Redmi Note 10 pro max full review in Tamil | Redmi Note 5 pro key points in Tamil
redmi note 10 pro max unboxing முதல் விற்பனை மார்ச் 17 அன்று ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது. Redmi நிறுவனம் Redmi Note 10 pro max மாடலை சிறந்த அம்சங்களுடன் சவாலான விலையில் வெளியிட்டுள்ளது. அதன் போட்டி நிறுவன மொபைல் மாடல்களுக்கு சவால் விடும் வகையில் குறைந்த விலையில் அதிகமான அம்சங்களை கொடுத்துள்ளது.
Xiaomi நிறுவனத்தின் Redmi Note 10 மற்றும் Redmi Note 10 pro விற்பனைக்கு வந்த சில நிமிடங்களிலேயே முடிந்தது. Redmi Note 10 வரிசையில் பிரீமியம் மாடலான Redmi Note 10 pro max மார்ச் 17 அன்று மதியம் முதல் முறை விற்பனைக்கு வந்தது.சிறந்த design அமைப்புடன் AMOLED display, 108Mp megapixel camera, 5020 mAh Battery போன்ற சிறந்த அம்சங்களுடன் Dark night, vintage bronze, Glacial blue மூன்று வண்ணகளில் கிடைக்கிறது.
Redmi Note 10 pro max விலைகள்
redmi note 10 pro max price in india
6GB Ram மற்றும் 64GB Storage மாடல் Rs.18,999
6GB Ram மற்றும் 128GB Storage மாடல் Rs.19,999
8GB Ram மற்றும் 128GB Storage மாடல் Rs.21,999
நல்ல அம்சங்களுடன் போட்டி குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள அம்சங்கள் எப்படி உள்ளது என்பதை காணலாம்.
Value for money..?
1.Redmi Note 10 pro max இன் முதல் சிறப்பு அம்சம் இதன் கேமரா 108mp கொண்ட முதன்மை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. Redmi Note 10 pro மாடலில் 64mp முதன்மை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது மேலும் விலை Rs.3000 குறைவு, இவை மட்டுமே இந்த இரண்டு மாடலுக்கும் உள்ள வித்தியாசம் மற்றபடி அனைத்தும் ஒரே அம்சங்கள் தான்.Redmi Note 10 pro max 108mp முதன்மை கேமராவுடன் 8mp ultrawide கேமரா,5mp macro கேமரா 2mp Depth sensor கொடுக்கப்பட்டுள்ளது.
2.108mp கொண்ட கேமராவுடன் பல புதிய அம்சங்களை வழங்கியுள்ளது.இதில் உள்ள clone mode போட்டோ மற்றும் வீடியோ எடுத்துக்கொள்ளலாம். அதாவது ஒரே photo வில் நீங்கள் இரண்டு இடங்களில் இருப்பது போன்று எடுக்கலாம். அதேபோல் வீடியோவிலும் எடுக்கலாம். dual video mode அம்சம் உள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் பின்பக்கம் மற்றும் முன்பக்க கேமராக்களில் வீடியோ எடுத்துக்கொள்ளலாம். Clone mode மற்றும் dual mode இவை இரண்டுமே துல்லியமாக செயல்படவில்லை. இந்த அம்சங்களை மேம்படுத்த வேண்டும்.மேலும் இந்த அம்சங்களை பயன்படுத்தும் பொழுது மொபைல் சற்று heat ஆகிறது.
3. இதன் processor மற்றும் பயன்பாடு பொறுத்தவரை Rs.20000 விலை பிரிவில் சிறந்த மாடலாக இருந்தாலும், பெரிய கேம்கள் நீண்ட நேரம் விளையாடுவதற்கு ஏற்றதாக இல்லை. மற்றபடி அன்றாட பயன்பாடுகளுக்கு சிறப்பாக செயல்படுகிறது. இதனை விட சற்று அதிகமான விலையில் ஒன் பிளஸ் நார்ட் மாடல்,Mi 10i மாடல்கள் Snapdragon 750G SoC சிறப்பாக உள்ளது.ஆனால் அவற்றில் சாதாரண LCD DISPLAY தான் கொடுக்கப்பட்டுள்ளது.
4. டிசைன் பொறுத்தவரை புதிய EVOL டிசைனில் மிகவும் சிறப்பாக உள்ளது.Dark night, vintage bronze, Glacial blue வண்ணங்களில் பின்பக்க Glass design அமைப்புடன் சிறப்பாக உள்ளது.இந்த design பிரீமியம் மொபைல் மாடல்களுடன் போட்டி போடும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
5. இதிலுள்ள மிக முக்கியமான சிறந்த அம்சம் இதன் Display தான், இந்த விலையில் இவ்வளவு அம்சத்துடன் super AMOLED display கொடுக்கப்பட்டது,இதன் மிக முக்கிய சிறப்பு 6.67 inch அளவுள்ள super AMOLED 1080x2400 என்ற தரவில் கொடுக்கப்பட்டுள்ளது.20:9 என்ற அளவில் Brightness உள்ளது.இது iphone 12 தரத்தில் உள்ளது.இதனால் இதில் Movie , videos பார்பதற்கு நன்றாக இருக்கு.
Post a Comment