பெரும்பாலான இந்தியர்களுக்கு தெரியாத வியப்பூட்டும் விஷயங்கள்..

கீழ் உள்ள படத்தை பாருங்கள் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என இருப்பது சீனா, துளி குறைவாக இந்தியா. அப்படி பிள்ளைகளை பெற்று போட்டுக்கொண்டே இருக்கிறோம் போல. அமெரிக்காவை பாருங்கள் 4.3% இரட்டை இலக்கம் கூட இல்லை. பிள்ளைகள் பெற்றுக்கொள்வதே இல்லையோ.

சரி சராசரி ஆயுட்காலம் பாருங்கள், இந்திய மக்கள் அதிகபட்சம் 70 வயது தான் வாழ்கிறார்கள் ஆனால் அமெரிக்க மக்கள் 80 வயது கடந்தும் வாழ்கிறார்கள்.

இன்னும் ஒன்று, பிறப்பு விகிதம் அதில் இந்தியா அமெரிக்காவை வீட ஒன்று அதிகம். அதாவது அமெரிக்காவில் ஒரு பெண் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்றெடுக்கிறாள், இந்தியாவில் இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளை பெற்றெடுக்கிறாள் (ஒரு பிள்ளை போதும் என சொல்லும் நாடே இல்லை).

அமெரிக்கர் சராசரியாக பத்து ஆண்டுகளுக்கு மேல் வாழ்கிறார். குழந்தை பெறுவது ஒன்று குறைவாக உள்ளது இந்த கணக்கின் படி பார்த்தல் இந்தியா அமெரிக்காவை விட மக்கள் தொகையில் குறைந்து அல்லது சற்று கூடுதலாக தானே இருக்க வேண்டும்? ஏன் இவ்வளவு தூரம்? (17.9 - 4.7)

ஏனென்றால் இன்று அமெரிக்காவில் இருக்கும் பெரும்பான்மை மக்கள் ஐரோப்பியர்கள். அங்கே இருந்த பூர்வ குடிகளை அடிமைகளாக்கி கொன்று குவித்து அதன் மேல் குடி அமர்ந்தவர்கள்.

கொலம்பஸ் இந்தியாவை அடைய வடக்கு முகமாக சென்றால் சுலபம் என எண்ணினார். இத்தாலியில் இருந்து புறப்பட்டு வடக்கு அட்லாண்டிக் கடல் வழியாக இன்றைய அமெரிக்காவை அடைந்து அது ஆசியா என நம்பி சில மையில் தூரம் நிலத்தில் பயணித்தால் இந்தியா வரும் என இருந்து ஏமாந்து போனார். ஆகயால் தான் அந்த பூர்வ குடி மக்களை செவ்விந்தியர்கள் என்று அழைக்கிறார்கள். (அப்படி என்றால் உண்மையில் இந்தியர்கள் நிறம் கருப்பு. இன்றைய வட இந்தியர்கள் சொல்வது போல் இல்லை)

அதீத நாகரீகம் இல்லாத அவர்களை நல்வழி படுத்துவதாக கூறி அடிமையாக்கி கொன்று அழித்து பின்னர் அங்கேயும் பிரிட்டன், பிரான்ஸ் ஆளுகைக்கு வந்து இவர்கள் சுதந்திரம் பெற்றனர்.

ஆனால் கருத்து, மொத்த இந்திய நிலப்பரப்பை நகலெடுத்து சரி பாதி மக்கள் தொகையை அங்கு கொண்டு வைத்தால் நாம் மக்கள் தொகையில் எங்கே இருப்போமோ அங்கே தான் அமெரிக்கா இருக்கிறது. மொத்த ஐரோப்பிய மக்களில் கணிசமான மக்கள் அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் வாழ்கின்றனர். இவர்கள் தேசத்திற்க்கே வயது 500 ஆண்டுகள் தான். ஹீட்லரை விட கொடூரமாக ஒரு இனத்தை அழித்து இடம் பெயர்ந்தவர்கள்.

எப்போதும் புது வீடு அழகாக தான் இருக்கும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, பல படையெடுப்புகளை பார்த்த நாடு இப்படி தான் இருக்கும், கூட்டமாக, நெரிசலாக, சத்தமாக, அழுக்காக இருக்கும்.. இது பெருமை கொள்ள வேண்டிய செய்கை. நேற்று கட்டிய வீட்டை விட ஆயிரம் ஆண்டுகள், மழை வெள்ளம், நில நடுக்கம் என எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் பெருவுடையார் கோவில் (பிரகதீஸ்வரர் இல்லை அவர் பெருவுடையார்) கம்பீரத்தின் அழகு. அது தான் இன்றைய இந்தியா .. (சீனாவும், பாகிஸ்தானும், ஏனைய ஆசிய நாடுகளும் கூட)

Post a Comment

Previous Post Next Post