ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய விசயங்கள் | Things to consider before buying a smartphone

ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள் |smartphone buying guide india




சந்தையில் நாளுக்கு நாள் புதிய புதிய ஸ்மார்ட் போன்கள்  buying a smartphone விற்பனைக்கு அறிமுகம் வந்துகொண்டே இருக்கிறது.அவற்றில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமான சிறப்பம்சங்களை கொண்டிருக்கும். அவற்றில் முக்கியமான சில அம்சங்களை ஆராய்ந்து வாங்க வேண்டும். ஸ்மார்ட்போன் buying a smartphone online வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இங்கே தொகுத்துள்ளோம்.  


Body Panel

Display

Processor

Camera

Battery

User interface / Os

Storage



Bodypanel 

ஸ்மார்ட்போன் Body பேனல் முக்கியமான ஒன்று 2 முதல் 3 அடி வரை உயரத்தில் இருந்து மொபைல் விழுந்தால் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.இதை முதலில் கவனிக்க வேண்டும். ஸ்மார்ட்போன் மூன்று வித body panel இல் கிடைக்கிறது. Plastic, Metal, Glass coating panel, how to buy phones at cheap price பெரும்பாலும் பட்ஜெட் விலையில் வரும் ஸ்மார்ட்போன்களுக்கு பிளாஸ்டிக் வகை பாடி பேனல் கொடுக்கப்படுகிறது.ஒரு சில நிறுவனங்கள் கிளாஸ் coating உள்ள பாடி பேனல்கள் வழங்குகிறார்கள்.ஆனால் அவை கீழே விழுந்தாள் crack ஆக வாய்ப்பு உள்ளது. எனவே best smartphone with metal body பிளாஸ்டிக் அல்லது மெட்டல் வகை பாடி பேனல்கள் உள்ள ஸ்மார்ட் போன்கள் தேர்ந்தெடுப்பது நல்லது.


Display

the best smartphone display ஸ்மார்ட் போன் டிஸ்பிளே தான் நாம் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு மிக முக்கிய காரணியாக உள்ளது. டிஸ்ப்ளே நன்றாக இருந்தால்தான். அதிக நேரம் வீடியோக்களை பார்க்கவும் கேம்கள் விளையாடவும் முடியும்.இல்லையேல் அதை பயன்படுத்த நன்றாக இருக்காது. தற்பொழுது OTT தளங்கள் பிரபலமாகி கொண்டு வருகிறது அவற்றில் முழு திரைப்படங்களையும் ஸ்மார்ட்போனில் பார்க்கலாம்.எனவே டிஸ்பிளே முக்கிய காரணமாக உள்ளது.
ஸ்மார்ட்போன் Display பொறுத்தவரை LCD,OLED,AMOLED,TFT,IPS வகை டிஸ்பிளேக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதில் குறைந்த பட்ஜெட் விலையில் வரும் ஸ்மார்ட்போன்களில் TFT டிஸ்பிளே பயன்படுத்தப்படுகிறது.Mid range ஸ்மார்ட்போன்களுக்கு IPS LCD டிஸ்பிளே கொடுக்கபடுகிறது.சில நிறுவனங்கள் தற்பொழுது mid range மாடல்களுக்கும் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கிறது.IPS Display விட AMOLED display நன்றாக இருக்கும் ஆனால் விலை சற்று அதிகமாக இருக்கும்.எனவே நம்முடைய பட்ஜெட் பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.


Processor

best smartphone processor கம்ப்யூட்டர் CPU எப்படியோ அதே போல் தான் மொபைல் போன்களுக்கு GPU (Graphics processor unit) பல்வேறு செயல்பாடுகளை இந்த chipset தான் கையாள்கிறது.இந்த செயலை Soc (System on chip) என்று குறிப்பிடப்படுகிறது. chipset பொறுத்துதான் ஸ்மார்ட்போன் செயல்திறன் இருக்கும்.

பெரும்பாலும் ஸ்மார்ட்போன்களில் 4 நிறுவன chipset பயன்படுத்தப்படுகிறது.Qualcomm Snapdragon, Samsung Exynos, MediaTek MT and Helio processor மற்றும் Huawei krin chipset. இந்தச் சிப்செட் தயாரிப்பாளர்கள் ஆரம்ப விலை ஸ்மார்ட் போன்களில் இருந்து அதிக விலை ஸ்மார்ட்போன் வரை அனைத்திற்கும் அதன் விலையின் அடிப்படையில் chipset கள் உருவாக்கியிருக்கிறார்கள்.தற்பொழுது பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் Snapdragon மற்றும் MediaTek chipset உடன் தான் வருகிறது. நீங்கள் Game பிரியராக இருந்தால் MediaTek Helio தேர்ந்தெடுங்கள்,which is the best snapdragon processor அன்றாட பயன்பாடுகளுக்கு மட்டும் பயன்படுத்தினால் Snapdragon chipset உள்ள ஸ்மார்ட்போன் வாங்குங்கள்.


