வாட்ஸ்அப், டெலிகிராம் தவிர்த்து அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட 5 செயலிகள் | 5 Best Secure Messaging Apps

  வாட்ஸ்அப், டெலிகிராம்,செயலிகள் அனைவரும் பயன்படுத்துகின்றனர்.தற்பொழுது ஏற்பட்ட தனியுரிமை கொள்கை பிரச்சினையால் வாட்ஸ்அப் செயலியிலிருந்து டெலிகிராம் செயலிக்கு பலர் மாறியுள்ளனர.இவை தவிர்த்து நாம் அறியாத பாதுகாப்பான செயலிகள் பல உள்ளது. மேலும் பல செயலிகள் சாட் செய்வதற்கும் வீடியோ கால் மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றுக்காக பயன்படுகின்றன.இவற்றை நாம் பயன்படுத்தும் பொழுது நம்முடைய தகவல்களின் பாதுகாப்புத் தன்மையைப் பற்றி யோசிப்பதில்லை.நம்முடைய தகவல்கள் திருடப்பட்டு பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது, தகவல்களை பெறுவதற்கு பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

அதிக பாதுகாப்பு அம்சங்கள் உள்ள செயலிகள்: (செப்டம்பர் 2020 ஆய்வுபடி)
 ஒரு சில செயலிகள் மட்டுமே பயனர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.அவற்றில் நம் தகவல்கள் end to end encryption செய்யபடுகிறது.நாம் அனுப்பும் ஒருவருக்கு அனுப்பும் செய்திகள், போட்டோ, மற்றும் வீடியோக்களை பெறுபவர் தவிர யாரும் பார்க்க முடியாது.அவ்வாறு பாதுகாப்பாக உள்ளதுு.அத்தகைய அதிக பாதுகாப்பு அம்சங்கள் உள்ள செயலிகளை இங்கே தொகுத்துள்ளேன்.

1.Signal App
2.Threema App
3.Wickr me App
4.Wire App
5.Element App (Riot App)

Amazon Republic day sale

ஏன் பாதுகாப்பான Messaging App பயன்படுத்த வேண்டும்..?
               நாம் பாதுகாப்பானது என்று எண்ணி பயன்படுத்தும் பல செயலிகள் பாதுகாப்பானது இல்லை.
Electronic frontier foundation என்ற நிறுவனத்தின் ஆய்வுப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலிகள் (Facebook messanger,Snapchat,Kik messenger, Skype,yahoo messenger) கூட பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கவில்லை.
Messaging apps நம்முடைய உரையாடல்களை கண்காணித்து target advertising அதனை விளம்பரங்களுக்கு பயன்படுத்துகிறது.
மருத்துவம் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை சார்ந்த சேவைகளை பயன்படுத்தும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.அவற்றிலுள்ள நம்முடைய தகவல்கள் திருடு போனால் நமக்கு அதிக ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
தனியுரிமை பாதுகாப்பு மிகவும் முக்கியமானது, நம்முடைய தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு முக்கியத்துவம் தரும் செயலிகள் பயன்படுத்தவேண்டும்.

1.சிக்னல் செயலி (Signal App)
அனைவரும் பயன்படுத்தும் முக்கிய மூன்று செயலிகளை Signal Vs WhatsApp Vs Telegram ஒப்பிட்டுப் பார்த்ததில், சிக்னல் செயலியில் Signal app அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. Signal app தனது நெறிமுறைகளின் படி பயனர்களின் அனைத்து விதமான மெசேஜ், போட்டோ,ஆடியோ, வீடியோ கால், தொடர்புகளையும் end to end encryption செய்து பாதுகாக்கிறது.
மற்ற மெசேஜிங் செயலிகளும் end-to-end என்கிரிப்டீன் செய்கிறது. ஆனால் signal app ஒரு படி மேலே சென்று (metadata) தகவல்களோடு தொடர்புடைய மற்ற தொகுப்புகளையும் பாதுகாக்கிறது.அதாவது ஒரு பாடல் என்று எடுத்துக்கொண்டால் அதனுடன் தொடர்புடைய மியூசிக் டைரக்டர், பாடலாசிரியர், பாடியவர் முதலியவற்றையும் பாதுகாக்கிறது. 

