உலகிலேயே மிக அமைதியான இடம்..


இந்த பதிவில் குறிப்பிடப்போவது ஒரு ஆளில்லாத தீவோ அல்லது ஒரு பாலைவனமோ கிடையாது மாறாக அது ஒரு சிறிய அறை. ஆம், Microsoft நிறுவனம் அவர்களுடைய தலைமை கிளையின் (Redmond Washington, USA) Building 87-ல் அமைத்துள்ள ஒரு ஆன்-எகோயிக் சேம்பர் (Anechoic Chamber) அறைதான் உலகிலேயே மிகவும் அமைதியான இடம் ஆகும்.

இது எந்த அளவிற்கு அமைதியான இடமென்றால் இந்த அறையின் பின்னனி இரைச்சலின் (Background Noise) அளவு -20.35 dBA (டெசிபல்). இந்த இடத்தில் உருவாகும் இரைசலைக் குறைப்பதற்காகவே ஆப்பு வடிவ ஒலி உறிஞ்சிகள் (Sound Absorbing Wedges) அறைகளின் அனைத்து இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.

படம் : ஆப்பு வடிவ ஒலி உறிஞ்சிகள்

இந்த இடமானது Microsoft நிறுவனம் தங்களுடைய மின்னணு சாதனங்களின் ஒலித்திறனை பரிசோதிப்பதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப் பட்ட இந்த இடமானது மின்னசோட்டாவின் Orfield Laboratories-ல் அமைக்கப்பட்டுள்ள Anechoic Chamber-ஐ விட சிறந்ததாகும்.இருப்பினும் Orfield Laboratories-ல் உள்ளதைப் போல இந்த இடத்தில் மனிதர்களுக்கு அனுமதி கிடையாது .இந்த இடமானது 2015-ல் உலகின் மிக அமைதியாக இடம் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

மனிதர்கள் அனுமதிக்கப்படும் இடங்களில் அமைதியான இடம் மினசோட்டா-வின் Orfield Laboratories-ல் உள்ள Anechoic Chamber ஆகும். 2012-ல் உருவாக்கப்பட்ட இந்த அறையின் பின்னணி இரைச்சலின் அளவு சுமார் -9.4 dBA ஆகும். இது எந்த அளவுக்கு அமைதியான இடமென்றால் ஒரு மனிதனால் தனியாக இங்கு 45 நிமிடம் கூட இருக்க முடியாதாம். அதற்கு மேல் இருக்க முயற்சித்தால் அந்த மௌனமே நம்மை பைத்தியமாக்கி விடுமாம்.

இதற்கான காரணத்தை இந்த ஆராய்ச்சி கூடத்தின் நிறுவனரான Steven Orfield கூறியது,' தனியாக வெளிச்சமில்லாமல் இந்த அறையில் ஒருவர் இருந்தால் சில நிமிடங்களில் இந்த அறைக்கு அவர்களின் கேட்கும் திறன் தகவமைந்து விடும். முதலில் அவர்களுடைய இதயத்துடிப்பே அவர்களுக்கு கேட்க ஆரம்பிக்கும், பின்னர் சுவாசிக்கும்போது நுரையீரல் சுருங்கி விரியும் சத்தமும் கேட்க ஆரம்பிக்கும். நேரம் ஆக ஆக வயிற்றின் உள்ளுறுப்புகளின் அசைவுகளின் சத்தம், இரத்த ஓட்டத்தின் சத்தமெல்லாம் நம் காதுகளில் கேட்கும்'. அதாவது உள்ளே சென்ற சில நிமிடங்களில் நாமே ஒலிமூலமாக மாறிவிடுவோமாம்‌! இதுவே நமக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தி நம்மை மேலும் மேலும் பதற்றமாக்கி கட்டுப்பாட்டை கடந்தால் நாம் பைத்தியமாகவும் வாய்ப்புள்ளதாம்.

உலகிலேயே மொத்தமாக ஆறு Anechoic Chamber அறைகள்தான் உள்ளனவாம். ஏனெனில் இதுபோன்ற அறைகளை உருவாக்க அதிகம் செலவாகும். அதாவது ஒரு ஆனெகோயிக் சேம்பர்-ஐ உருவாக்க சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ 700 கோடி இந்திய ரூபாய்) செலவாகுமாம்.

Post a Comment

Previous Post Next Post