Wifi calling வசதி மூலம் மொபைல் நெட்வொர்க் இல்லாமல் இலவசமாக call பேசலாம் | Free call without a mobile network using wifi calling

WIFI CALLING மொபைல் நெட்ஒர்க் வசதி இல்லாமல் இலவசமாக பேசலாம் | what is wifi calling 

wifi calling



முக்கிய அம்சங்கள் 


*wifi calling அம்சம் மூலம் நெட்ஒர்க்   வசதி இல்லாமல் wifi connection   பயன்படுத்தி CALL பேசலாம்.


*இந்த வசதி ஆண்ட்ராய்ட் மற்றும்   ஐபோன் இரண்டிலும்   கிடைக்கிறது.


*wifi calling முற்றிலும் இலவசமான   அம்சமாகும்.


தகவல் தொடர்பு வளர்ச்சியில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.எந்த ஒரு மொபைல் நெட்வொர்க் வசதி இல்லாமல் call பேசிக்கொள்ளலாம்.wifi calling அம்சம் மூலம் நெட்வொர்க் குறைவாக உள்ள இடத்தில் நெட்ஒர்க் இல்லாத இடத்தில் wifi connection நன்றாக இருந்தால்,அதன் மூலம் call பேசிக்கொள்ளலாம்.இது எதிர்காலத்திற்கான சிறந்த தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது.இந்த அம்சத்தை தற்பொழுது jio மற்றும் Airtel அறிமுகம் செய்துள்ளது.


நீங்கள் நெட்வொர்க் வசதி குறைவான இடத்திற்கு செல்லும் போது அங்கு wifi connection மட்டும் நன்றாக இருந்தால் போதும்,எந்த தடங்கலும் இன்றி பேசலாம்.சில அலுவலகங்கள் கீழ்தளத்தில் இருக்கும் அங்கு நெட்வொர்க் கிடைப்பது,அரிதானது அவ்வாறான சமயங்களில் இந்த அம்சம் மிகவும் பயன்தரும்.Wifi calling அம்சம் குறித்து பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. மேலும் இந்த வசதி தற்பொழுது சில குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.



WiFi calling எவ்வாறு வேலை செய்கிறது..?


wifi calling on iphone நெட்வொர்க் தொடர்பு இல்லாமல் WiFi மூலம் இணைக்கப்படுகிறது.how wifi calling works இது VOIP (voice over the internet) protocol மூலம் செயல்படுகிறது.WhatsApp,Skype,Facebook செயலிகள் VOLTE வசதியின் மூலம் இயங்குகிறது.ஆனால் இதற்கு செல்லுலார் நெட்வொர்க் தேவை சில இடங்களில் அது சரியாக கிடைப்பதில்லை.WiFi calling பொறுத்தவரை அப்படி இல்லை, WiFi connection நன்றாக இருந்தால் போதும் எளிமையாக பயன்படுத்தலாம்.



Wifi calling விலை..?


இந்த வசதி பயன்படுத்த தனியாக கட்டணம் ஏதும் செலுத்த தேவை இல்லை,உங்கள் மொபைல் நெட்ஒர்க் பிளான் அடிப்படையிலேயே செயல்படும்.இது முழுவதும் இலவசமான சேவை,நீங்கள் பயன்படுத்தும் wifi connection மூலம் செயல்படுகிறது.மேலும் wifi calling பயன்படுத்தும் பொழுது உங்களுடைய மொபைல் டேட்டா எதும் குறையாது,முழுமையாக wifi connection இல் மட்டுமே செயல்படும்.


எப்படி ஆக்ட்டிவ் செய்வது..?


wifi calling settings மேலே குறிப்பிட்டது போல இந்த வசதி ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் இரண்டிலும் பயன்படுத்தலாம்.இதனை பயன்படுத்த உங்கள் மொபைலில் இந்த வசதியை ஆக்ட்டிவ்  செய்தால் போதும்,எப்பொழுதெல்லாம் உங்கள் மொபைல் நெட்ஒர்க் குறைவாகவோ அல்லது கிடைக்கவில்லையோ wifi connect  செய்திருந்தால் தானாக,செயல்பட ஆரம்பித்துவிடும்.