மேலும் சிக்னல் செயலி Signal App புதுவிதமான கொள்கையை கையாளுகிறது.Sealed Sender மெசேஜ் அனுப்பியவர் முதல் அதனை பெறுபவர் வரை முழுவதும் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதாவது அனுப்பப்பட்ட தகவல்கள் பெறுபவர் தவிர யாராலும் பார்க்க முடியாது. சிக்னல் செயலி நிறுவனத்தால் கூட பார்க்க இயலாது. அத்தகைய பாதுகாப்பு கொள்கையை கொண்டுள்ளது.
சிக்னல் செயலியில் தனித்துவமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. பயோமெட்ரிக் அடிப்படையில் நீங்கள் லாக் செய்து கொள்ளலாம். செயலியை பயன்படுத்தும் பொழுது அதனை 2FA  ஸ்கிரீன் ஷாட் Screenshot எடுக்க முடியாது. போட்டோக்களை அனுப்பும் முன் நம்முடைய முகத்தினை மறைக்க ( Blur ) செய்யலாம்.
நம்முடைய தரவுகளை (Data backup)நான்கு இலக்க எண் பாஸ்வேர்ட் கொண்டு பாதுகாக்கலாம். மற்ற சேவைகளை விட இவ்வகையான பாதுகாப்பு அம்சங்கள் மூலம் தனித்துவமாக விளங்குகிறது.

முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள்
*End to end encryption
*Encrypted Metadata
*2FA available
*Encrypted local Data
இல்லாத அம்சம்
*மொபைல் எண் கொண்டு கணக்கு தொடங்க முடியாது

2.Threema App
Threema App மற்றொரு பிரபலமான மற்றும் பாதுகாப்பான செயலி ஆகும். பயனர்களின் தகவல்களை மிகவும் பாதுகாப்பாக கையாளுகிறது. அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் தலையீடுகளுக்கு அடிபணியாமல் தன்னுடைய கொள்கைகளை பாதுகாப்பாக வரையறுத்துள்ளது.
End to end encryption மூலம் அனைத்து விதமான chat,messages,groups மற்றும் status உள்பட அனைத்தையும் பாதுகாக்கிறது.
பயனர்கள் தாங்கள் அனுப்பக்கூடிய நபர்க்கு மெசேஜ்கள் சென்றுவிட்டால்,Threema App அதனை தங்கள் சர்வரில் இருந்து டெலிட் செய்து விடுகிறது.அந்த தகவல்கள் அனைத்தும் பெறக்கூடிய நபரின் மொபைல் ஸ்டோரேஜ் இல் சேமிக்க படுகிறது. இதனால் நம்முடைய தகவல்கள் வெளியே செல்ல வாய்ப்பில்லை.
இந்த செயலியை பயன்படுத்த போன் நம்பர் அல்லது ஈமெயில் ஐடியோ தேவையில்லை, Threema app அனைத்து பயனர்களுக்கும் தனித்துவமான ஒரு ID வழங்குகிறது.அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Threema app மேலும் பல தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது.மெசேஜ், போட்டோ,ஆடியோ மற்றும் ஆடியோ உடன் சேர்த்து pdf,gif,doc,mp3,zip போன்ற பல கோப்புகளை பயன்படுத்தலாம்.
Threema app இன்னும் முழுமையாக அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் இலவசமாக வரவில்லை,விரைவில் வரும் என்று கூறுகிறது.மற்ற பெரிய மெசேஜ் நிறுவனங்களை போல் அல்லாமல் மிகவும் வெளிப்படையான தனியுரிமைக் கொள்கைகளை கொண்டுள்ளது.
முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள்
*End-to-end encryption
*Messages stored in local storage
*Based in Switzerland
*Funded by users
*No user data collection
இல்லாத அம்சம்
*இன்னும் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கவில்லை.

