ஏன் பெரும்பாலான லோகோ சிவப்பு வண்ணத்தில் உள்ளது…? லோகோவின் வண்ணங்கள் ரகசியம் | Secrets of company Logo colours

 ஏன் பெரும்பாலான லோகோ சிவப்பு வண்ணத்தில் உள்ளது…? லோகோவின் வண்ணங்கள் ரகசியம் | Secrets of company Logo colours


பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் நிறுவன லோகோ சிவப்பு வண்ணத்தில் பயன்படுத்துகின்றனர்.இதற்கான காரணத்தை எப்போதாவது யோசித்து பார்த்தது உண்டா..? இது தற்செயலாக நடக்கவில்லை,ஒரு நிறுவனத்தின் லோகோ வில் முதலில் மக்களை கவர்வது அதன் வண்ணம் மட்டுமே பின்பு தான் அதனுடைய வடிவம் அல்லது மாடல் பார்ப்பார்கள்.90% சதவீத மக்கள் லோகோக்கள் வண்ணங்களால் கவரப்படுகின்றன.


நிறுவனத்தின் லோகோ அல்லது விளம்பரங்கள் உருவாக்கப்படும் போது அதன் வண்ணம் வாடிக்கையாளர்களின் மனதில் வாங்கும் உணர்வை தூண்டும் வகையில் தேர்ந்தெடுக்கின்றனர்.


சிவப்பு வண்ணம் அன்பு,ஆசை,கோபம் போன்ற பல உணர்வுகளோடு ஒன்றிணைந்து உள்ளது.மேலும் சிவப்பு வண்ணத்தை பார்க்கும்போது நம்முடைய இதயத்துடிப்பு அதிகரிக்கிறது.இதன் மூலம் நம்முடைய முடிவெடுக்கும் உணர்வு உண்டாகிறது.


பொதுவாக சிவப்பு வண்ணம் எச்சரிக்கை உணர்வை தூண்டி கவனத்தை ஈர்க்கிறது.மேலும் சிவப்பு வண்ணம் நம் இரத்தத்தின் நிறம் என்பதால் நம்மை அறியாமல் அதன் மீது ஒரு கவனம் உண்டாகிறது.


இதனாலேயே பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது விற்பனை விளம்பரங்கள் சிவப்பு நேரத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்.மேலும் சிவப்பு வண்ணம் நம்மிடையே பசி உணர்வை தூண்டும் என்றும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவோ என்னவோ மெக்டொனால்ட்,கொக்ககோலா நிறுவனங்கள் சிவப்பு வண்ணத்தை பயன்படுத்தலாம்.


சிவப்பு வண்ணம் மேற்கூறிய காரணங்கள் மட்டுமின்றி அது அதிகமான அலை நீளத்தை கொண்டுள்ளது.இது தூரத்தில் இருந்து எளிதில் அனைவராலும் பார்க்கமுடியும்.


உலகத்தின் அனைவராலும் ஈர்க்கப்படுவதால் பெரும்பாலான மக்கள் தகவல் தொடர்பில் சிவப்பு வண்ணத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர்.இது மிகவும் எளிமையாகவும் உள்ளது.


பிற வண்ண லோகோ மற்றும் அது உணர்த்தும் அர்த்தங்கள்

நீல வண்ணம் கடல் மற்றும் வானத்தோடு தொடர்புடையது, அமைதி மற்றும் நம்பிக்கை உணர்வை உண்டாக்குகின்றது. பெரும்பாலானோருக்கு பிடித்தமான வண்ணம், ஆண்,  பெண் இருபாலாருக்கும் பொதுவான வண்ணம், இதனால் சமூக வலைத்தளங்கள் சில நீல வண்ணத்தை பயன்படுகின்றன.


நீல வண்ணம் உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த தொழில்முறை அந்தஸ்தை அளிக்கிறது.மேலும் இது உங்களின் பொருட்கள் அல்லது தகவலை ஆக்கிரமிப்பு செய்யமாட்டோம் என்பதை கூறுகிறது.இதன் மூலம் பாதுகாப்பை உணர்த்துவதாக உள்ளது.


மஞ்சள் வண்ணம் புத்துணர்வையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.வாடிக்கையாளருக்கு சிறந்த தகவல்தொடர்பு மேற்கொள்ளலாம் என்கிற நம்பிக்கையை அளிக்கிறது.சில நேரங்களில் மஞ்சள் நிறம் எச்சரிக்கைக்கான நிறமாகவும் குறிக்கப்படுகிறது.அனைவரின் கவனத்தையும் பெற பயன்படுத்தபடுகிறது.


மஞ்சள் வண்ணம் வாடிக்கையாளர்க்கு நேர்மறையான எண்ணங்களை உருவாக்குகிறது.மேலும் வாடிக்கையாளருடன் நட்புடன் பழகுவோம் என்கிற தோற்றத்தை உண்டாக்குகிறது.


பச்சை வண்ணம் பசுமையை குறிக்கிறது.இது வளர்ச்சி இயற்கையான முறை,இளமையான தோற்றம்,சைவம் போன்ற எண்ணங்களை உருவாக்குகிறது.


பொதுவாக பச்சை நிறம், பொருட்கள் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்பட்டது வாங்குவதற்கு சிறந்தது என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது.சேமிப்பு,பணவளர்ச்சி போன்றவற்றை குறிக்கவும்.நேர்மறையான தீர்வுகளும் பச்சை நிறம் பயன்படுத்த.படுகிறது

கருப்பு வண்ணம் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியது.துல்லியமான சேவையை அளிப்பதாக எண்ணத்தை உண்டாக்குகிறது.விலை உயர்ந்த பொருட்களுக்கு கருப்பு வண்ண பயன்படுத்தப்பட்ட விளம்பரங்கள் அளிக்கப்படும்.இது அந்த பொருளுக்கு கூடுதல் மதிப்பை அளிக்கிறது.

 

கருப்பு வண்ணம் கவனத்தை ஈர்ப்பதற்காக பயன்படுத்தவில்லை,மாறாக நிறுவனம் சிறந்த இடத்தை அடைந்துவிட்டதையும் சேவை தரமானதாக அளிக்கமுடியும் என்ற நம்பிக்கையையும் உருவாக்குகிறது.


Post a Comment

Previous Post Next Post