ஐபோனில் பயன்படுத்த


Go to Settings 

Mobile data section

Wifi calling option (if your network supports the sam)

“Wifi calling on this iPhone”


ஆண்ட்ராய்ட் மொபைலில் பயன்படுத்த


 Go to settings 

 Network & Internet 

 Wifi preferences 

 Advanced or Advanced calling (depends on Android skins device is using)

 wifi calling option enable


 Wifi calling supported models

 wifi calling phones தற்பொழுது இந்தியாவில் wifi calling jio, wifi calling airtel ஏர்டெல் மற்றும் ஜியோ wifi calling சேவையை அளித்துவருகிறது.wifi calling அம்சம் ஒரு சில மாடல் மொபைல்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.Apple iphone 11 series மற்றும் அதற்கு பின் வந்த மாடல்களுக்கு இந்த அம்சத்தை வழங்கியுள்ளது.wifi calling on android oneplus 6 series மற்றும் பின் வந்த அனைத்து மாடல்களும்,Redmi 7 series மாடல்கள் மற்றும் பின் வந்த மாடல்கள்,redmi k series மாடல்கள்,பெரும்பாலான samsung மொபைல் மாடல்களுக்கு இந்த வசதி அளிக்கபட்டுள்ளது.


Click here to see wifi calling supported Mobiles list https://amzn.to/31gG6XE



நன்மைகள்

  • பல விதமான நன்மைகளை பயனர்களுக்கு வழங்குகிறது.

  • இதனை பயன்படுத்த application எதும் இன்ஸ்டால் செய்ய தேவை இல்லை. 

  • குறிப்பிட்ட நேரம் மட்டும் பயன்படுத்த முடியும் என்கிற நிபந்தனைகள் ஏதும் இல்லை.

  • Wi-Fi calls உங்கள் டேட்டா பயன்படுத்துவது இல்லை.

  • இரைச்சல் ஏதும் இல்லாமல் தரமான முறையில் கால் பேசலாம். 

  • மொபைல் நெட்ஒர்க் இல்லாத நேரத்திலும் சிறந்த call வசதியை பெறலாம்.

  • இதற்கு எந்தவித கட்டணமும் இல்லை 

  • Login செய்ய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. 

  • பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் ஐபோன்,சாம்சங்,இந்த வசதியை நமக்கு அளிக்கிறது.

  • பேட்டரி குரைவாகவே பயன்படுத்தும்,இதன் மூலம்  உங்கள் மொபைல் பேட்டரி நீண்ட நேரம் சார்ஜ் இருக்கும்.

  • Wi-Fi calling பயன்படுத்த அதிகமான wifi டேட்டா தேவைப்படாது,ஒரு கால் பேசுவதற்கு 1mb மட்டுமே எடுக்கும்


தீமைகள்

  • Wifi signal நன்றாக இருக்கவேண்டும் இல்லையேல் சரியாக செயல்படாது.

  • சில ஸ்மார்ட்போன்கள் wifi calling support  செய்யாது.

  • இதனைபயன்படுத்தி உலகில் அனைத்து நாடுகளுக்கும் பேசமுடியாது.சில நாடுகள் மட்டுமே

  • Wifi data பயன்படுத்தும் எனவே அதற்கு கட்டணம் செலுத்தவேண்டும்.

  • Wifi data speed பொருத்தே இதன்தரம் இருக்கும்.

Wifi calling அம்சத்தின் நோக்கமே குறைவான நெட்ஒர்க் பகுதிகளில் பயன்படுத்தி கொள்வதற்குதான்,இதன் மூலம் call பேசுவதற்கு நெட்ஒர்க் பிரச்சனை இருக்காது.High speed wifi connection வேண்டும்.இந்த வசதி இன்னும் முழுமையாக அனைவரையும் சென்று அடையவில்லை.








Post a Comment

Previous Post Next Post