வாட்ஸ்அப் செயலிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் புதிதாக நோட்டிபிகேஷன் வருகிறது. அதாவது தங்களுடைய புதிய WhatsApp privacy policy தனியுரிமை கொள்கை களை ஏற்றுக்கொள்ளும்படி நோட்டிபிகேஷன் காட்டுகிறது. "WhatApp is updating its terms and privacy policy,"வாட்ஸ்அப் பயனர்களின் தகவல்களை பேஸ்புக்கிற்கு ஷேர் செய்வது தான் இந்த தனியுரிமை கொள்கை மாற்றம்.
புதிய கொள்கை காலகெடு
பேஸ்புக் கடந்த 2014 ஆண்டுதான் வாட்ஸ்அப் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. அதன்பின்பு பல புதிய மாற்றங்களை அறிமுகம் செய்தது சமீப காலத்தில் வாட்ஸ்அப் பே அதன் செய்வது. தற்பொழுது வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை WhatsApp privacy policy புதுப்பித்துள்ளது. அதற்கு நாம் பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் அவ்வாறு அளிக்கவில்லை என்றால் நாம் இனிமேல் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது.
தகவல்கள் பரிமாறப்படும் தனியுரிமை கொள்கை
அப்படி அந்தக் கொள்கையில் என்ன கூறியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் நமது தகவல்களை பேஸ்புக் நிறுவனத்துடன் செயல் செய்வதுதான் இந்த கொள்கை, ஒருவரிடமிருந்து இன்னனொருவருக்கு அனுப்பப்படும் மேசேஜ்கள் பாதுகாப்பானவை. பிறரால் படிக்க முடியாத encrypted செய்யப்பட்டவை என்பது தான் வாட்ஸ் அப் செயலியில் தனித்துவமாக இருந்தது. ஆனால் இப்போது இதில் சமரசம் செய்துகொண்டுள்ளது.
ஆனால் தற்பொழுதும் என்கிரிப்டட் வடிவில் தான் வாட்ஸ்அப் சர்வரில் தகவல்கள் சேமித்து வைக்கப்படுகிறது என்று கூறுகிறது.ஆனால் நாம் வாட்ஸ் அப் செயலியை எவ்வளவு நேரம் பயன்படுத்துவோம் ஸ்டேட்டஸ் கால் மெசேஜ் போன்றவற்றை எவ்வளவு நேரம் பயன்படுத்துவோம் என்பதை சேமித்து வைக்கிறது. முக்கியமாக கவனிக்க வேண்டியது மூன்றாம் தரப்பு செயலிகளுக்கு நம்முடைய தகவல்கள் பரிமாறப்படும் என்று கூறி உள்ளது.
தகவல்கள் பேஸ்புக்கிற்கு பரிமாறப்படுவது பாதுகாப்பானதா..?
பேஸ்புக் நிறுவனத்தின் செயலிகளான மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், மற்றும் அதன் வெப்சைட் ஆகியவற்றுக்கு தகவல்கள் பரிமாறப்படும் என்றும் மேலும் இதன் மூலம் உங்களது சேவை மேம்படுத்தப்படும் என்று கூறுகிறது. இந்த மாற்றத்தினால் பெரிய அளவில் பாதிப்பு ஏதுமில்லை. மேலும் எந்தெந்த தகவல்களைத் தனிப்பட்டதாக வைத்திருக்க வேண்டும், எந்தெந்த தகவல்களைச் சேகரித்து எங்கள் தாய் நிறுவனமான Facebook உடன் பகிர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் பகிரும் தகவல்கள், பயனர்களுக்குச் சிறந்த அனுபவத்தை வழங்குவதிலும், பாதுகாப்பை அதிகரிப்பதிலும் எங்களுக்கு உதவுகின்றன என்று வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment