நாம் நமது ஸ்மார்ட் போனில் எந்த ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து அதனை இயக்கும் பொழுது ஒரு சில வசதிகளை பயன்படுத்திக் கொள்வதற்காக அந்த அப்ளிகேஷன் அனுமதி கேட்கும். அதற்கு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே அந்த அப்ளிகேஷன் இயங்கும். அப்ளிகேஷன் ஸ்மார்ட்போனில் இயங்குவதற்கு சில தகவல்கள் தேவைப்படும் அதற்காகவே சேவைகளை பயன்படுத்த அனுமதி கேட்கும் அதற்குத் தேவைப்படும் சேவைகளுக்கு நாம் அனுமதி அளித்தால் மட்டுமே அந்த அப்ளிகேஷன் முழுமையாக இயங்க முடியும்.
எடுத்துக்காட்டாக போட்டோ எடிட் செய்வதற்கு ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யும்பொழுது அதனை இயக்குவதற்கு நமது கேமரா மற்றும் ஸ்டோரேஜ் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்கும். அதற்கு அனுமதி அளித்தால் மட்டுமே அந்த அப்ளிகேஷன் இயங்கும். அவ்வாறு அனுமதி அளிப்பதன் மூலம் அந்த அப்ளிகேஷன் மொபைலில் உள்ள அனைத்து போட்டோக்களையும் பார்க்க முடியும் நமது அனுமதியில்லாமல் அதனை சேமித்து கொள்ளவும் முடியும்.
எந்த வகையான அனுமதிகளை தவிர்க்க வேண்டும்..?
அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யும்பொழுது அது கேட்கும் அனுமதிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் பாதுகாப்பானது மற்றும் பாதுகாப்பற்றது. சில அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்யும் போது எந்தவொரு அனுமதியும் கோரமல் இயங்கும். அவை பாதுகாப்பானவை மேலும் அவற்றால் நமக்கு எந்தவித ஆபத்தும் இல்லை.
சில அப்ளிகேஷன்கள் இன்ஸ்டால் செய்யும்பொழுது Camera,Media, Location, contacts, இவையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்கும் அவற்றினை நாம் அனுமதி அளிக்கும் பொழுது நம்முடைய தகவல்கள் திருடு போகும் அபாயம் உள்ளது. ஆதலால் நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் தேவையானதா அதை பயன்படுத்துவதால் தகவல்கள் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.மேலும் தேவையானவற்றைத் தவிர மற்ற வீணான அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
* “Allows a calling app to continue a call which was started in another app.” ஒருவருக்கு கால் பேசுவதற்கு ஒரு அப்ளிகேஷன் மூலமாக கால் செல்வதற்கு நாம் அனுமதி அளிக்கும் பொழுது, அந்த அப்ளிகேஷன் நாம் பேசும் உரையாடல்கள் மற்றும் அடிக்கடி பேசும் தொலைபேசி எண்கள் முதலியவற்றை தரவு தளத்தில் (Data base) சேமித்து வைத்துக் கொள்ளும். நம்முடைய உரையாடல்கள் மற்றொருவர்கண்காணிக்க வாய்ப்புள்ளது.
*"Allows an app to access location in the background"லொகேஷன் பயன்படுத்திக்கொள்ள அப்ளிகேஷனுக்கு அனுமதி அளிக்கும் பொழுது நம்முடைய இருப்பிட விவரங்கள் நாம் செல்லும் இடங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது மேலும் அந்த குறிப்பிட்ட அப்ளிகேஷனை close செய்து வைத்திருந்தாலும் நம்முடைய இருப்பிடத்தை கண்காணிக்க முடியும்.
*“Allows an app to access approximate location.” இந்த சேவையின் மூலம் நாம் சரியாக இருக்கும் எத்தனை செல்போன் டவர் மூலமாக அறிந்து கொள்ள முடியும் இதன் மூலம் நமக்கு ஆபத்தான காலங்களில் நாம் உதவி பெற முடியும் ஆனால் இவை அதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை.
