நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை சரியான முறையில் பராமரிக்காமலும் முறையாக பயன்படுத்தாமல் செய்யும் சில தவறுகளால் பொருட்கள் பாதிப்படைவது உண்டு. அதனால் நமக்கும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புண்டு, அவ்வாறு நாம் பயன்படுத்தும் பொருட்களில் அறியாமல் செய்யும் தவறுகளை இங்கே தொகுத்துள்ளோம்.
ஏ.சி பராமரிப்பு
*தற்பொழுது ஏசி என்பது அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக ஆகிவிட்டது. வீடு மற்றும் அலுவலகங்களில் படுத்தப்படும் ஏசி ஐ சரியான முறையில் பராமரிக்க வேண்டும். அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும்.மேலும் பில்டர்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை கலட்டி அதிலுள்ள அழுக்குகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.முட்டைகளை அதற்குரிய சர்வீஸ்மேன் பார்க்க வேண்டிய அவசியமில்லை நாமே சுத்தம் செய்யலாம். இது ஏசிக்கு மட்டுமல்ல உங்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
*ஏ.சி இயங்கும் பொழுது ஜன்னல்களைத் திறக்க வேண்டாம்.சிலர் ஜன்னல்களை திறந்து அதன் மூலம் வரும் காற்று அறையில் உள்ள வெப்பத்தை விரைவில் குறைக்கும் என்று தவறாக எண்ணுகின்றனர். ஜன்னலை திறந்து வைப்பதன் மூலம் கூலிங் ஆவது தாமதமாகும். ஜன்னல்களை திறந்து வைத்தால் அதன்மூலம் வெப்பக்காற்று ஏசியை பாதிப்படையச் செய்யலாம்.
*உங்கள் அறைக்கு சரியான அளவிலான ஏ.சி தேர்ந்தெடுக்க வேண்டும். பெரிய அறைக்கு சிறிய ஏசியை வாங்கும் பொழுது, அதனால் அரைக்க தேவையானவை கூலிங் அளிக்க முடியாது. இதனால் மின்சாரமும் அதிக செலவாகும். மேலும் சிறிய அறைக்கு பெரிய அளவிலான ஏ.சி வாங்கும் பொழுது அதிகப்படியான கூலிங் ஏசியில் நீர் வடிய செய்யும். ஆதலால் சரியான ஏசியை தேர்ந்தெடுப்பது நல்லது.
லேப்டாப் பராமரிப்பு
*லேப்டாப் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் அதனை சார்ஜரில் கனெக்ட் செய்த நிலையிலேயே பயன்படுத்துவர்கள். அவ்வாறு பயன்படுத்தும்போது லேப்டாப் பேட்டரி விரைவில் மோசமடைகிறது இதனால் அதன் ஆயுட்காலம் குறைகிறது.
*லேப்டாப் சார்ஜ் செய்யும் பொழுது பேட்டரியின் அளவு 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வேண்டும் அதற்கு மேல் சார்ஜ் செய்யக்கூடாது. அது பேட்டரியின் ஆயுட்காலத்தை குறைக்கும். மேலும் 40 சதவீதத்திற்கு கீழ் சார்ஜ் குறைய விடவும் கூடாது.
*லேப்டாப் நாம் வீட்டில் பயன்படுத்தும் பொழுது பெரும்பாலும்,அதனை சோபாவில் அல்லது கட்டில் பெட் மீது வைத்து பயன்படுத்துவோம் அவ்வாறு பயன்படுத்தும் பொழுது அதன் வெப்பம் சரியான முறையில் வெளியேற முடியாமல் லேப்டாப் அதிகப்படியாக வெப்பமடைகிறது. ஆதலால் லேப்டாப் பயன்படுத்தும் பொழுதும் வெப்பம் வெளியே ஏறும் வகையில் இடைவெளி உள்ள இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
*சிலர் லேப்டாப்பிற்கு SDD பதிலாக பழைய HD ட்ரைவ்களை பயன்படுத்துகின்றனர்.அதனை லேப்டாப்பில் கனெக்ட் செய்து பயன்படுத்தும் பொழுது அவற்றில் ஏதேனும் அசைவுகள் செய்தாள் அவை பாதிப்படைய வாய்ப்புள்ளது. ஆதலால் பெரும்பாலும் HDD டெக்ஸ்டாப் கணினியில் பயன்படுத்துவது நல்லது.
அயன் பாக்ஸ்
*நாம் வீட்டில் பயன்படுத்தும் அயன்பாக்ஸில் தண்ணீர் நிரப்பி பயன்படுத்தும் வகையில் இருந்தால். அவற்றில் உப்புத்தண்ணீர் நிரப்புவதே தவிர்க்க வேண்டும்.உப்புத் தண்ணீர் நிரப்புவதன் மூலம் அதிலிருந்து உப்பு அயன் பாக்ஸில் படிந்து பாதிப்படைய செய்யும் எனவே அதற்கு பதிலாக நல்ல தண்ணீர் பயன்படுத்த வேண்டும்.
*அயன் பாக்ஸ் பயன்படுத்தும் முடித்தவுடன் அதிலிருந்து நீரை முழுவதுமாக வெளியேற்றி விட வேண்டும் அவ்வாறு இல்லாமல் அதிலேயே மீதம் வைத்து விடுவது ஆபத்தானது. துரு பிடிக்கச் செய்யும். மேலும் தண்ணீர் கசியவும் வாய்ப்புள்ளது.
*அயன் பாக்ஸ் அடிப்பகுதியில் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.அவற்றில் ஏதேனும் முன்னோர்கள் படிந்திருந்தால் அவை இந்தத் துளையின் வழியாக உள்ளே செல்ல வாய்ப்புள்ளது. எனவே சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
Post a Comment