Mi நிறுவனத்தின் குறைந்த விலையில் இரண்டு புதிய தயாரிப்புகள் அறிமுகம்...

Mi நிறுவனம் தனக்கென்று பெரிய வாடிக்கையாளர் சந்தையை கொண்டுள்ளது. அதன் தயாரிப்புகளை வாங்குவதற்கு என்று ரசிகர் கூட்டமே உள்ளது. அத்தகைய Mi நிறுவனம் இன்று (Feb 22) புதிய இரண்டு தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.

*Mi portable Bluetooth speaker (16W)


*Mi Neckband Bluetooth Earphones pro


இந்த இரண்டு தயாரிப்புகளும் இன்று முதல் தனது பிரத்தியேக தளமான Mi.com மற்றும் Mi Home appliances வழியாக விற்பனை செய்ய உள்ளது.Mi portable Bluetooth speaker ரூ.2499 என்ற விலையிலும் Mi Neckband bluetooth Earphones pro ரூ.1799 என்ற விலையிலும் அறிமுகம் செய்துள்ளது.அமேசான் தளத்தில் மார்ச் 1 முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Mi portable Bluetooth speaker (16W)

Mi நிறுவனம் portable bluetooth speaker 16W என்ற பெயரில் தனது புதிய bluetooth speaker அறிமுகம் செய்துள்ளது. இந்த Bluetooth ஸ்பீக்கரில் 2 8w driver கொண்ட speaker கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் IPX7 தரம் கொண்ட water resistance கொண்டுள்ளது. இதன் மூலம் தண்ணீர் படும் இடங்களிலும் எந்த ஒரு தயக்கமும் இன்றி பயன்படுத்தலாம். இந்த bluetooth ஸ்பீக்கரில் ஒரே நேரத்தில் 2 Device connect செய்துகொள்ளலாம் இதனை Sterio pair என்று குறிப்பிடுகிறது.
இந்த ஸ்பீக்கரில் இரண்டு Equalizer mode கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் தொடர்ந்து 13 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.இதில் Microphone கொடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் இதனை நாம் பேசுவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் மொபைல் போன் வசதியின்றி ஸ்பீக்கரில் பேசிக் கொள்ளலாம்.இந்த speaker ரூ.2499 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது.

mi portable Bluetooth speaker


Mi Neckband Bluetooth Earphones pro

Mi நிறுவனத்தின் Neckband bluetooth Earphones pro இதன் முந்தைய மாடல் Mi neckband Bluetooth earphone விட சிறப்பாக உள்ளது.முந்தைய மாடல் ரூ.1599 விலையில் அறிமுகம் செய்தது.தற்பொழுது Mi Neckband bluetooth Earphones pro ரூ.200 மட்டும் அதிகரித்து ரூ.1799 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. தற்பொழுது ANC அம்சதினை கூடுதலாக சேர்த்துள்ளது.அதாவது ACTIVE NOISE CANCELLATION இதன் மூலம் ஒரு button அழுத்துவதன் மூலம் வெளிப்புறம் உள்ள இரைச்சலை 90% வரை இடையூறு செய்யாதவாறு குறைக்க முடியும்.
IPX5 தரம் water resistance பாதுகாப்பு கொண்டுள்ளது.micro usb charge port, பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் வரை தொடர்ந்து பயன்படுத்தலாம்.இதில் 10mm dynamic driver,music control buttons கொடுக்கப்பட்டுள்ளது.
mi neckband wireless earphones





Post a Comment

Previous Post Next Post