ஸ்மார்ட்போன் மற்றும் ப்ளூடூத் ஹெட்செட் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்..

 ஸ்மார்ட்போன் மற்றும் ப்ளூடூத் ஹெட்செட் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 

     
நம்மிடையே நாளுக்கு நாள் ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டு வருகிறது. அது குணம் சேர்த்து தற்பொழுது ப்ளூடூத் ஹெட்செட் பயன்பாடு மக்களிடையே அதிகமாக காணப்படுகிறது.இதனை பயன்படுத்துவதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நாம் யோசிப்பதே இல்லை.

இதனைப் பற்றி 42 நாடுகளை சேர்ந்த 247 விஞ்ஞானிகள் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் ப்ளூடூத் மற்றும் வயர்லெஸ் ஹெட்செட் அதிகமாக பயன்படுத்துவதால் புற்று நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
வயர்லெஸ் ஹெட் செட்டில் இருந்து வெளிப்படும் கதிர்கள் இனி வரும் நோய்களை ஏற்படுத்துகின்றன.

புற்று நோய்

மரபணு சேதங்கள்,

நரம்பியல் கோளாறுகள்

கற்றல் மற்றும் நினைவக கோளாறுகள்

கருத்தரித்தலில் பிரச்சினை
2011 ஆண்டில் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி நிறுவனம் செல்போன், கணிப்பொறி, ப்ளூடூத் ஹெட்போன் மற்றும் மைக்ரோவேவ் ஓவன்கள் போன்றவற்றின் கதிர்வீச்சுகள் மூலம் மூளை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று ஆராய்ச்சி கூறுகிறது.

2018 ஆம் ஆண்டு தேசிய நச்சுயியல் திட்டத்தின் ஆராய்ச்சி 2ஜி மற்றும் 3ஜி தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் கட்சிகள் அதிகப்படியான ஆபத்துகள் உண்டாக்க கூடியவை என்று எச்சரித்துள்ளது.
செல்போன்களை விட குறைவான பாதிப்பு

ஒரு சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி செல் போன்களை விட ப்ளூடூத் ஹெட்போன் கதிர்வீச்சின் அளவு குறைவாகவே காணப்படுகிறது.

செல்போன் களோடு ஒப்பிடுகையில் மூன்றில் இரண்டு பங்கு  ப்ளூடூத் ஹெட்போன் மூலம் குறைந்த அளவு பாதிப்பு ஏற்படுகிறது.
குறைந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது அதிகமான பாதிப்பை உண்டாக்குகிறது.
உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை இதிலிருந்து மக்களை காப்பாற்ற கடுமையான விதிமுறைகளை தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும். என்று கோரிக்கை விடுத்துள்ளது.

இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள்


நீண்ட நேரம் போன் பேச வேண்டிய அவசியம் இருந்தால் லவுட் ஸ்பீக்கர் போட்டு பேசிக் கொள்ளலாம்.
பெரும்பாலும் குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும் ஏனென்றால் அவர்களின் மண்டையோடுகள் மிகவும் மெல்லியதாக இருக்கும்,ஆதலால் கதிர்வீச்சை எளிதாக பாதிப்படையச் செய்யும்.

சிக்னல் இல்லாத சமயத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சிக்னல் குறைவாக இருக்கும் போது அதிகமாக கதிர்வீச்சு ஏற்படுகிறது.
ஸ்மார்ட்போனை எப்பொழுதும் பைகளில் வைத்துக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு இல்லாமல் 10 அங்குல இடைவெளியில் வைத்திருப்பது நல்லது.
கால் செய்யும் பொழுது அவருடைய எண்ணிற்கு கால் கனெக்ட் ஆகும் வரை மொபைல் போனை காதுகளுக்கு அருகில் கொண்டு செல்லாமல் கைகளிலேயே வைத்திருக்கலாம். ஏனென்றால் கால் செய்யும்பொழுது ஆரம்பக்கட்டத்தில் தான் அதிகமான கதிர்வீச்சுகள் ஏற்படுகிறது.

ஸ்மார்ட்போன்களுக்கு (Cases) கவர் வாங்கும் பொழுது அது சிக்னலை பாதிக்காத வண்ணம் வாங்க வேண்டும். ஏனென்றால் பெரும்பாலான போன் கவர்கள் சிக்னலை பாதிப்படையச் செய்கிறது. இதன்மூலம் குறைந்த சிக்னல் ஏற்பட்டு அதிகமான கதிர்வீச்சை உண்டாக்குகிறது.

பெரும்பாலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாத நேரத்தில் அதனை airplan mode வைத்துவிட வேண்டும்.மேலும் நாம் தூங்கும் பொழுது மொபைலை நம் தலைக்கு அருகில் வைக்காமல் தூரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நாம் போன் பயன்படுத்தாத போதும் நம் அருகில் இருப்பதால் கதிர்வீச்சு நம்மை பாதிக்கும்.





Post a Comment

Previous Post Next Post