உங்களின் வாட்ஸஅப் கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட வாய்ப்புள்ளது எச்சரிக்கை..?
வாட்ஸ்அப் whatsapp மிகவும் பிரபலமான செயலி ஆகும். அனைவரின் பயன்பாட்டுக்கும் இது ஒரு முக்கியமான செயலி ஆகிவிட்டது. வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தனியுரிமைக் கொள்கை மற்றும் சில புதுப்பிப்புகள் பயனர்களை சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.
பயனரின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக்கர்கள் முழுவதும் செயல் இழக்க செய்யக்கூடிய வகையில் புதிய அப்டேட் வழங்கியுள்ளது. வாட்ஸ்அப் வழங்கியுள்ள அப்டேட்டில் பயனர் கணக்கை சரி பார்க்கும் முறையில் மாற்றம் செய்துள்ளது. இதனை பயன்படுத்தி ஹேக்கர்கள் பயனர் கணக்கை முழுவதும் செயலிழக்க செய்ய முடியும்.can whatsapp be hacked
பயனர் கணக்கு சரி பார்க்கும் முறையில் உள்ள ஆபத்தை போர்ப்ஸ் பத்திரிக்கையின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களான லூயிஸ் மார்கவெஸ் கார்பின்டரோ மற்றும் எர்னஸ்டோ கேனலஸ் பெரெனா கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர்.
இந்த புதிய அப்டேட் பயனர்களுக்கு மிகவும் ஆபத்தானது ஏனெனில் இது கடினமான செயல் முறையாக இருந்தாலும் மிகவும் எளிமையானது, உங்கள் தொலைபேசி எண்ணை தெரிந்த எவரும் இந்த செயல்முறையை தொலைதூரத்திலிருந்து எளிமையாக மேற்கொள்ளலாம்.இதில் முக்கியமானது என்னவென்றால் நீங்கள் இரண்டு காரணி (two-factor authentication) பாதுகாப்பு அம்சம் வைத்திருந்தாலும் உங்கள் கணக்கை பாதுகாக்க முடியாது.
படிக்க: WhatsApp pink update குறித்து பரவும் ஆபத்தான வதந்திகள் எச்சரிக்கை..?
இது எவ்வாறு செயல்படுகிறது..?
பயனரின் வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கேர் முடக்கம் செய்வதற்கு பின் வரும் 2 account verification வழிகளை பயன்படுத்தி முடக்க முடியும்.முதலாவது account verification OTP மூலம் செய்வது இரண்டாவது verification Timer அதாவது தவறான OTP பல முறைகள் உள்ளீடு செய்யும் பொழுது 12 மணி நேரத்திற்கு OTP புதிதாக உள்ளீடு செய்ய முடியாதவாறு முடக்கப்படுகிறது.
இதனை செய்வதற்கு உங்கள் மொபைல் எண் மட்டும் தெரிந்திருந்தால் போதும் உங்கள் எண்னை பயன்படுத்தி login செய்வதற்கு முயற்சிப்பார்,உங்கள் எண்ணிற்கு தொடர்ந்து OTP வரும். பின் OTP தெரியாததால் அவரால் சரியான OTP உள்ளீடு செய்யமுடியாது,இதனால் தொடர்ந்து பலமுறை தவறான உள்ளீடு செய்வவர்,இதனால் OTP 12மணி நேரத்திற்கு புதிதாக உருவாக்க முடியாத வண்ணம் முடக்கப்படுகிறது.ஆனால் இது ஆரம்பக்கட்டம் தான் நீங்கள் வழக்கம் போல் உங்கள் கணக்கை பயன்படுத்த முடியும்.