*“Allows an application to recognize physical activity.” உடற்பயிற்சி செய்வதற்கு பயன்படுத்தும் சாதனங்களுக்கு இந்த சேவையை அனுமதி அளிக்கும் பொழுது நம்முடைய அனைத்து செயல்பாடுகளும் கண்டறிய முடியும் அதன் மூலம் உடற்பயிற்சி எளிமையாக மேற்கொள்ளலாம்.
*“Required to be able to access the camera device.” பெரும்பாலான அப்ளிகேஷன்கள் கேமராவின் அனுமதியை கேட்கிறது, நாம் பயன்படுத்தும் போட்டோ எடிட்டிங், சமூக வலைத்தளங்கள், விளையாட்டு அப்ளிகேஷன்கள் போன்ற அனைத்தும் கேமராவின் சேவையை பயன்படுத்துகிறது. இது ஆபத்தை விளைவிக்கக் கூடியது ஏனென்றால் நம்முடைய அனுமதி இல்லாமலேயே நம்முடைய கேமராவை இயக்க முடியும்.
*“Allows an application to read the user’s call log.” கால் விவரங்களை அனுமதி அளிக்கும் பொழுது நாம் அடிக்கடி பேசும் நண்பர்கள் மற்றும் வியாபாரம் சம்பந்தமான வாடிக்கையாளர்கள் அனைவரும் எண்களும் கண்காணிக்க வாய்ப்புள்ளது.
*“Allows an application to read the user’s contacts data.” இதன் மூலம் நாம் சேமித்து வைத்திருக்கும் அனைத்து எண்களும் அந்த அப்ளிகேஷன் தரவுத்தளத்தில் சேமித்து வைத்துக் கொள்ளும்.
*“Allows an application to read from external storage.” ஸ்டோரிஸ் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கும் பொழுது நாம் நம்முடைய போனில் வைத்திருக்கும் போட்டோக்கள் வீடியோக்கள், ஆடியோக்கள் அனைத்தையும் அந்த அப்ளிகேஷன் கண்காணிக்க முடியும் சேமித்து வைக்க முடியும் இதன் மூலம் நம்முடைய அந்தரங்க தகவல்களும் வெளியாக வாய்ப்புள்ளது.
*“Allows an application to read SMS messages.” நாம் மற்றவருடன் கலந்துரையாடும் மெசேஜ்கள் அனைத்தையும் இதன்மூலம் அந்த அப்ளிகேஷன் கண்காணிக்க முடியும். இவற்றின் மூலமே நம்முடைய அந்தரங்க உரையாடல்கள் முக்கியமான உரையாடல்கள் அனைத்தும் வெளியாகிறது.
*“Allows an application to record audio.” ஒரு முறை அனுமதி அளித்து விட்டால் அவற்றைக் கொண்டு நமக்குத் தெரியாமலேயே நம்முடைய உரையாடல்களையும் ரெக்கார்ட் செய்து கொள்ளும்.
மேற்கூறியவாறு அனைத்து விதங்களிலும் ஆபத்துக்கள் உள்ளது அதற்காக எந்த ஒரு அப்ளிகேஷன்களையும் பயன்படுத்த வேண்டாம் என்று கூறவரவில்லை. மாறாத நமக்குத் தேவையில்லாத பயன்படாத அப்ளிகேஷன்களை வைத்திருக்கக் கூடாது மேலும் குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அப்ளிகேஷனை தவிர மற்ற மூன்றாம் தர அப்ளிகேஷன்களை பயன்படுத்தக்கூடாது.வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் சார்ந்த எடிட்டிங் அப்ளிகேஷன்களை பயன்படுத்தும்பொழுது நம்முடைய பெர்சனல் வீடியோ மற்றும் போட்டோக்களை அதில் பதிவேற்றுவது தவிர்த்துக் கொள்ள வேண்டும். எது தேவையோ அதனை மட்டும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் தேவையற்றது வைத்திருப்பது நமக்கு அதிக அளவு ஆபத்தை விளைவிக்கக் கூடும் நம்மை அறியாமலும் நிகழக்கூடும். இப்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக் காலத்தில் விழிப்போடு இருப்பது அவசியம்.
Post a Comment