சிம் கார்டு, நெட்வொர்க் இல்லாமல் இனி இலவசமாக பேச புதிய தொழில்நுட்பம் வந்துள்ளது.Oppo mobile நிறுவனம் சமீபத்தில் Mesh talk என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது சிம் கார்டு இன்டர்நெட் எந்த ஒரு வசதியும் இல்லாமல் 3km தொலைவிற்குள் இருப்பவர்களிடம் வாய்ஸ் கால், SMS, வாய்ஸ் மெசேஜ் செய்து கொள்ளலாம்.
சீன மொபைல் நிறுவனங்கள் புதிய புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவதற்கு பெரிய முதலீடுகளை செய்து வருகிறது.அதேபோல் ஒப்போ நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகிறது. தனது போட்டி நிறுவனமான சாம்சங்,சியோமி ஆகிய நிறுவனங்களுக்கு சவாலாக Oppo mobile புதிய புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வர உள்ளது. அந்த வகையில் இந்த Mesh talk தொழில்நுட்பத்தின் மூலம் ப்ளூடூத்,மொபைல் நெட்வொர்க்,வைபை உதவி இல்லாமல் வாய்ஸ் கால்,மெசேஜ்,வாய்ஸ் மெசேஜ் போன்றவற்றை இலவசமாக மேற்கொள்ளலாம்.ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் பொழுது குரூப் சாட் செய்து கொள்ளலாம்.
Mesh talk தொழில்நுட்பம் எளிமையானதாகவும் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இது வேகமான தாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். மொபைல் நெட்வொர்க், சர்வர்கள் முதலியவற்றை தவிர்ப்பதற்காகவே இந்த தொழில்நுட்பம் கொண்டு வர உள்ளது.
MWC Shanghai விழாவில் பல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் அதில் ஒப்போ நிறுவனத்தின் under screen camera அறிமுகம் செய்யப்பட்டது அதனுடன் Mesh talk தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.தற்போது வரை இதனைப் பற்றிய செயல்பாடு மற்றும் முழுமையான விளக்கம் வெளியிடப்படவில்லை.
ஒப்போ நிறுவனம் வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பத்தை தனது தயாரிப்புகளில் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment