மதி கெட்டான் சோலைலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் இந்த மதிகெட்டான் சோலை அமைந்துள்ளது.
- கொடைக்கானலில் அனைவரும் பார்வையிட அனுமதிக்கப்படாத ஒருசில பகுதிகளும் உள்ளன.
- அவற்றுள் ஒன்றுதான் இந்த மதிகெட்டான் சோலை.
- இக்காடு 1897ல் திருவிதாங்கூர் ஆட்சிக்காலத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.
- இங்கு சோலா எனப்படும் ஒருவகை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
- இவ்வனப்பகுதிக்கு தென்மலை ஈரக்காடு எனும் சிறப்புப் பெயரும் உண்டு.
- இதை ஒரு குட்டி மன்னார் வளைகுடா என்றோ அல்லது குட்டி அமேசான் காடுகள் என்றோ அல்லது குட்டி மரியானா அகழி என்றும் கூட அழைக்கலாம்.
- அந்த அளவுக்கு பலவகை தாவர மற்றும் விலங்கு உயிரினங்கள் வாழும் பகுதியாக இந்த மதிகெட்டான் சோலை விளங்குகிறது.
- இச்சோலைக்குள் சென்ற பின் திசைகளைக் கண்டறிவது கடினம். அனைத்துத் திசைகளிலும் ஒன்று போலத் தோன்றுமாம்.
- அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டால் பாதையைக் கண்டறிவதில் குழப்பம் ஏற்படும்.
- இவ்வாறு நம் அறிவை மயக்குவதால் தான் இதற்கு மதிகெட்டான் சோலை என்ற பெயர் வந்ததாம்.
- இக்காட்டுப் பகுதிக்குள் செல்ல அவ்வூரில் வசிக்கும் மக்களே சற்று அச்சம் கொள்ளுவர் என்று கூறுவதுண்டு.
- இக்காட்டுக்குள் சென்று திரும்பியவர்கள் மிகச் சிலரே என்றும் அவர்களும் புத்தி மழுங்கியே திரும்பியுள்ளதாகவும் கூறுவர்.
- இக்காட்டுப் பகுதி கொடைக்கானலுக்கு அருகில் பேரிஜம் பகுதியில் அமைந்துள்ளது.
- இந்த காட்டுப்பகுதி 12 கி.மீ. சுற்றளவு உடையது என்று கூறுவர்.
- ஒருசிலர் மரத்தின் பகுதியிலிருந்து விழும் ஒருவகைப் பொருளை மிதிப்பதால் அவர்கள் குழப்பம் அடைகின்றனர் என்றும்,
- ஒருசாரார் ஒருவகைப் பூ வின் வாசனையை நுகர்வதால் அவர்களின் அறிவு மழுங்கிப் போவதாகவும் கூறுவர்.
- ஓர் அரசாங்கமே இவ்வேலியைத் தாண்டி சென்ற 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்று எச்சரிப்புப் பலகை வைக்கும் அளவுக்கு இப்பிரதேசம் மர்மப்பிரதேசமாக விளங்குகிறது.
- இங்கு மூலிகை மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
- இது பழனியிலிருந்து 85 கி.மீ. தொலைவிலும், கொடைக்கானலில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
- கிட்டத்தட்ட 12.82 ச.கி.மீ. பரப்பளவில் இக்காடு அமைந்துள்ளது.
- இக்காட்டில் பூக்கும் ஒருவகைப் பூ மண்ணில் விழுந்து மக்கும் போது அதன் வாசனையை நுகர்ந்தாலோ அல்லது அப்பூவியை மிதித்தாலோ அவர்கள் அறிவு மழுங்கிப் போகும் என்று கூறுவர்.
- ஆனால் தாவரவியல் விஞ்ஞானிகள் பலரும் இப்படி ஒரு பூ இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என முற்றிலும் திட்டவட்டமாக மறுக்கின்றனர்.
- சித்தர்களின் குறிப்புப்படி, சித்தர்கள் சொக்குத்தூள் என்று ஒன்றைத் தயாரிப்பர்.
- அந்த சொக்குத்தூள் பற்றிய குறிப்புகளுள் மதிகெட்டான் சோலை பற்றிய குறிப்புகளும் உள்ளன.
- அந்த மூளையை மயக்கும் மருந்தை தயாரிக்க திகைப்புண்ணு எனும் ஒன்றைப் பயன்படுத்துவர்.
- அந்த திகைப்புண்ணு கீழே கிடக்கும்போது யாரேனும் அதைத் தெரியாமல் மிதித்தாலோ அல்லது அது நம்மீது பட்டாலோ அதிலிருந்து வரும் ஒருவகை நறுமணம் நம் மூளையை பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
- இக்காட்டினுள் சூரிய ஒளி ஊடுருவுவதே கடினம். ஆகையால் இக்காடு மிகவும் இருட்டாக இருக்கும்.
- ஒருசிலர் இங்கு மிக மிக அரிதினும் அரிதான மூலிகைகள் இருப்பதால் தான் இது பாதுகாக்கப்டுவதாகவும் கூறுவர்.
- அறிவியல் கண்ணோட்டத்தில் காணும்போது அறிவை மழுங்கச் செய்யும் வகையான தாவரங்கள் ஏதுமில்லை என்ற கூற்றும் முன்வைக்கப்படுகிறது
Post a Comment