Camera 

best camera smartphone ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் DSLR கேமரா க்கு சரிசமமாக ஸ்மார்ட்போன் கேமரா தொழில் நுட்பத்தை உருவாக்கி உள்ளார்கள். கேமராக்களில் அன்றாடம் புதிய புதிய அம்சங்கள் புதிய அம்சங்கள் கொண்டு வருகின்றனர். தற்பொழுது 108mp கேமரா வரை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தபடுகிறது. என்னதான் கேமரா அதிகமான மெகாபிக்சல் கொண்டிருந்தாலும் அதற்கு தகுந்தார்போல் chipset மற்ற பாகங்கள் நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் கேமரா lமுழுமையான தரத்தை வெளிப்படுத்தும்.எனவே Megapixel மட்டும் பார்க்காமல் அதன் நிறுவனம் மற்றும் மொபைல் நிறுவனம் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள Chipset முதலியவற்றை ஆராய்ந்து பார்த்து வாங்கவேண்டும்.

 
Sony,samsung,omnivison இந்த மூன்று கேமரா சென்சார்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளது.Sony நிறுவனத்தின் HMX 48mp சென்சார் மிகவும் பிரபலமானது பல ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுகிறது.Camera சிறப்பாகசெயல்படுகிறது.சாம்சங் 48mp,64mp,108mp கேமரா சென்சார்கள் பல ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தபடுகிறது.ஸ்மார்ட்போன் வாங்கும்பொழுது அதன் கேமரா பற்றி நன்குஆராய்ந்து வாங்குவது நல்லது.


Battery

best smartphone with battery life என்னதான் நாம் பல்வேரு அம்சங்கள் உள்ள ஸ்மார்ட்போன் வாங்கினாலும், அவற்றை எல்லாம் நீண்ட நேரம் இயக்குவதற்கு சக்திவாய்ந்த பேட்டரி வேண்டும்.Games, Social network, YouTube, Songs போன்ற பயன்பாடுகளுக்கு Battery முக்கியமான ஒன்று,
தற்பொழுது வருகின்ற ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்படுகிறது.ஒரு சில ஸ்மார்ட்போன்கள் 6000 mAh வரை Battery அளிக்கிறது.ஆனால் பேட்டரி அளவு கூட கூட ஸ்மார்ட்போன் எடையும் அதிகரிக்கும். எனவே அதில் கருத்தில் கொண்டு நமக்குத் தேவையான அளவு battery உள்ள ஸ்மார்ட்போன் தேர்ந்தெடுக்க வேண்டும்.


User interface / Os

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் இயங்குதளத்தில் ( OS ) 95.23 % சதவீதம் Android OS கொண்ட ஸ்மார்ட்போன்கள் உள்ளது.மீதம் Apple iphone OS ஸ்மார்ட்போன் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட OS களும் அடங்கும். Pure Android OS கொண்ட ஸ்மார்ட்போன்களை நீங்கள் வாங்க விரும்பினால் Motorola,Nexus,Pixel மொபைல்களை வாங்கலாம். இது தவிர மற்ற நிறுவனங்கள் ஆண்ட்ராய்ட் அடிப்படையில் கவர்ச்சிகரமான அம்சங்களை கொண்ட இயங்குதளத்தை வழங்குகிறது.இயங்குதளத்தில் உள்ள அம்சங்களை பொறுத்தே நம்முடைய ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் எளிமையாக அமையும்.மேலும் இவற்றிற்கு ஆண்ட்ராய்ட் update குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கும்.ஹாய் ஒரு சில ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு உடனடியாக அப்டேட் கிடைக்கும்.எனவே அந்த வகை ஸ்மார்ட்போன் நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது நல்லது.


Storage

ஸ்மார்ட்போனில் மற்றொன்று முக்கியமாக கவனிக்க வேண்டியது Ram மற்றும் Storage, நம்முடைய ஸ்மார்ட்போனில் போட்டோக்கள் வீடியோக்கள், சாங்ஸ், அப்ளிகேஷன்கள், போன்றவற்றில் சேமிக்க ஸ்டோரேஜ் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்ளிகேஷன்களை ஒரே நேரத்தில் வேகமாகவும் சிறப்பாகவும் இயக்குவதற்கு Ram உதவுகிறது. இவை இரண்டையும் கவனித்து ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும்.நல்ல முறையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த 4ஜிபி/64ஜிபி போதுமானது. அதிகமாக பயன்பாடுகள் ஸ்டோரேஜ் தேவைப்பட்டால் 6ஜிபி/128ஜிபி தேர்வு செய்யலாம்.










 


Post a Comment

Previous Post Next Post