இந்தியாவில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கருத்துக்களும், வதந்திகளும் பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சமூக வலைத்தளங்களுக்கு என்று வழிக்காட்டுதல் மற்றும் நெறிமுறை வெளியீடு டிஜிட்டல் மீடியா சட்டம் 2021 என்ற புதிய சட்டத் திட்டங்களை அறிவித்து வருகிறது.
இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு சமூக வலைத்தளங்கள் தங்கள் பயனர்கள் குறித்த தகவல்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் அவர்கள் பதிவிடும் கருத்துகளுக்கு பொறுப்புக்கூறல் முதலியவற்றை நடைமுறைபடுத்த வேண்டும்.
சமூக வலைத்தளங்கள் social networks இந்தியாவில் வணிகம் செய்வதற்கு வரவேற்கப்படுகின்றன இருந்தபோதிலும் அவர்கள் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். பேஸ்புக் ,ட்விட்டர், வாட்ஸ்அப், மற்றும் பல சமூக வலைத்தளங்களில் பயனர்கள் தவறாகவோ அல்லது வன்முறையைத் தூண்டும் விதத்தில் பதிவிடும் பதிவுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். பயனர்கள் பதிவிடும் பதிவுகளுக்கு நெறி முறைகளை உருவாக்கி அவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
அரசாங்கம் இந்த சட்டத் திட்டங்களை உருவாக்குவதற்கு முக்கியமான காரணங்கள் தவறான செய்திகளைப் பரப்புதல், ஆபாசமான பதிவுகளை தடுத்தல், மதத்தை இழிவு படுத்துதல், சமூக துரோகிகளை கண்காணித்தல் போன்றவற்றை தடுப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் தங்கள் வணிகத்தை தொடர்ந்து நடத்த வேண்டுமேயானால், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். அரசாங்கத்திற்கு தேவைப்படும் பயனர்கள் தகவல்களை அளித்து உதவ வேண்டும் என்று கூறுகிறது.
Post a Comment