Instagram Users: Understanding Daily Limits for Optimal Engagement | ஒரு நாளைக்கு பயனர்கள் செயல்களுக்கு Instagram வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகள்

 

Instagram Users Daily Limits for Optimal Engagement

Instagram day limits


Instagram மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்று, மில்லியன் கணக்கான பயனர்கள் நாள் தோறும் Instagram post, live, stories, reels மற்றும் business போன்ற பலவற்றிற்கு பயன்படுத்துகிறார்கள்.

பல மில்லியன் பயனர்கள் கொண்டுள்ள இன்ஸ்டாகிராம் தங்களுடைய பயனர்கள் தொடர்ந்து சலிப்பு அடையாமல் மேலும் தங்களுடைய தனிப்பட்ட வாழ்கையின் வேலைகள் பாதிக்காதவாறு Instagram பயன்படுத்த, பயனர்களுக்கு சில கட்டுப்பாடுகளை உருவாக்கி உள்ளது. ஒரு நாளுக்கு  பயனர்களுக்கான கட்டுப்பாடுகளை பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம்.


Facebook மற்றும் Instagram News feed Algorithm எவ்வாறு செயல்படுகிறது: பயனர்களுக்கு பதிவுகள் காட்டுவதற்கு பின்பற்றும் ரகசியங்கள்


Instagram limits வரம்புகள் அல்லது கட்டுப்பாடுகள் எதற்கு..?

Posting Limit வரம்புகள் : 

Instagram பயனர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 100 புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை இடுகையிட அனுமதிக்கிறது. இருப்பினும்,பயனர்கள் அதிகப்படியான இடுகைகளை பதிவிடும் பொழுது ஸ்பேம் நடத்தையாகக் கருதுவார்கள். 

அது உங்கள் பதிவுகளை பற்றி எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கலாம்.  உங்கள் பார்வையாளர்களுடன் தொடர்ந்து ஆர்வத்தை தக்க வைத்துக்கொள்ள நல்ல தரமான இடுகைகளை உருவாக்கி பகிர்வதில் கவனம் செலுத்துங்கள். 


Like மற்றும் Comments வரம்புகள்: 

இன்ஸ்டாகிராம் ஒரு பயனர் ஒரு நாளில் செய்யக்கூடிய விருப்பங்கள் மற்றும் கருத்துகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகிறது. தற்போது, ​​ஒரு மணி நேரத்திற்கு தோராயமாக 350 Likes மற்றும் 60 Comments  வரம்பு அமைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த வரம்புகளை மீறுவது தற்காலிக நடவடிக்கைகளை தடை செய்யலாம், குறிப்பிட்ட காலத்திற்கு நீங்கள் Like அல்லது Comment செய்வதை தடுக்கிறது.

இந்த வகையில் வரம்பு நடவடிக்கைக்கு உள் வராமல் இருக்க நாள் முழுவதும் தொடர்ந்து Like மற்றும் Comment செய்யாமல் ஒரு குறிப்பிட்ட நல்ல விருப்பன பதிவுகளுக்கு மட்டும்  செய்யுங்கள்.


Follow மற்றும் Unfollow வரம்புகள்

Instagram தங்கள் பயனர்கள் Follow மற்றும் Unfollow செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செய்வதற்கு சில கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது. ஆனால் இந்த  கட்டுப்பாடுகளை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இருந்தபோதிலும் அவற்றை மீறினால் தற்காலிக அல்லது நிரந்தர தடை ஏற்படலாம். பிற கணக்குகளுடன் Follow அல்லது Unfollow  செய்யும் பொழுது இயல்புக்கு மாறாக அதிகமாக செய்யதீர்கள்  அவை spam ஆக செயலாக கருதப்படும்.


நேரடி மெசேஜ் (DM) வரம்புகள்:

Instagram பயனர்கள் ஒரு குறிப்பிட்ட  நேரத்தில் தொடர்ந்து அதிகமான நேரடி மெசேஜ் அனுப்புவதை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை உருவாக்கி உள்ளது. அதன் வரம்புகள் பற்றி முழுமையாக வெளியிடவில்லை,

ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் நீங்கள் அதிகமான DM மெசேஜ் செய்தால் உங்கள் கணக்கு தற்காலிக தடை பெறலாம். நீங்கள் அதிகமான DM செய்யும் பொழுது அது Spam ஆக கருதப்படும். ஆதலால் நீங்கள் சற்று கவனம் செலுத்தி தேவையான அளவில் மட்டும் DM பயன்படுத்துங்கள்.


 

Apple-ன் ஆட்டம் ஆரம்பம்.. புதுசு அறிமுகமான வேகத்தில் பழைய MacBook மாடல் மீது மிகப்பெரிய விலைக்குறைப்பு!


ஹேஷ்டேக் Hashtag வரம்புகள்

இன்ஸ்டாகிராம் ஒரு இடுகைக்கு 30 ஹேஷ்டேக்குகளை Hashtag அனுமதிக்கிறது. அதிகபட்ச Hashtag பயன்படுத்த உங்கள் இடுகைகளுடன் ஒத்துப்போகும் Hashtag பயன்படுத்துங்கள், அதுதான் உங்கள் பதிவுகளை அதற்கான பார்வையாளர்கள் பார்க்க உதவும்,


பொருத்தம் இல்லாத Hashtag பயன்படுத்தும் பொழுது இடுகைகள் பார்வையாளர்களை சென்றடையாது, மேலும் உங்கள் பதிவுகளின் பார்வை எண்ணிக்கை குறையும், உங்கள் பதிவுகளுக்கு இடைக்கால தடை ஏற்படும்.




Instagram வரம்புகள் பயனர்கள் தங்கள் நேரத்தை அதிகமாக Instagram இல் செலவழிப்பதை குறைப்பதை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும Instagram வரம்புகள் சிறிது இடைவெளி எடுத்துக்கொள்ள வழிவகை செய்கிறது. இதன் மூலம் பயனர்கள் சிறப்பான இடுகைகள் உருவாக்க நேரம் கிடைக்கும். Instagram பயன்படுத்துவது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்காமல் இருக்க உதவுகிறது. 


Instagram வரம்புகளுக்குள் வராமல் இருக்க பல வழிகளில் Instagram  பயன்படுத்தலாம், சிறிது சிந்தித்து செயல்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளியில் பயன்படுத்தலாம்.


மேலும் உங்கள் பதிவுகளின் நேரத்தை முன் கூட்டியே தீர்மானித்து வரம்புகளுக்குள் வராமல் அதே சமயம் நீங்க பதிவிட நினைத்த எண்ணிக்கையில் பதிவுகள் செய்யலாம்.


நீங்கள் Follow அல்லது Unfollow செய்வதை வரம்பு அறிந்து ஒரே சமயத்தில் அனைத்தையும் செய்யாமல் கால இடைவெளியில் செய்யுங்கள். Like மற்றும் Comment செய்யும் பொழுது தரமான இடுகைகளுக்கு மட்டும் செய்யுங்கள் அது உங்கள் பயன்படுத்தும் ஆர்வத்தையும் அதிகரிக்கும் மேலும் வரம்புக்குள் வராமல் பயன்படுத்தலாம்.  



Post a Comment

Previous Post Next Post