3.Wickr me
Wickr me app இதன் நோக்கமே பாதுகாப்பான சேவையை அளிப்பதாகும். தங்களின் பயனர்களுக்கு முழுமையான பாதுகாப்பு மெசேஜிங் சேவையை வழங்குகிறது.end to end encryption மூலம் voice, text,video,audio,photo அனைத்தையும் பாதுகாக்கிறது.
Wickr me app பயனர்கள் உடைய எந்தவித தகவல்களையும் பெறுவதில்லை. பயனர்களுக்கு பயன்படுத்திக்கொள்ள wickr  ID ஒன்று வழங்குகிறது.அதனை கொண்டு அனைத்து சேவையையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பயனர்களின் chats,media, contacts எதுமே பார்ப்பதில்லை.தனது சர்வரில் சேமிப்பதும் இல்லை.
Wickr me தனது பாதுகாப்பான சேவையில் தனித்துவமாக உள்ளது. அனைத்து விதமான மெசேஜ் போட்டோஸ்,வீடியோகளை அனுப்பி கொள்ளலாம் மேலும் குரூப் உருவாக்கி கொள்ளலாம்.ஆனால் குரூப்பில் 10நபர்களை மட்டுமே சேர்க்க முடியும்.

4.Wire app
Wire app மிகவும் ரகசியமான மெசேஜிங் செயலி இது அண்ட்ராய்டு, ஐபோன்,மற்றும் கணினியிலும் கிடைக்கிறது.அடிப்படையிலேயே அனைத்து விதமான தகவல் தொடர்புகளும் E2E ENCRYPTION செய்யப்பட்டுள்ளது.இது குரூப் பயனர்கள் தகவல் தொடர்புகளையும் பாதுகாக்கிறது. நீங்கள் நிறுவனம் அல்லது வியாபாரம் சம்பந்தமான தகவல் தொடர்புகளுக்கு இதனை பயன்படுத்தலாம். இது முழுமையான பாதுகாப்பு அளிக்கிறது.
இந்த நிறுவனம் சுவிட்சர்லாந்து மையப்படுத்தி இயங்குகிறது. ஆதலால் ஐரோப்பிய யூனியன் தகவல்தொடர்பு சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுகிறது. இதன் மூலம் பயனர்களின் தகவல்கள் மிகவும் பாதுகாக்கப்படுகிறது.பயனர்களின் குறைந்தபட்ச தகவல்கள் மட்டுமே கேட்கிறது. அதுவும் அடிப்படையான மெசேஜ் சேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துகிறது.

5.Element (Riot) App
Element app முன்பு Riot app என்று அழைக்கப்பட்டது. அனைத்து விதமான தகவல் தொடர்புகளும்  End-to-end encryption செய்யப்பட்டது. இதன்மூலம் அனுப்பியவர் மற்றும் பெறுபவர் மட்டுமே மெசேஜ்களை படிக்க முடியும்.Riot app தனது பெயரை element app என்ற பெயர் மாற்றிய பின்பு மேலும் பயன்படுத்துவதற்கு எளிமையாக மாற்றப்பட்டது.இந்த செயலி மேட்ரிக்ஸ் Matrix நெறிமுறையில் உருவாக்கப்பட்டது.குழு அடிப்படையிலான பயன்பாடுகளுக்கு சிறப்பாக இருக்கும் மேலும் குழுவில் உள்ள அனைவரின் நடவடிக்கைகளும் இதிலுள்ள அம்சங்கள் மூலம் எளிதாக கண்காணிக்க முடியும்.
எந்த அளவிலான மெசேஜ்கள் மற்றும் போட்டோக்கள் மற்றும் வீடியோவாக  இருந்தாலும் அதனை குரூப்பில் ஷேர் செய்யலாம்.மேலும் அனைத்து வடிவிலான கோப்புகளையும் அனுமதிக்கிறது. நீங்கள் எந்தவிதமான வியாபாரங்கள் செய்தாலும் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.




Post a Comment

Previous Post Next Post