறியீட்டிற்கு வெளியே உள்ள மூன்று பெரிய குறியீடுகளை அடையாளம் காண்கிறது.பின் உள் பக்கம் உள்ள குறியீடுகளை படிக்கிறது.

QR Reader குறியீட்டை பகுப்பாய்வு செய்து முழு விஷயத்தையும் ஒரு கட்டமாக பிரிக்கிறது.இதில் தனிப்பட்ட கட்டம் சதுரங்களை பார்த்து, ஒவ்வொன்றும் கருப்பு அல்லது வெள்ளை என்பதை அடிப்படையாகக் கொண்டு வகைபடுத்துகிறது.


QR code பகுதிகள் மற்றும் அதன் செயல்பாடுகள்


QR code ஆறு பகுதிகளை உள்ளடக்கி உள்ளது.

1.வெற்று பகுதி


Empty pattern இது குறியீட்டின் வெளிப்புறத்தை சுற்றியுள்ள வெற்றுப் பகுதியை குறிக்கிறது அதாவது குறியீடு இல்லாத வெள்ளை பகுதியை குறிக்கிறது இதன் மூலம் குறியீட்டிற்குள் என்ன இருக்கிறது என்பதை QR Reader படிக்கும்.

2.குறியீடு பகுதி


Finder pattern QR குறியீடுகளில் பொதுவாக கீழ் இடது, மேல் இடது மற்றும் மேல் வலது மூலைகளில் மூன்று கருப்பு சதுரங்கள் இருக்கும். இந்த சதுரங்கள் QR reader க்கு இது ஒரு QR குறியீடு என்பதை அடையாளம் காட்டுகிறது என்றும், அதன் வெளிப்புற எல்லைகள் எங்கே என்றும் கூறுகின்றன.

3. குறியீடு அமைப்பு


Alignment pattern QR குறியீட்டுக்குள் ஏதேனும் ஒரு பகுதியில் சதுரமான குறியீடு ஒன்று இருக்கும்.இது QR reader எந்த திசையில் இருந்து ஸ்கேன் செய்தாலும், துல்லியமாக கண்டறிய உதவுகிறது.

4.குறியீடு முறை


Timing pattern இது L வடிவில் மூன்று சதுரங்களுக்கு இடையில் இருக்கிறது.இது குறியிட்டிற்குள் உள்ள சதுரங்களை கண்டறியும்.

5.பதிப்பு தகவல்


Version information இந்த சிறிய தகவல் பகுதி finder pattern க்கு மேலே வலது புறத்தில் இருக்கும்.இந்த பகுதி QR எந்த version என்பதை குறிக்கிறது.

6.தகவல் அமைப்பு


Data cells மீதமுள்ள குறியீடுகள் தகவல்களை உள்ளடக்கியிருக்கும். எ.கா போன் நம்பர்,விலை,URL,

மேலே குறிப்பிட்ட 6 பகுதிகளை கொண்டு QR code செயல்படுகிறது.இவற்றில் 2 வகைகள் உள்ளது.

Static QR 
Dynamic QR

 

நாளுக்கு நாள் புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றன ஆனால் அவற்றில் ஒரு சில மட்டுமே நம்முடைய அன்றாட தேவைகளுக்கு பயன் தரும் வகையில் இருக்கும். அத்தகைய இந்த QR code பயன்பாடு தற்பொழுது மிகவும் அதிகமாக காணப்படுகிறது.சிறிய சிறிய வணிகங்களிலும் பணம் செலுத்துவதற்கு இந்த QR Code பயன்படுத்துகின்றனர்.



QR code நல்லதா..? ஆபத்தானதா..?


*இந்த தொழில்நுட்பம் என்னதான் பயன் தரும் வகையில் இருந்தாலும் இவற்றை பயன்படுத்தியும் சில குற்றச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.அவற்றை அறிந்து நாம்தான் பாதுகாப்பாக செயல்பட வேண்டும்.

*qr code scanner online சில வலைத்தளங்களில் இலவசமாக அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது போன்ற விளம்பரங்கள் இருக்கும்.அவற்றை QR code மூலம் ஸ்கேன் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கும்.

*qr code online scanner அத்தகைய QR Code கள் நாம் ஸ்கேன் செய்வதன் மூலம் ஒரு புதிய வலைப்பக்கத்திற்கு அழைத்துச் செல்லும் அங்குள்ள செயலிகள் ஏதேனும் பதிவிறக்கம் செய்தால் அவற்றின் மூலம் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை அவர்கள் திருட வாய்ப்பு உள்ளது.

*QR code உருவாக்கும் நிறுவனங்கள் அல்லது வலைத்தளங்கள் ஒரு சமயத்தில் தங்களுடைய வியாபாரத்தை முடிக்கலாம் அல்லது மற்றொருவருக்கு விற்பனை செய்யலாம் ஆனால் அவர்கள் உருவாக்கிய QR code அப்படியே இருக்கும்.இந்த வலைத்தளத்தை வாங்குபவர்கள் அந்த QR code ஐ வேறு ஏதேனும் ஒரு பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம். எனவே QR code உடைய பயன்பாட்டை அறிந்து பயன்படுத்த வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post