தற்பொழுது ஹேக்கர் ஒரு போலியான மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி support@whatsapp.com வாட்ஸஅப் சேவை முகவரிக்கு உங்கள் கணக்கின் விவரங்களை குறிப்பிட்டு இதனை முழுவதுமாக முடக்க ஒரு கோரிக்கை மின்னஞ்சல் செய்வார்.இந்த கோரிக்கையை பெரும் வாட்ஸஅப் இந்த நேரத்தில் வாட்ஸஅப் உங்கள் கணக்கை சரிபார்க்கும் அதில் பல முறை தவறான OTP உள்ளீடு செய்யப்பட்டிருப்பதால் உங்கள் கணக்கு தவறாக கையாடல் படுவதாக உறுதி செய்யும்.
ஒரு மணி நேரத்திற்கு பின் நீங்கள் உங்கள் கணக்கில் இருந்து வெளியேற்றபடுவீர்கள்.தற்பொழுது நீங்கள் மீண்டும் உள்ளீடு செய்ய முயற்சி செய்வீர்கள், ஆனால் உங்களுடைய கணக்கிற்கு OTP 12 மணி நேரத்திற்கு புதிதாக உருவாக்க முடியாத வண்ணம் முடக்கப்பட்டிருக்கும்.இதே நிலை தான் ஹேக்கர் க்கும் இருக்கும்.நீங்கள் குறிப்பிட்ட 12 மணிநேரத்திற்கு பிறகு புதிதாக கணக்கை உருவாக்கலாம்.
இரண்டாவது குறைபாடு
Whatsapp security தற்பொழுது இரண்டாவது குறைபாடு ஹேக்கர் மீண்டும் அதே போன்று சுழற்சி முறையில் செய்வார்,இப்போது தொடர்ந்து இப்படி தவறான உள்ளீடு செயல்முறை மீண்டும் மீண்டும் செய்யப்படுவதால்,வாட்ஸஅப் தானியங்கி கணினி OTP உருவாக்கும் டைமர் 12 மணிநேரத்தில் இருந்து 1 வினாடிக்கு மாறுகிறது.இதன் பொருள் தானியங்கி சரிபார்க்கும் முறை அதன் வரம்பை அடைந்துவிட்டது.
தற்பொழுது உங்கள் போனில் புதிய உள்நுழைவு குறியீடுகள் உருவாக்க முடியாது.இதன் விளைவாக உங்கள் கணக்கு 30 நாட்களுக்கு செயலிழக்கப்படும் இதனை தொடர்ந்து உங்கள் கணக்கை அதன் தரவுத்தளத்தில் இருந்து முற்றிலும் நிரந்தரமாக நீக்கும்.
இது உண்மையில் மிகவும் ஆபத்தான செயல் ஆனால் எளிதான செயல் யார் வேண்டுமானாலும் எங்கிருந்தும் உங்கள் மொபைல் நம்பர் மட்டும் தெரிந்தால் போதும் எளிதாக முடக்க முடியும்.
படிக்க : Telegram Application குறித்து நாம் அறிந்திராத அம்சங்கள்..!
இதற்கு தீர்வு என்ன..?
வாட்ஸஅப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய புதுப்பிப்புகளை வழங்கி வருகிறது.இதனை கண்டுபிடித்தது மூலம் வாட்ஸஅப் குழு இதனை ஆராய்ந்து எளிமையாக சரி செய்ய முடியும்.இருந்த போதிலும் நாம் நம்பிக்கையற்ற சாதனங்களில் வாட்ஸஅப் பயன்படுத்தாமல் பாதுகாப்பாக இருப்பது நல்லது.
இப்போதைக்கு இதற்கு எந்த ஒரு தீர்வும் இல்லை,ஆதலால் உங்கள் கணக்கிற்கு ஏதேனும் உள்ளீடுகள் தொடர்ந்து பெற்றால் உங்கள் கணக்கை யாரோ முடக்க முயற்சி செய்கிறார்கள் என்று அர்த்தம்,உடனே நீங்கள் வாட்ஸஅப் சேவையை குழுவை தொடர்பு கொண்டு உங்கள் கணக்கின் நிலையை தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் கணக்கு முடக்கபடுவதில் இருந்து பாதுகாக்கலாம்.
Post a Comment